1. {#2கித்தீத் என்ற இசைக் கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்குத் தந்த தாவீதின் சங்கீதம் } [QS]எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உமது நாமம் பூமியின் எல்லா இடத்திலும் மிகுந்த அற்புதமானது! [QE][QS2]விண்ணுலகிலும் உமது நாமம் உமக்குத் துதிகளைக் கொண்டு வருகிறது. [QE][PBR]
2. [QS]பிள்ளைகள், குழந்தைகள் வாயிலுமிருந்து உம்மைத் துதிக்கும் பாடல்கள் வெளிப்படும். [QE][QS2]உம் பகைவரை அமைதிப்படுத்த இவ்வல்லமையான பாடல்களைக் கொடுத்தீர். [QE][PBR]
3. [QS]கர்த்தாவே, உமது கைகளால் நீர் செய்த வானங்களை நான் கண்டேன். [QE][QS2]நீர் படைத்த நிலாவையும், நட்சத்திரங்களையும் நான் கண்டு ஆச்சரியமடைந்தேன். [QE]
4. [QS]ஏன் மனிதர்கள் உமக்கு முக்கியமாயினர்? [QE][QS2]ஏன் அவர்களை நீர் நினைவுகூருகிறீர்? [QE][QS2]ஏன் அவர்களைக் கவனிக்கிறீர்? [QE][PBR]
5. [QS]ஆனால் மனிதர்கள் உமக்கு முக்கியமாயினர்! [QE][QS2]அவர்களை ஏறக்குறைய தேவர்களைப் போலவே உண்டாக்கினீர். [QE][QS2]மனிதரை மகிமையாலும், மேன்மையாலும் முடிசூட்டினீர். [QE]
6. [QS]நீர் உண்டாக்கின எல்லாவற்றிற்கும் அவர்களை அதிகாரிகளாக வைத்தீர். [QE]
7. [QS]ஆடுகள்,பசுக்கள், காட்டு மிருகங்கள் அனைத்தையும் மனிதர்கள் ஆண்டனர். [QE]
8. [QS]வானத்துப் பறவைகளையும் [QE][QS2]சமுத்திரத்தில் நீந்தும் மீன்களையும் அவர்கள் ஆண்டனர். [QE]
9. [QS]எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உமது நாமம் உலகத்தில் எங்கும் மிகவும் மிகவும் அற்புதமானது! [QE]