தமிழ் சத்தியவேதம்

ஈசி டு ரீட் (ERV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. {ஆசாபின் துதிப்பாடல்} [PS] தேவன் உண்மையாகவே இஸ்ரவேலுக்கு நல்லவர். [QBR2] பரிசுத்த இருதயமுள்ள ஜனங்களுக்கு தேவன் நல்லவர். [QBR]
2. நான் தவறி வீழ்ந்து, [QBR2] பாவம் செய்யத் தொடங்கும் நிலையில் இருந்தேன். [QBR]
3. கெட்ட ஜனங்கள் வெற்றியடைந்ததைக் கண்டேன். [QBR2] பெருமைபாராட்டும் அந்த ஜனங்களைக் கண்டு பொறாமைகொள்ள ஆரம்பித்தேன். [QBR]
4. அந்த ஜனங்கள் ஆரோக்கியமுள்ளவர்கள். [QBR2] வாழ்வதற்கு அவர்கள் போராட வேண்டாம். [QBR]
5. எங்களைப்போல அந்தப் பெருமைக்காரர்கள் தொல்லைப்படுவதில்லை. [QBR2] பிறரைப்போன்று அவர்களுக்குத் தொல்லைகள் இல்லை. [QBR]
6. எனவே அவர்கள் பெருமைமிக்கவர்களாய், வெறுக்கத்தக்கவர்களாய் உள்ளனர். [QBR2] அவர்கள் அணியும் அணிகலன்களையும் அழகிய ஆடைகளையும் போன்று அது விரைவில் கண்டுகொள்ளத்தக்கது. [QBR]
7. தாங்கள் பார்க்கும் எதையும் அந்த ஜனங்கள் விருப்பினால் போய் தங்களுக்கென அதை எடுத்துக்கொள்கின்றனர். [QBR2] தாங்கள் செய்ய நினைப்பவற்றை அவர்கள் செய்து முடிக்கிறார்கள். [QBR]
8. பிறரைப்பற்றிக் கொடிய, தீய காரியங்களை அவர்கள் கூறுகிறார்கள். [QBR2] அவர்கள் பெருமையும் பிடிவாதமும் உடையவர்கள். [QBR2] அவர்கள் எப்போதும் மற்றவர்களிடமிருந்து அனுகூலம் பெறும் வழிகளைத் திட்டமிடுகிறார்கள். [QBR]
9. தங்களைத் தெய்வங்களென்று அப்பெருமைக்காரர்கள் நினைத்துக்கொள்கிறார்கள். [QBR2] பூமியின் அரசர்களென்று அவர்கள் தங்களைக் கருதிக்கொள்கிறார்கள். [QBR]
10. எனவே தேவஜனங்கள் கூட அவர்களிடம் சென்று [QBR2] அவர்கள் கூறுபவற்றைச் செய்கிறார்கள். [QBR]
11. அத்தீயோர், “நாங்கள் செய்து கொண்டிருப்பவற்றை தேவன் அறியார்! [QBR2] உன்னதமான தேவன் அறியார்! என்கிறார்கள்.
12. அப்பெருமைக்காரர்கள் துர்க்குணம் மிக்கவர்கள். [QBR2] ஆனால் அவர்கள் செல்வந்தராகவும், நாளுக்கு நாள் செல்வத்தை பெறுவோராகவும் காணப்படுகிறார்கள். [QBR]
13. எனவே நான் ஏன் என் இருதயத்தைத் தூயதாக்க வேண்டும்? [QBR2] ஏன் நான் எனது கைகளைச் சுத்தமாக வைத்திருக்கவேண்டும்? [QBR]
14. தேவனே, நான் நாள் முழுவதும் துன்புறுகிறேன், [QBR2] ஒவ்வொரு நாள் காலையிலும் நீர் என்னைத் தண்டிக்கிறீர்.
15. தேவனே, நான் இவற்றைக் குறித்துப் பிறரிடம் பேச விரும்பினேன். [QBR2] அப்படிச் செய்தால் உமது ஜனங்களுக்கு நான் துரோகம் செய்தவனாவேன். [QBR]
16. (16-17) இக்காரியங்களைப் புரிந்துகொள்ள நான் மிகவும் முயன்றேன். [QBR2] ஆனால் நான் உமது ஆலயத்திற்குச் செல்லும்வரை இவையனைத்தும் எனக்கு மிகவும்கடினமாயிருந்தன. [QBR] நான் தேவனுடைய ஆலயத்திற்குப் போனேன், [QBR2] அப்போது அதை நான் உணர்ந்துக்கொண்டேன். [QBR]
17.
18. தேவனே, நீர் அந்த ஜனங்களை ஆபத்தான நிலையில் வைத்திருக்கிறீர். [QBR2] விழுந்து அழிவதென்பது அவர்களுக்கு மிகவும் சுலபமானது. [QBR]
19. தொல்லைகள் திடீரென நேரும், அப்போது அப்பெருமைக்காரர்கள் அழிந்துவிடுவார்கள். [QBR2] கொடியக் காரியங்கள் அவர்களுக்கு நேரிடும், அப்போது அவர்கள் அழிந்துப்போவார்கள். [QBR]
20. கர்த்தாவே, நாங்கள் விழித்தெழும்போது மறந்துவிடும் கனவைப்போல அந்த ஜனங்கள் இருப்பார்கள். [QBR2] எங்கள் கனவில் வரும் பெரும் விலங்குகளைப்போல் அந்த ஜனங்கள் மறைந்துபோகும்படி நீர் செய்வீர்.
21. (21-22) நான் மூடனாக இருந்தேன். [QBR2] நான் செல்வத்தைக் குறித்தும் கெட்ட ஜனங்களைக் குறித்தும் எண்ணிக் கலங்கினேன். [QBR] தேவனே, நான் மனங்கலங்கி, உம்மிடம் கோபங்கொண்டேன். [QBR2] மூடத்தனமும் அறியாமையுமுள்ள மிருகத்தைப் போல் நடந்து கொண்டேன். [QBR]
22.
23. எனக்குத் தேவையானவை எல்லாம் என்னிடம் உள்ளன. [QBR2] நான் எப்போதும் உம்மோடிருக்கிறேன். [QBR2] தேவனே, நீர் என் கையைப் பிடித்துக்கொண்டிருக்கிறீர். [QBR]
24. தேவனே, நீர் என்னை வழிநடத்தி, எனக்கு நல்ல போதனையைத் தருவீர். [QBR2] பின்பு என்னை மகிமைக்கு நேராக வழி நடத்துவீர். [QBR]
25. தேவனே, பரலோகத்தில் நீர் எனக்காக இருக்கிறீர். [QBR2] நான் உம்மோடிருக்கையில் இப்பூமியில் எனக்கு என்ன வேண்டும்? [QBR]
26. என் மனமும் சரீரமும் அழிந்துப்போகலாம், [QBR2] ஆனால் நான் நேசிக்கும் கன்மலையாகிய தேவன் எனக்காக இருக்கிறீர். [QBR2] என்றென்றும் எனக்காக தேவன் இருக்கிறீர். [QBR]
27. தேவனே, உம்மை விட்டு விலகும் ஜனங்கள் அழிந்துபோவார்கள். [QBR2] உமக்கு உண்மையாயில்லாத ஜனங்களை நீர் அழித்துவிடுவீர். [QBR]
28. என்னைப் பொருத்தமட்டும், நான் தேவனிடம் வந்திருக்கிறேன், அதுவே எனக்கு நலமானது. [QBR2] என் ஆண்டவராகிய கர்த்தரை என் பாதுகாப்பிடமாக வைத்திருக்கிறேன். [QBR2] தேவனே, நீர் செய்துள்ள எல்லாவற்றையும் குறித்துக் கூற நான் வந்துள்ளேன். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 73 / 150
சங்கீதம் 73:64
ஆசாபின் துதிப்பாடல் 1 தேவன் உண்மையாகவே இஸ்ரவேலுக்கு நல்லவர். பரிசுத்த இருதயமுள்ள ஜனங்களுக்கு தேவன் நல்லவர். 2 நான் தவறி வீழ்ந்து, பாவம் செய்யத் தொடங்கும் நிலையில் இருந்தேன். 3 கெட்ட ஜனங்கள் வெற்றியடைந்ததைக் கண்டேன். பெருமைபாராட்டும் அந்த ஜனங்களைக் கண்டு பொறாமைகொள்ள ஆரம்பித்தேன். 4 அந்த ஜனங்கள் ஆரோக்கியமுள்ளவர்கள். வாழ்வதற்கு அவர்கள் போராட வேண்டாம். 5 எங்களைப்போல அந்தப் பெருமைக்காரர்கள் தொல்லைப்படுவதில்லை. பிறரைப்போன்று அவர்களுக்குத் தொல்லைகள் இல்லை. 6 எனவே அவர்கள் பெருமைமிக்கவர்களாய், வெறுக்கத்தக்கவர்களாய் உள்ளனர். அவர்கள் அணியும் அணிகலன்களையும் அழகிய ஆடைகளையும் போன்று அது விரைவில் கண்டுகொள்ளத்தக்கது. 7 தாங்கள் பார்க்கும் எதையும் அந்த ஜனங்கள் விருப்பினால் போய் தங்களுக்கென அதை எடுத்துக்கொள்கின்றனர். தாங்கள் செய்ய நினைப்பவற்றை அவர்கள் செய்து முடிக்கிறார்கள். 8 பிறரைப்பற்றிக் கொடிய, தீய காரியங்களை அவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் பெருமையும் பிடிவாதமும் உடையவர்கள். அவர்கள் எப்போதும் மற்றவர்களிடமிருந்து அனுகூலம் பெறும் வழிகளைத் திட்டமிடுகிறார்கள். 9 தங்களைத் தெய்வங்களென்று அப்பெருமைக்காரர்கள் நினைத்துக்கொள்கிறார்கள். பூமியின் அரசர்களென்று அவர்கள் தங்களைக் கருதிக்கொள்கிறார்கள். 10 எனவே தேவஜனங்கள் கூட அவர்களிடம் சென்று அவர்கள் கூறுபவற்றைச் செய்கிறார்கள். 11 அத்தீயோர், “நாங்கள் செய்து கொண்டிருப்பவற்றை தேவன் அறியார்! உன்னதமான தேவன் அறியார்! என்கிறார்கள். 12 அப்பெருமைக்காரர்கள் துர்க்குணம் மிக்கவர்கள். ஆனால் அவர்கள் செல்வந்தராகவும், நாளுக்கு நாள் செல்வத்தை பெறுவோராகவும் காணப்படுகிறார்கள். 13 எனவே நான் ஏன் என் இருதயத்தைத் தூயதாக்க வேண்டும்? ஏன் நான் எனது கைகளைச் சுத்தமாக வைத்திருக்கவேண்டும்? 14 தேவனே, நான் நாள் முழுவதும் துன்புறுகிறேன், ஒவ்வொரு நாள் காலையிலும் நீர் என்னைத் தண்டிக்கிறீர். 15 தேவனே, நான் இவற்றைக் குறித்துப் பிறரிடம் பேச விரும்பினேன். அப்படிச் செய்தால் உமது ஜனங்களுக்கு நான் துரோகம் செய்தவனாவேன். 16 (16-17) இக்காரியங்களைப் புரிந்துகொள்ள நான் மிகவும் முயன்றேன். ஆனால் நான் உமது ஆலயத்திற்குச் செல்லும்வரை இவையனைத்தும் எனக்கு மிகவும்கடினமாயிருந்தன. நான் தேவனுடைய ஆலயத்திற்குப் போனேன், அப்போது அதை நான் உணர்ந்துக்கொண்டேன். 17 18 தேவனே, நீர் அந்த ஜனங்களை ஆபத்தான நிலையில் வைத்திருக்கிறீர். விழுந்து அழிவதென்பது அவர்களுக்கு மிகவும் சுலபமானது. 19 தொல்லைகள் திடீரென நேரும், அப்போது அப்பெருமைக்காரர்கள் அழிந்துவிடுவார்கள். கொடியக் காரியங்கள் அவர்களுக்கு நேரிடும், அப்போது அவர்கள் அழிந்துப்போவார்கள். 20 கர்த்தாவே, நாங்கள் விழித்தெழும்போது மறந்துவிடும் கனவைப்போல அந்த ஜனங்கள் இருப்பார்கள். எங்கள் கனவில் வரும் பெரும் விலங்குகளைப்போல் அந்த ஜனங்கள் மறைந்துபோகும்படி நீர் செய்வீர். 21 (21-22) நான் மூடனாக இருந்தேன். நான் செல்வத்தைக் குறித்தும் கெட்ட ஜனங்களைக் குறித்தும் எண்ணிக் கலங்கினேன். தேவனே, நான் மனங்கலங்கி, உம்மிடம் கோபங்கொண்டேன். மூடத்தனமும் அறியாமையுமுள்ள மிருகத்தைப் போல் நடந்து கொண்டேன். 22 23 எனக்குத் தேவையானவை எல்லாம் என்னிடம் உள்ளன. நான் எப்போதும் உம்மோடிருக்கிறேன். தேவனே, நீர் என் கையைப் பிடித்துக்கொண்டிருக்கிறீர். 24 தேவனே, நீர் என்னை வழிநடத்தி, எனக்கு நல்ல போதனையைத் தருவீர். பின்பு என்னை மகிமைக்கு நேராக வழி நடத்துவீர். 25 தேவனே, பரலோகத்தில் நீர் எனக்காக இருக்கிறீர். நான் உம்மோடிருக்கையில் இப்பூமியில் எனக்கு என்ன வேண்டும்? 26 என் மனமும் சரீரமும் அழிந்துப்போகலாம், ஆனால் நான் நேசிக்கும் கன்மலையாகிய தேவன் எனக்காக இருக்கிறீர். என்றென்றும் எனக்காக தேவன் இருக்கிறீர். 27 தேவனே, உம்மை விட்டு விலகும் ஜனங்கள் அழிந்துபோவார்கள். உமக்கு உண்மையாயில்லாத ஜனங்களை நீர் அழித்துவிடுவீர். 28 என்னைப் பொருத்தமட்டும், நான் தேவனிடம் வந்திருக்கிறேன், அதுவே எனக்கு நலமானது. என் ஆண்டவராகிய கர்த்தரை என் பாதுகாப்பிடமாக வைத்திருக்கிறேன். தேவனே, நீர் செய்துள்ள எல்லாவற்றையும் குறித்துக் கூற நான் வந்துள்ளேன்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 73 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References