1. {#2ஆசாபின் ஒரு மஸ்கீல் } [QS]என் ஜனங்களே, என் போதனைகளுக்கு செவிக்கொடுங்கள். [QE][QS2]நான் கூறுவனவற்றைக் கவனித்துக் கேளுங்கள். [QE]
2. [QS]நான் உங்களுக்கு இந்தக் கதையைக் கூறுவேன். [QE][QS2]நான் உங்களுக்கு இப்பழங்கதையைக் கூறுவேன். [QE]
3. [QS]நாங்கள் இக்கதையைக் கேட்டோம், அதை நன்றாக அறிந்தோம். [QE][QS2]எங்கள் தந்தையர் இக்கதையைக் கூறினார்கள். [QE]
4. [QS]நாங்கள் இக்கதையை மறக்கவும்மாட்டோம். [QE][QS2]இறுதி தலைமுறை வரைக்கும் எங்கள் ஜனங்கள் இக்கதையைச் சொல்லிக்கொண்டேயிருப்பார்கள். [QE][QS]நாம் அனைவரும் கர்த்தரைத் துதிப்போம். [QE][QS2]அவர் செய்த அற்புதமான காரியங்களைக் குறித்துச் சொல்வோம். [QE]
5. [QS]கர்த்தர் யாக்கோபோடு ஒரு உடன்படிக்கையைச் செய்தார். [QE][QS2]தேவன் இஸ்ரவேலருக்குச் சட்டத்தை (நீதிமுறையை) கொடுத்தார். [QE][QS]நம் முற்பிதாக்களுக்கு தேவன் கட்டளைகளை அளித்தார். [QE][QS2]தமது பின் சந்ததியினருக்கு அந்தச் சட்டங்களைப் போதிக்குமாறு அவர் நம் முற்பிதாக்களுக்குக் கூறினார். [QE]
6. [QS]புது குழந்தைகள் பிறப்பார்கள், அவர்கள் இனைஞராக வளருவார்கள். [QE][QS2]அவர்கள் அக்கதைகளைத் தங்கள் குழந்தைகளுக்குச் சொல்வார்கள். [QE][QS2]இவ்வகையில் கடைசி தலைமுறையினர் வரைக்கும் எல்லோரும் சட்டத்தை அறிந்திருப்பார்கள். [QE]
7. [QS]எனவே அந்த ஜனங்கள் எல்லோரும் தேவனை நம்புவார்கள். [QE][QS2]தேவன் செய்தவற்றை அவர்கள் மறக்கமாட்டார்கள். [QE][QS2]அவர்கள் கவனமாக அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவார்கள். [QE]
8. [QS]தங்கள் தேவனுடைய கட்டளைகளை ஜனங்கள் அவர்கள் குழந்தைகளுக்குச் சொல்வார்களானால், அந்தக் குழந்தைகள் அவர்களின் முற்பிதாக்களைப்போல் இருக்கமாட்டார்கள். [QE][QS2]அவர்கள் முற்பிதாக்கள் தேவனுக்கு எதிராகத் திரும்பினார்கள். [QE][QS]அவர்கள் அவருக்குக் கீழ்ப்படிய மறுத்தார்கள். [QE][QS2]அந்த ஜனங்கள் பிடிவாதமாக இருந்தார்கள். [QE][QS2]அவர்கள் தேவ ஆவியானவருக்கு உண்மையாக இருக்கவில்லை. [QE][PBR]
9. [QS]எப்பிராயீமின் மனிதர்கள் ஆயுதங்களைத் தாங்கியிருந்தார்கள், [QE][QS2]ஆனால் அவர்கள் யுத்தத்திலிருந்து ஓடிப்போனார்கள். [QE]
10. [QS]அவர்கள் தேவனோடு செய்த உடன்படிக்கையைப் பின்பற்றவில்லை. [QE][QS2]அவரது போதனைகளுக்குக் கீழ்ப்படிய அவர்கள் மறுத்தார்கள். [QE]
11. [QS]தேவன் செய்த பெரிய காரியங்களை எப்பிராயீமின் மனிதர்கள் மறந்துவிட்டார்கள். [QE][QS2]அவர் காட்டிய அற்புதமான காரியங்களை அவர்கள் மறந்துப்போனார்கள். [QE]
12. [QS]எகிப்தின் சோவானில் தேவன் [QE][QS2]அவர்களின் தந்தையருக்குத் தனது மிகுந்த வல்லமையை வெளிப்படுத்தினார். [QE]
13. [QS]தேவன் செங்கடலைப் பிளந்து ஜனங்களை அதனூடே நடத்திச்சென்றார். [QE][QS2]இருபுறங்களிலும் தண்ணீரானது உறுதியான சுவராய் எழுந்து நின்றது. [QE]
14. [QS]ஒரு உயர்ந்த மேகத்தினால் தேவன் அவர்களை ஒவ்வொரு பகலிலும் வழிநடத்தினர். [QE][QS2]ஒவ்வோர் இரவும் ஒரு நெருப்புத் தூணின் ஒளியினால் தேவன் அவர்களை வழிநடத்தினர். [QE]
15. [QS]பாலைவனத்தின் பாறையை தேவன் பிளந்தார். [QE][QS2]நிலத்தின் ஆழத்திலிருந்து அவர் அந்த ஜனங்களுக்கு தண்ணீரைக் கொடுத்தார். [QE]
16. [QS]கன்மலையிலிருந்து [QE][QS2]ஆறாகப் பெருக்கெடுக்கும் தண்ணீரை தேவன் வரவழைத்தார்! [QE]
17. [QS]ஆனால் ஜனங்கள் தேவனுக்கெதிராகத் தொடர்ந்து பாவம் செய்தனர். [QE][QS2]பாலைவனத்திலும் அவர்கள் மிக உன்னதமான தேவனுக்கெதிராகத் திரும்பினார்கள். [QE]
18. [QS]பின் அந்த ஜனங்கள் தேவனை சோதிக்க விரும்பினார்கள். [QE][QS2]தங்கள் இச்சையை நிறைவேற்றிக் கொள்வதற்காக அவர்கள் தேவனிடம் உணவைக் கேட்டார்கள். [QE]
19. [QS]அவர்கள் தேவனைக்குறித்து முறையிட்டு, [QE][QS2]“பாலைவனத்தில் தேவன் நமக்கு உணவைக் கொடுக்கக்கூடுமா? [QE]
20. [QS]தேவன் பாறையை அடித்தார், பெருவெள்ளம் வெளிப்பட்டது. [QE][QS2]நிச்சயமாக, அவர் நமக்கு ரொட்டியும் (அப்பமும்) இறைச்சியும் கொடுக்க முடியும்” என்றார்கள். [QE]
21. [QS]அந்த ஜனங்கள் கூறியவற்றை கர்த்தர் கேட்டார். [QE][QS2]யாக்கோபிடம் தேவன் கோபமடைந்தார். [QE][QS2]தேவன் இஸ்ரவேலிடம் கோபமடைந்தார். [QE]
22. [QS]ஏனெனில் ஜனங்கள் அவரை நம்பவில்லை. [QE][QS2]தேவன் அவர்களைக் காக்கக்கூடுமென அவர்கள் நம்பவில்லை. [QE]
23. [QS](23-24)ஆனால் தேவன் மேலேயுள்ள மேகங்களைத் திறந்தார். [QE][QS2]உணவுக்கான மன்னா அவர்கள் மீது பொழிந்தது. [QE][QS]வானில் கதவுகள் திறக்கப்பட்டு வானிலுள்ள கிடங்கிலிருந்து [QE][QS2]தானியங்கள் கீழே கொட்டினாற்போல காட்சி தந்தது. [QE]
24.
25. [QS]தேவதூதர்களின் உணவை ஜனங்கள் உண்டார்கள். [QE][QS2]அவர்கள் திருப்தியடையும்வரை தேவன் மிகுதியான உணவை அனுப்பினார். [QE]
26. [QS](26-27)தேவன் கிழக்கிலிருந்து ஒரு பெருங்காற்று வீசுமாறு செய்தார். [QE][QS2]காடைகள் மழையைப்போன்று அவர்கள் மீது வீழ்ந்தன. [QE][QS]தேமானிலிருந்து தேவன் காற்றை வீசச்செய்தார். [QE][QS2]பறவைகள் மிகுதியாக இருந்தமையால் நீல வானம் இருண்டது. [QE]
27.
28. [QS]பாளையத்தின் நடுவே [QE][QS2]கூடாரங்களைச் சுற்றிலும் அப்பறவைகள் வீழ்ந்தன. [QE]
29. [QS]அவர்களுக்கு உண்பதற்கு மிகுதியான உணவு இருந்தது. [QE][QS2]ஆனால் தங்களின் பசியால் தாங்களே பாவம் செய்யும்படி தங்களை அவர்கள் ஆட்படுத்திக்கொண்டார்கள். [QE]
30. [QS]அவர்கள் தங்கள் பசியை அடக்கிக்கொள்ளவில்லை. [QE][QS2]எனவே அவர்கள் பறவைகளின் இரத்தம் வடிந்து போகும்வரை காத்திராது அக்காடைகளை உண்டார்கள். [QE]
31. [QS]தேவன் அந்த ஜனங்களிடம் மிகவும் கோபங்கொண்டார். [QE][QS2]அவர்களில் பலரைக் கொன்றுபோட்டார். [QE][QS2]பல ஆரோக்கியமான இளைஞர்கள் இறக்கும்படி செய்தார். [QE]
32. [QS]ஆனால் ஜனங்களோ இன்னும் பாவம் செய்தார்கள்! [QE][QS2]தேவன் செய்ய வல்ல அற்புதமான காரியங்களை அவர்கள் சார்ந்திருக்கவில்லை. [QE]
33. [QS]எனவே தேவன் அவர்கள் பயனற்ற வாழ்க்கையைச் [QE][QS2]சில அழிவுகளினால் முடிவுறச் செய்தார். [QE]
34. [QS]தேவன் சிலரைக் கொன்றபோது மற்றோர் அவரைப் பின்பற்றினார்கள். [QE][QS2]அவர்கள் தேவனுக்குப் பின்னே விரைந்தோடி வந்தார்கள். [QE]
35. [QS]தேவனே அவர்கள் கன்மலையென்று அந்த ஜனங்கள் நினைவுக்கூர்ந்தார்கள். [QE][QS2]மிக உன்னதமான தேவன் அவர்களைக் காப்பாற்றினார் என்பதை நினைத்து பார்த்தார்கள். [QE]
36. [QS]அவர்கள் அவரை நேசித்ததாக கூறினார்கள், ஆனால் பொய் கூறினார்கள். [QE][QS2]அவர்கள் உறுதியாக இருக்கவில்லை. [QE]
37. [QS]அவர்கள் இருதயங்கள் உண்மையாகவே தேவனோடு இருக்கவில்லை. [QE][QS2]ஆண்டவர் அவர்களோடு செய்த உடன்படிக்கைக்கு நம்பிக்கைக்குரியவர்களாக நடந்துக்கொள்ளவில்லை. [QE]
38. [QS]ஆனால் தேவன் இரக்கமுள்ளவராயிருந்தார். [QE][QS2]அவர்கள் பாவங்களுக்காக அவர் அவர்களை மன்னித்தார். [QE][QS]அவர் அவர்களை அழிக்கவில்லை. பலமுறை தேவன் அவரது கோபத்தை அடக்கிக் கொண்டார். [QE][QS2]தேவன் தாம் மிகுந்த கோபமடையாதபடி பார்த்துக்கொண்டார். [QE]
39. [QS]அவர்கள் ஜனங்களே என்பதை தேவன் நினைவுக்கூர்ந்தார். [QE][QS2]ஜனங்கள் வீசும் காற்றைப் போன்றவர்கள், பின்பு அது மறைந்துப்போகும். [QE]
40. [QS]ஓ! அந்த ஜனங்கள் பாலைவனத்தில் தேவனுக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தினார்கள்! [QE][QS2]அவருக்கு மிகுந்த விசனமடையச் செய்தார்கள். [QE]
41. [QS]மீண்டும் மீண்டும் அந்த ஜனங்கள் தேவனுடைய பொறுமையை சோதித்தார்கள். [QE][QS2]இஸ்ரவேலின் பரிசுத்தரை அவர்கள் உண்மையாகவே புண்படுத்தினார்கள். [QE]
42. [QS]தேவனுடைய வல்லமையை அந்த ஜனங்கள் மறந்துவிட்டார்கள். [QE][QS2]பகைவரிடமிருந்து பலமுறை தேவன் அவர்களைக் காத்தார் என்பதை அவர்கள் மறந்தார்கள். [QE]
43. [QS]எகிப்தில் ஆண்டவர் நடத்திய அற்புதங்களையும், [QE][QS2]சோவானின் களங்களில் (வயல்களில்) நடந்த அற்புதங்களையும் அவர்கள் மறந்தார்கள். [QE]
44. [QS]தேவன் ஆறுகளை இரத்தமாக்கினார். [QE][QS2]எகிப்தியர்கள் அந்த தண்ணீரைப் பருக முடியவில்லை. [QE]
45. [QS]தேவன் கூட்டமாக வண்டுகளை அனுப்பினார், அவை எகிப்தியரைக் கடித்தன. [QE][QS2]தேவன் தவளைகளை அனுப்பினார். அவை எகிப்தியரின் வாழ்க்கையைக் கெடுத்தன. [QE]
46. [QS]தேவன் அவர்கள் பயிர்களைப் புழு பூச்சிகளுக்குக் கொடுத்தார். [QE][QS2]அவர்களின் பிற தாவரங்களை வெட்டுக்கிளிகளுக்குக் கொடுத்தார். [QE]
47. [QS]தேவன் அவர்களின் திராட்சைக் கொடிகளைக் கல்மழையால் அழித்தார். [QE][QS2]அவர்களின் மரங்களை அழிக்கப் பெருங்கல் மழையைப் பயன்படுத்தினார். [QE]
48. [QS]கல்மழையால் தேவன் அவர்கள் விலங்குகளைக் கொன்றார். [QE][QS2]அவர்கள் மந்தைகள் (ஆடு, மாடுகள்) மின்னலால் தாக்குண்டு மடிந்தன. [QE]
49. [QS]தேவன் எகிப்தியருக்கு அவரது கோபத்தைக் காண்பித்தார். [QE][QS2]அவர்களுக்கு எதிராக அழிக்கும் தேவதூதர்களை அனுப்பினார். [QE]
50. [QS]தேவன் தமது கோபத்தைக் காட்ட ஒரு வழியைக் கண்டார். [QE][QS2]அவர் அந்த ஜனங்கள் வாழ அனுமதிக்கவில்லை. [QE][QS2]கொடிய நோயால் அவர்கள் மடியச் செய்தார். [QE]
51. [QS]எகிப்தின் முதற்பேறான ஆண் குழந்தைகளை தேவன் கொன்றார். [QE][QS2]காமின் குடும்பத்தில் முதற்பேறான எல்லாவற்றையும் அவர் கொன்றார். [QE]
52. [QS]அப்போது தேவன் இஸ்ரவேலரை ஒரு மேய்ப்பனைப்போல் வழிநடத்தினார். [QE][QS2]அவர் தமது ஜனங்களை மந்தைகளைப் போல் பாலைவனத்தினூடே வழிநடத்திச் சென்றார். [QE]
53. [QS]அவர் தமது ஜனங்களைப் பத்திரமாக வழி காட்டி நடத்தினார். [QE][QS2]தேவனுடைய ஜனங்கள் அஞ்ச வேண்டியது எதுவுமில்லை. [QE][QS2]தேவன் அவர்களது பகைவர்களைச் செங்கடலில் அமிழச் செய்தார். [QE]
54. [QS]தேவன் அவரது ஜனங்களை அவரது பரிசுத்த தேசத்திற்கு வழிநடத்தினார். [QE][QS2]தமது வல்லமையால் எடுத்துக்கொண்ட மலைக்கு அவர்களை அழைத்துச் சென்றார். [QE]
55. [QS]பிற தேசத்தினரை அந்நாட்டிலிருந்து போகும்படியாக தேவன் கட்டாயப்படுத்தினார். [QE][QS2]தேவன் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தேசத்தில் அவரவர்களின் பங்கைக் கொடுத்தார். [QE][QS2]தேவன் ஒவ்வொரு இஸ்ரவேல் கோத்திரத்தினருக்கும் வசிப்பதற்கு வீட்டைத் தந்தார். [QE]
56. [QS]ஆனால் அவர்கள் மிக உன்னதமான தேவனை சோதித்து அவரை விசனத்திற்குள்ளாக்கினார்கள். [QE][QS2]அந்த ஜனங்கள் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவில்லை. [QE]
57. [QS]இஸ்ரவேலர் தேவனிடமிருந்து விலகிச் சென்றார்கள். அவர்கள் தந்தையர் செய்தாற்போன்று அவர்கள் அவருக்கெதிராகத் திரும்பினார்கள். [QE][QS2]எறியும் வில்லைப்போன்று அவர்கள் தங்கள் போக்கினை மாற்றிக்கொண்டார்கள். [QE]
58. [QS]இஸ்ரவேலர் உயர்ந்த பீடங்களைக் கட்டி, தேவனை கோபமடையச் செய்தார்கள். [QE][QS2]அவர்கள் பொய் தெய்வங்களுக்குச் சிலைகளை எழுப்பி, தேவனை பொறாமை அடையச் செய்தார்கள். [QE]
59. [QS]தேவன் இதைக் கேட்டு மிகுந்த கோபமடைந்தார். [QE][QS2]அவர் இஸ்ரவேலரை முற்றிலும் தள்ளினார். [QE]
60. [QS]தேவன் சீலோவிலுள்ள பரிசுத்தக் கூடாரத்தை விட்டு நீக்கினார். [QE][QS2]ஜனங்களோடு கூட தேவன் அக்கூடாரத்தில் வாழ்ந்திருந்தார். [QE]
61. [QS]பிற தேசங்கள் அவரது ஜனங்களைச் சிறை பிடிக்க, தேவன் அனுமதித்தார். [QE][QS2]பகைவர்கள் தேவனுடைய “அழகிய நகையை” எடுத்துக்கொண்டார்கள். [QE]
62. [QS]தேவன் அவரது ஜனங்களுக்கெதிராகத் தமது கோபத்தைக் காட்டினார். [QE][QS2]அவர்கள் போரில் கொல்லப்படும்படியாக அனுமதித்தார். [QE]
63. [QS]இளைஞர்கள் மரணமடையும்படியாக எரிக்கப்பட்டார்கள். [QE][QS2]அவர்கள் மணக்க வேண்டிய இளம் பெண்கள் திருமணப்பாடல் எதையும் பாடவில்லை. [QE]
64. [QS]ஆசாரியர்கள் கொல்லப்பட்டார்கள். [QE][QS2]ஆனால் அவர்களின் விதவைகள் அவர்களுக்காக அழவில்லை. [QE]
65. [QS]இறுதியாக, தூக்கத்திலிருந்து விழித்தெழும் ஒரு மனிதனைப்போல நம் ஆண்டவர் எழுந்திருந்தார். [QE][QS2]அவர் மிகுதியாகத் திராட்சைரசத்தைப் பருகிய வீரனைப்போல காணப்பட்டார். [QE]
66. [QS]தேவன் தமது பகைவர்களை பின்வாங்கச் செய்து, அவர்களை முறியடித்தார். [QE][QS2]தேவன் தமது பகைவர்களைத் தோற்கடித்து, என்றென்றும் அவர்கள் அவமானமுறும்படி செய்தார். [QE]
67. [QS]ஆனால் தேவன் யோசேப்பின் குடும்பத்தை நிராகரித்தார். [QE][QS2]எப்பிராயீமின் குடும்பத்தாரை தேவன் ஏற்கவில்லை. [QE]
68. [QS]இல்லை, தேவன் யூதாவின் கோத்திரத்தினரைத் தேர்ந்தெடுத்தார். [QE][QS2]தேவன், தாம் நேசிக்கும் சீயோன் மலையைத் தேர்ந்துக் கொண்டார். [QE]
69. [QS]அம்மலையின் மேல் உயரத்தில் தேவன் அவரது பரிசுத்த ஆலயத்தைக் கட்டினார். [QE][QS2]பூமியைப் போல என்றென்றும் இருக்கும்படியாக தேவன் அவரது பரிசுத்த ஆலயத்தைக் கட்டினார். [QE]
70. [QS]தனது விசேஷ பணியாளாக தேவன் தாவீதைத் தேர்ந்தெடுத்தார். [QE][QS2]தாவீது ஆட்டுத் தொழுவங்களைக் காத்துக்கொண்டிருந்தான். [QE][QS2]ஆனால் தேவன் அவனை அப்பணியிலிருந்து அகற்றினார். [QE]
71. [QS]தாவீது மந்தை ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். [QE][QS2]ஆனால் தேவன் அவனை அவ்வேலையிலிருந்து அகற்றினார். [QE][QS]தேவன் அவரது ஜனங்களைக் கவனிக்கும் வேலையை தாவீதுக்குக் கொடுத்தார். [QE][QS2]தேவனுடைய சொத்தாகிய யாக்கோபின் ஜனங்களையும் இஸ்ரவேலரின் ஜனங்களையும் கவனிக்கும் பொறுப்பை அவனுக்கு அளித்தார். [QE]
72. [QS]தாவீது அவர்களை பரிசுத்த இருதயத்தோடும், [QE][QS2]மிகுந்த ஞானத்தோடும் வழிநடத்தினான். [QE]