1. தேவனே, நாங்கள் உம்மைத் துதிக்கிறோம். [QBR2] நாங்கள் உம்மைத் துதிக்கிறோம். [QBR2] நீர் அருகாமையில் இருக்க, ஜனங்கள் நீர் செய்யும் அற்புதமான காரியங்களைக் குறித்து கூறுகிறார்கள்.
2. தேவன் கூறுகிறார்: [QBR2] “நியாயத்தீர்ப்பின் காலத்தை நான் தெரிந்தெடுத்திருக்கிறேன். [QBR2] நான் தகுந்தபடி நியாயந்தீர்ப்பேன். [QBR]
3. பூமியும் அதிலுள்ள அனைத்தும் நடுங்கி விழும் நிலையில் இருக்கும். [QBR2] ஆனால் நான் அதைத் திடமாக இருக்கச் செய்வேன்”.
4. (4-5) “சிலர் அதிகமாக பெருமையுள்ளவர்கள், தாங்கள் வலிமை மிக்கவர்கள் என்றும் முக்கியமானவர்கள் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். [QBR2] ஆனால் நான் அவர்களிடம் ‘வீம்பு பேசாதீர்கள்!’ [QBR2] ‘பெருமை பாராட்டாதீர்கள்!’ என்று கூறுவேன்” என்கிறார். [QBR]
5. ஒருவனை முக்கியமானவனாக்கும் வல்லமை [QBR2] எதுவும் இப்பூமியில் இல்லை. [QBR]
6. தேவனே நீதிபதி, யார் முக்கியமானவர் என்பதை தேவன் முடிவெடுக்கிறார். [QBR2] தேவன் ஒருவனை உயர்த்தி அவனை முக்கியமானவனாக்குகிறார். [QBR2] தேவன் மற்றொருவனைத் தாழ்த்தி அவனை முக்கியமற்றவனாக்குகிறார். [QBR]
7. தேவன் தீயோரைத் தண்டிக்கத் தயாராய் இருக்கிறார். [QBR2] கர்த்தர் கையில் ஒரு கோப்பை உள்ளது, அக்கோப்பை விஷம் கலந்த திராட்சைரசத்தால் நிரம்பியுள்ளது. [QBR] அவர் அத்திராட்சைரசத்தை (தண்டனையை) ஊற்றுவார், [QBR2] கடைசித் துளிமட்டும் கெட்டஜனங்கள் அதனைக் குடிப்பார்கள். [QBR]
8. நான் எப்போதும் ஜனங்களுக்கு இவற்றைப்பற்றிக் கூறுவேன். [QBR2] இஸ்ரவேலரின் தேவனுக்கு நான் துதிப்பாடுவேன். [QBR]
9. கெட்ட ஜனங்களிடமிருந்து நான் வல்லமையை அகற்றிவிடுவேன். [QBR2] நான் நல்ல ஜனங்களுக்கு வல்லமையை அளிப்பேன். [PE]
10.