1. {#2இசைக் கருவிகளை இசைக்கும் இசைத் தலைவனுக்கு ஆசாப் அளித்த துதிப்பாடல் } [QS]யூதாவின் ஜனங்கள் தேவனை அறிவார்கள். [QE][QS2]இஸ்ரவேலின் ஜனங்கள் தேவனுடைய நாமத்தை மதிக்கிறார்கள். [QE]
2. [QS]தேவனுடைய ஆலயம் சாலேமில்[* சாலோம் இது எருசலேமுக்கு மற்றொரு பெயர். இப்பெயருக்கு “சமாதானம்” எனப் பொருள்படும். ] இருக்கிறது. [QE][QS2]தேவனுடைய வீடு சீயோன் மலையில் இருக்கிறது. [QE]
3. [QS]அவ்விடத்தில் தேவன் வில்கள், அம்புகள், கேடயங்கள், வாள்கள், [QE][QS2]மற்றும் போர்க்கருவிகளையெல்லாம் உடைத்தெறிந்தார். [QE]
4. [QS]தேவனே, நீர் உமது பகைவர்களை முறியடித்த போது [QE][QS2]மலைகளிலிருந்து மகிமை பொருந்தியவராய் வெளிப்பட்டீர். [QE]
5. [QS]அவர்கள் வலிமையுள்ளவர்கள் என அந்த வீரர்கள் நம்பினார்கள். [QE][QS2]ஆனால் இப்போது அவர்கள் களங்களில் (வயல்களில்) மரித்துக்கிடக்கிறார்கள். [QE][QS]அவர்கள் அணிந்திருந்தவையெல்லாம் அவர்கள் உடம்பிலிருந்து அகற்றப்பட்டன. [QE][QS2]அவ்வலிய வீரர்களில் எவரும் தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியவில்லை. [QE]
6. [QS]யாக்கோபின் தேவன் அவ்வீரர்களிடம் குரல் உயர்த்திக் கண்டித்தார். [QE][QS2]இரதங்களோடும் குதிரைகளோடும் கூடிய அப்படையினர் மரித்து வீழ்ந்தனர். [QE]
7. [QS]தேவனே, நீர் பயங்கரமானவர்! [QE][QS2]நீர் சினமடையும்போது ஒருவனும் உமக்கெதிராக நிற்க முடிவதில்லை. [QE]
8. [QS](8-9)கர்த்தர் நீதிபதியாக இருந்து, அவரது முடிவை அறிவிக்கிறார். [QE][QS2]தேசத்தின் எளிய ஜனங்களை தேவன் மீட்டார். [QE][QS]பரலோகத்திலிருந்து அவர் இம்முடிவைத் தந்தார். [QE][QS2]பூமி முழுவதும் அமைதியாகப் பயத்தோடு காணப்பட்டது. [QE]
9.
10. [QS]தேவனே, நீர் தீயோரைத் தண்டிக்கும்போது ஜனங்கள் உம்மை மதிக்கிறார்கள். [QE][QS2]நீர் உமது கோபத்தை வெளிப்படுத்தும். [QE][QS2]தப்பித்து வாழ்பவர்கள் வலிமையுள்ளோராவர்கள். [QE][PBR]
11. [QS]ஜனங்களே, உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு வாக்குறுதிப் பண்ணினீர்கள். [QE][QS2]இப்போது, வாக்குறுதிப் பண்ணினவற்றை நீங்கள் அவருக்குக் கொடுங்கள். [QE][QS]எல்லா இடங்களிலும் ஜனங்கள் தேவனுக்குப் பயந்து அவரை மதிக்கிறார்கள். [QE][QS2]அவர்கள் அவருக்குப் பரிசுகளைக் கொண்டு வருகிறார்கள். [QE]
12. [QS]தேவன் பெருந்தலைவர்களைத் தோற்கடிக்கிறார். [QE][QS2]பூமியின் எல்லா அரசர்களும் அவருக்குப் பயப்படுகிறார்கள். [QE]