1. {#2“அழிக்காதே” என்னும் பாடலின் இசைத்தலைவனுக்கு ஆசாப் அளித்த துதிப்பாடல்களுள் ஒன்று } [QS]தேவனே, நாங்கள் உம்மைத் துதிக்கிறோம். [QE][QS2]நாங்கள் உம்மைத் துதிக்கிறோம். [QE][QS2]நீர் அருகாமையில் இருக்க, ஜனங்கள் நீர் செய்யும் அற்புதமான காரியங்களைக் குறித்து கூறுகிறார்கள். [QE][PBR]
2. [QS]தேவன் கூறுகிறார்: [QE][QS2]“நியாயத்தீர்ப்பின் காலத்தை நான் தெரிந்தெடுத்திருக்கிறேன். [QE][QS2]நான் தகுந்தபடி நியாயந்தீர்ப்பேன். [QE]
3. [QS]பூமியும் அதிலுள்ள அனைத்தும் நடுங்கி விழும் நிலையில் இருக்கும். [QE][QS2]ஆனால் நான் அதைத் திடமாக இருக்கச் செய்வேன்”. [QE][PBR]
4. [QS](4-5)“சிலர் அதிகமாக பெருமையுள்ளவர்கள், தாங்கள் வலிமை மிக்கவர்கள் என்றும் முக்கியமானவர்கள் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். [QE][QS2]ஆனால் நான் அவர்களிடம் ‘வீம்பு பேசாதீர்கள்!’ [QE][QS2]‘பெருமை பாராட்டாதீர்கள்!’ என்று கூறுவேன்” என்கிறார். [QE]
5.
6. [QS]ஒருவனை முக்கியமானவனாக்கும் வல்லமை [QE][QS2]எதுவும் இப்பூமியில் இல்லை. [QE]
7. [QS]தேவனே நீதிபதி, யார் முக்கியமானவர் என்பதை தேவன் முடிவெடுக்கிறார். [QE][QS2]தேவன் ஒருவனை உயர்த்தி அவனை முக்கியமானவனாக்குகிறார். [QE][QS2]தேவன் மற்றொருவனைத் தாழ்த்தி அவனை முக்கியமற்றவனாக்குகிறார். [QE]
8. [QS]தேவன் தீயோரைத் தண்டிக்கத் தயாராய் இருக்கிறார். [QE][QS2]கர்த்தர் கையில் ஒரு கோப்பை உள்ளது, அக்கோப்பை விஷம் கலந்த திராட்சைரசத்தால் நிரம்பியுள்ளது. [QE][QS]அவர் அத்திராட்சைரசத்தை (தண்டனையை) ஊற்றுவார், [QE][QS2]கடைசித் துளிமட்டும் கெட்டஜனங்கள் அதனைக் குடிப்பார்கள். [QE]
9. [QS]நான் எப்போதும் ஜனங்களுக்கு இவற்றைப்பற்றிக் கூறுவேன். [QE][QS2]இஸ்ரவேலரின் தேவனுக்கு நான் துதிப்பாடுவேன். [QE]
10. [QS]கெட்ட ஜனங்களிடமிருந்து நான் வல்லமையை அகற்றிவிடுவேன். [QE][QS2]நான் நல்ல ஜனங்களுக்கு வல்லமையை அளிப்பேன். [QE]