1. {ஆசாபின் ஒரு மஸ்கீல்} [PS] தேவனே, என்றென்றும் நீர் எங்களைவிட்டு விலகினீரா? [QBR2] உமது ஜனங்களிடம் நீர் இன்னும் கோபமாயிருக்கிறீரா? [QBR]
2. பல்லாண்டுகளுக்கு முன் நீர் வாங்கிய உமது ஜனங்களை நினைவுகூரும். [QBR2] நீர் எங்களை மீட்டீர். நாங்கள் உமக்குச் சொந்தமானவர்கள். [QBR] நீர் வாழ்ந்த இடமாகிய சீயோன் மலையை நினைவுகூரும். [QBR]
3. தேவனே, பழைமையான இந்த இடிபாடுகளுக்கு மத்தியில் நீர் நடந்துவாரும். [QBR2] பகைவன் அழித்த பரிசுத்த இடத்திற்குத் திரும்ப வாரும்.
4. ஆலயத்தில் பகைவர்கள் தங்கள் யுத்த ஆரவாரத்தைச் செய்தார்கள். [QBR2] போரில் தங்கள் வெற்றியைக் குறிப்பதற்கு ஆலயத்தில் அவர்கள் தங்கள் கொடிகளை ஏற்றினார்கள். [QBR]
5. பகைப்படை வீரர்கள் [QBR2] கோடரியால் களைகளை அழிக்கும் ஜனங்களைப் போன்றிருந்தார்கள். [QBR]
6. தேவனே, அவர்கள் தங்கள் கோடாரிகளையும், சம்மட்டிகளையும் பயன்படுத்தி, [QBR2] உமது ஆலயத்தில் மரத்தினாலான சித்திர வேலைப்பாடுகளை நாசம் செய்தார்கள். [QBR]
7. அந்த வீரர்கள் உமது பரிசுத்த இடத்தை எரித்துவிடடார்கள். [QBR2] அந்த ஆலயம் உமது நாமத்தின் மகிமைக்காகக் கட்டப்பட்டது. [QBR2] அவர்கள் அதைத் தரையில் விழும்படி இடித்துத் தள்ளினார்கள். [QBR]
8. பகைவன் எங்களை முழுமையாக அழிக்க முடிவு செய்தான். [QBR2] தேசத்தின் ஒவ்வொரு பரிசுத்த இடத்தையும் அவர்கள் எரித்தார்கள். [QBR]
9. எங்களுக்கான அடையாளங்கள் எதையும் நாங்கள் காண முடியவில்லை. [QBR2] எந்தத் தீர்க்கதரிசிகளும் இங்கு இல்லை. [QBR2] யாருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. [QBR]
10. தேவனே, எத்தனைக் காலம்வரைக்கும் பகைவன் எங்களைப் பரிகாசம் பண்ணுவான்? [QBR2] உமது நாமத்தை அவர்கள் என்றென்றும் இழிவுபடுத்த நீர் அனுமதிப்பீரா? [QBR]
11. தேவனே, நீர் ஏன் எங்களைக் கடுமையாகத் தண்டிக்கிறீர்? [QBR2] நீர் உமது மிகுந்த வல்லமையைப் பயன்படுத்தி, எங்களை முற்றிலும் அழித்துவிட்டீர். [QBR]
12. தேவனே, நீணடகாலம் நீரே எங்கள் அரசராக இருந்தீர். [QBR2] இத்தேசத்தில் பல போர்களில் வெல்ல நீர் எங்களுக்கு உதவினீர். [QBR]
13. தேவனே, நீர் மிகுந்த வல்லமையைப் பயன்படுத்தி [QBR2] செங்கடலைப் பிளக்கச் செய்தீர். [QBR]
14. கடலின் பெரிய விலங்குகளை நீர் தோற்கடித்தீர்! [QBR2] லிவியாதானின் தலைகளை நீர் சிதைத்துப்போட்டீர். [QBR2] பிற விலங்குகள் உண்ணும்படி அதன் உடலை விட்டுவிட்டீர். [QBR]
15. நீர் நீரூற்றுக்களும் நதிகளும் பாயும்படி செய்கிறீர். [QBR2] நதிகள் உலர்ந்து போகும்படியும் செய்கிறீர். [QBR]
16. தேவனே, நீர் பகலை ஆளுகிறீர். [QBR2] நீர் இரவையும் ஆளுகிறீர். நீர் சந்திரனையும் சூரியனையும் உண்டாக்கினீர். [QBR]
17. பூமியிலுள்ள ஒவ்வொன்றிற்கும் நீர் எல்லையை வகுத்தீர். [QBR2] நீர் கோடையையும் குளிர் காலத்தையும் உண்டாக்கினீர். [QBR]
18. தேவனே, இவற்றை நினைவுகூரும். பகைவன் உம்மை இழிவுபடுத்தினான் என்பதை நினைவு கூரும். [QBR2] அம்மூடர்கள் உமது நாமத்தை வெறுக்கிறார்கள். [QBR]
19. அக்கொடிய விலங்குகள் உமது புறாவை எடுத்துக்கொள்ளவிடாதேயும்! [QBR2] என்றென்றும் உமது ஏழை ஜனங்களை மறந்துவிடாதேயும். [QBR]
20. நமது உடன்படிக்கையை நினைவுகூரும்! [QBR2] இத்தேசத்தின் ஒவ்வொரு இருண்ட இடத்திலும் கொடுமை நிகழ்கிறது. [QBR]
21. தேவனே, உமது ஜனங்கள் மோசமாக நடத்தப்பட்டார்கள். [QBR2] இனிமேலும் அவர்கள் துன்புறாதபடி பாரும். உமது திக்கற்ற, ஏழை ஜனங்கள் உம்மைத் துதிப்பார்கள். [QBR]
22. தேவனே, எழுந்து போரிடும்! [QBR2] அம்மூடர்கள் உம்மோடு போட்டியிடுகிறார்கள் என்பதை நினைவுகூரும். [QBR]
23. உமது பகைவர்களின் கூக்குரலை மறவாதேயும். [QBR2] மீண்டும் மீண்டும் அவர்கள் உம்மை இழிவுப்படுத்தினார்கள். [PE]