1. {#2ஆசாபின் துதிப் பாடல்களுள் ஒன்று } [QS]தேவனே, சில ஜனங்கள் மற்ற நாடுகளிலிருந்து உமது ஜனங்களோடு போரிட வந்தார்கள். [QE][QS2]அந்த ஜனங்கள் உமது பரிசுத்த ஆலயத்தை அழித்தார்கள். [QE][QS2]அவர்கள் எருசலேமைப் பாழக்கிச் சென்றார்கள். [QE]
2. [QS]காட்டுப் பறவைகள் உண்ணும்படி பகைவர்கள் உமது ஊழியக்காரனின் சரீரங்களைக் கொடுத்தார்கள். [QE][QS2]உம்மைப் பின்பற்றுவோரின் சரீரங்களைக் காட்டு விலங்குகள் உண்ணும்படி விட்டுச்சென்றார்கள். [QE]
3. [QS]தேவனே, இரத்தம் தண்ணீராகப் பெருக்கெடுத்தோடும் வரைக்கும் பகைவன் உமது ஜனங்களைக் கொன்றான். [QE][QS2]மரித்த உடல்களைப் புதைப்பதற்கென ஒருவனும் விட்டு வைக்கப்படவில்லை. [QE]
4. [QS]எங்களைச் சுற்றிலுமுள்ள நாடுகள் எங்களை இழிவுப்படுத்தின. [QE][QS2]எங்களைச் சூழ வாழ்ந்த ஜனங்கள் எங்களை மனம் நோகச்செய்தனர். [QE]
5. [QS]தேவனே, என்றென்றும் எங்களோடு கோபம்கொள்வீரா? [QE][QS2]உமது ஆழ்ந்த உணர்ச்சிகள் தொடர்ந்து நெருப்பைப் போல் எரியுமா? [QE]
6. [QS]தேவனே, உம்மை அறியாத தேசங்களின் மீது உமது கோபத்தைத் திருப்பும். [QE][QS2]உமது நாமத்தை தொழுதுகொள்ளாத தேசங்களின்மீது உமது கோபத்தைத் திருப்பும். [QE]
7. [QS]அத்தேசங்கள் யாக்கோபை அழித்தன. [QE][QS2]அவர்கள் யாக்கோபின் நாட்டை அழித்தார்கள். [QE]
8. [QS]தேவனே, எங்கள் முற்பிதாக்களின் பாவத்திற்காக எங்களைத் தண்டியாதேயும். [QE][QS2]விரையும், எங்களுக்கு உமது இரக்கத்தைக் காட்டும்! [QE][QS2]நீர் எங்களுக்கு மிகவும் தேவையானவர்! [QE]
9. [QS]எங்கள் மீட்பராகிய தேவனே, எங்களுக்கு உதவும்! [QE][QS2]எங்களுக்கு உதவும்! எங்களைக் காப்பாற்றும்! [QE][QS]உமது நாமத்துக்கு அது மகிமையை தரும். [QE][QS2]உமது நாமத்தின் நன்மைக்காக எங்கள் பாவங்களை அழித்துவிடும். [QE]
10. [QS]பிறதேசங்கள் எங்களிடம், “உங்கள் தேவன் எங்கே? [QE][QS2]அவர் உங்களுக்கு உதவக் கூடாதா?” என்று கேட்கவிடாதேயும். [QE][QS]தேவனே, நாங்கள் பார்க்கும்படி அவர்களைத் தண்டியும். [QE][QS2]உமது பணியாட்களைக் கொன்றதற்காக அவர்களைத் தண்டியும். [QE]
11. [QS]சிறைப்பட்டவர்களின் துன்பக் குரலை நீர் கேளும்! [QE][QS2]தேவனே, உமது மிகுந்த வல்லமையைப் பயன்படுத்தி மரணத்திற்கென்று தேர்ந்து கொண்ட அந்த ஜனங்களைக் காப்பாற்றும். [QE]
12. [QS]தேவனே, எங்களைச் சுற்றிலும் வாழும் ஜனங்கள் எங்களுக்குச் செய்ததைப் பார்க்கிலும் [QE][QS2]ஏழு மடங்கு அவர்களைத் தண்டியும். [QE][QS2]உம்மை அவமானப்படுத்தியதற்காய் அவர்களைத் தண்டியும். [QE]
13. [QS]நாங்கள் உமது ஜனங்கள். நாங்கள் உமது மந்தையின் ஆடுகள். [QE][QS2]நாங்கள் உம்மை என்றென்றும் துதிப்போம். [QE][QS2]தேவனே, என்றென்றும் எப்போதும் நாங்கள் உம்மைத் துதிப்போம். [QE]