1. {எதுதூன் என்னும் இராகத் தலைவனுக்கு ஆசாபின் பாடல்களுள் ஒன்று} [PS] தேவனே நோக்கி உதவிக்காக நான் உரக்கக் கூப்பிடுகிறேன். [QBR2] தேவனே, நான் உம்மிடம் ஜெபிக்கிறேன். [QBR2] நான் சொல்வதைக் கேளும். [QBR]
2. என் ஆண்டவரே, தொல்லைகள் வரும்போது நான் உம்மிடம் வருகிறேன். [QBR2] இரவு முழுவதும் நான் உம்மை நெருங்க முயன்றேன். [QBR2] என் ஆத்துமா ஆறுதல் அடைய மறுத்தது. [QBR]
3. நான் தேவனைப்பற்றி நினைக்கிறேன், [QBR2] நான் உணரும் விதத்தை அவருக்குச் சொல்ல முயல்கிறேன், ஆனால் என்னால் முடியவில்லை. [QBR]
4. நீர் என்னை உறங்கவொட்டீர். [QBR2] நான் ஏதோ சொல்ல முயன்றேன், ஆனால் மிகவும் வருத்தமடைந்தேன். [QBR]
5. நான் நீண்ட காலத்தில் நடந்ததைப்பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன். [QBR2] முற்காலத்தில் நிகழ்ந்தவற்றைப்பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன். [QBR]
6. இரவில், எனது பாடல்களைப்பற்றி நினைக்க முயல்கிறேன். [QBR2] நான் என்னோடு பேசி, புரிந்துகொள்ள முயல்கிறேன். [QBR]
7. நான், “எங்கள் ஆண்டவர் என்றைக்கும் எங்களை விட்டு விலகிவிட்டாரா? [QBR2] மீண்டும் அவர் எப்போதும் நம்முடன் மகிழ்ச்சியோடு இருப்பாரா? [QBR]
8. தேவனுடைய அன்பு என்றென்றும் விலகிவிட்டதா? [QBR2] அவர் நம்மோடு மீண்டும் பேசுவாரா? [QBR]
9. இரக்கம் என்னெவென்பதை தேவன் மறந்துவிட்டாரா? [QBR2] அவரது நீடிய பொறுமை கோபமாயிற்றா?” என்று வியக்கிறேன்.
10. பின்பு நான், “என்னை உண்மையிலேயே பாதிப்பது இது. [QBR2] ‘மிக உன்னதமான தேவன்’ அவரது வல்லமையை இழந்துவிட்டாரா?” என எண்ணினேன்.
11. கர்த்தர் செய்தவற்றை நான் நினைவுகூருகிறேன். [QBR2] தேவனே, நீர் முற்காலத்தில் செய்த அற்புதமான காரியங்களை நான் நினைவுகூருகிறேன். [QBR]
12. நீர் செய்தவற்றைக்குறித்து யோசித்தேன். [QBR2] அக்காரியங்களை நான் நினைத்தேன். [QBR]
13. தேவனே, உமது வழிகள் பரிசுத்தமானவை. [QBR2] தேவனே, உம்மைப்போன்று உயர்ந்தவர் (மேன்மையானவர்) எவருமில்லை. [QBR]
14. அற்புதமானக் காரியங்களைச் செய்த தேவன் நீரே. [QBR2] நீர் ஜனங்களுக்கு உமது மிகுந்த வல்லமையைக் காண்பித்தீர். [QBR]
15. உமது வல்லமையால் உமது ஜனங்களைக் காத்தீர். [QBR2] நீர் யாக்கோபையும் யோசேப்பின் சந்ததியினரையும் காத்தீர்.
16. தேவனே, தண்ணீர் உம்மைக் கண்டு பயந்தது. [QBR2] ஆழமான தண்ணீர் பயத்தால் நடுங்கிற்று. [QBR]
17. கருமேகங்கள் தண்ணீரைப் பொழிந்தன. [QBR2] உயர்ந்த மேகங்களில் உரத்த இடிமுழக்கத்தை ஜனங்கள் கேட்டார்கள். [QBR2] அப்போது மின்னல்களாகிய உமது அம்புகள் மேகங்களினூடே பிரகாசித்தன. [QBR]
18. உரத்த இடிமுழக்கங்கள் உண்டாயின. [QBR2] உலகத்தை மின்னல் ஒளியால் நிரப்பிற்று. [QBR2] பூமி அதிர்ந்து நடுங்கிற்று. [QBR]
19. தேவனே, நீர் ஆழமான தண்ணீரில் (வெள்ளத்தில்) நடந்து சென்றீர். [QBR2] நீர் ஆழமான கடலைக் கடந்தீர். [QBR2] ஆனால் உமது பாதச்சுவடுகள் அங்குப் பதியவில்லை. [QBR]
20. உமது ஜனங்களை மந்தைகளைப்போல் வழி நடத்துவதற்கு [QBR2] நீர் மோசேயையும் ஆரோனையும் பயன்படுத்தினீர். [PE]