1. {#2சாலொமோனுக்கு } [QS]தேவனே, அரசனும் உம்மைப்போன்று ஞானமுள்ள முடிவுகளை எடுக்க அவருக்கு உதவும். [QE][QS2]உமது நல்லியல்பை அரசனின் மகனும் அறிந்துகொள்ள உதவும். [QE]
2. [QS]அரசன் உமது ஜனங்களுக்குத் தகுதியான நீதி வழங்க உதவும். [QE][QS2]உமது ஏழை ஜனங்களுக்காக ஞானமுள்ள முடிவுகளை எடுக்க அவனுக்கு உதவும். [QE]
3. [QS]தேசம் முழுவதும் சமாதானமும் நீதியும் நிலவட்டும். [QE]
4. [QS]ஏழைகளுக்கு அரசன் நல்லவனாக இருக்கட்டும். [QE][QS2]திக்கற்றோருக்கு அவன் உதவட்டும். [QE][QS2]அவர்களைத் தாக்குவோரை அவன் தண்டிக்கட்டும். [QE]
5. [QS]சூரியன் ஒளிவிடும் மட்டும், சந்திரன் வானிலுள்ள மட்டும் ஜனங்கள் அரசனுக்குப் பயந்து அவனை மதிப்பார்கள் என நான் நம்புகிறேன். [QE][QS2]என்றென்றும் ஜனங்கள் அவனுக்குப் பயந்து அவனை மதிபார்கள் என நான் நம்புகிறேன். [QE]
6. [QS]வயலில் விழும் மழையைப்போன்றிருக்க அரசனுக்கு உதவும். [QE][QS2]பூமியில் விழும் தூறலைப் போன்றிருக்க அவனுக்கு உதவும். [QE]
7. [QS]அவன் அரசனாக இருக்கும்போது நன்மை மலரட்டும். [QE][QS2]சந்திரன் இருக்கும்மட்டும் சமாதானம் நிலவட்டும். [QE]
8. [QS]ஐபிராத்து நதியிலிருந்து பூமியின் தூரத்து எல்லை வரைக்கும், [QE][QS2]கடலிலிருந்து கடல் வரைக்கும் அவன் அரசு பெருகட்டும். [QE]
9. [QS]பாலைவனத்தில் வாழும் எல்லா ஜனங்களும் அவனுக்குத் தலை வணங்குவார்கள். [QE][QS2]புழுதியில் முகத்தைப் புதைத்து அவன் பகைவர்கள் அவனுக்கு முன்பாக விழுந்து வணங்கட்டும். [QE]
10. [QS]தர்ஷீசின் அரசர்களும் தூரத்துத் தேசங்களின் அரசர்களும் அவனுக்குப் பரிசுகளைக் கொண்டுவரட்டும். [QE][QS2]ஷேபாவிலும், சேபாவிலுமுள்ள அரசர்கள் தங்கள் கப்பத்தை அவனுக்குக் கொண்டுவரட்டும். [QE]
11. [QS]எல்லா அரசர்களும் நமது அரசனை விழுந்து வணங்கட்டும். [QE][QS2]எல்லா தேசங்களும் அவனுக்குச் சேவை செய்யட்டும். [QE]
12. [QS]நமது அரசன் திக்கற்றோருக்கு உதவுகிறார். [QE][QS2]ஏழையான திக்கற்ற ஜனங்களுக்கு நம் அரசன் உதவுகிறார். [QE]
13. [QS]ஏழையான திக்கற்ற ஜனங்கள் நம் அரசனைச் சார்ந்திருப்பார்கள். [QE][QS2]அரசன் அவர்களை உயிரோடு வாழச் செய்கிறார். [QE]
14. [QS]அவர்களைத் துன்புறுத்த முயலும் கொடியோரிடமிருந்து அரசன் அவர்களைக் காப்பாற்றுகிறார். [QE][QS2]அந்த ஏழை ஜனங்களின் உயிர்கள் அரசனுக்கு மிக முக்கியமானவை. [QE]
15. [QS]அரசன் நீடூழி வாழ்க! [QE][QS2]அவர் சேபாவின் பொன்னைப் பெறட்டும். [QE][QS]எப்போதும் அரசனுக்காக ஜெபம் செய்யுங்கள். [QE][QS2]ஒவ்வொரு நாளும் அவரை ஆசீர்வதியுங்கள். [QE]
16. [QS]வயல் நிலங்கள் மிகுதியான தானியத்தை விளைவிக்கட்டும். [QE][QS2]மலைகளும் பயிர்களால் நிரம்பட்டும். [QE][QS]நிலங்களில் புல் வளர்வது போன்று [QE][QS2]நகரங்கள் ஜனங்களால் நிரம்பட்டும். [QE]
17. [QS]அரசன் என்றென்றும் புகழ்பெறட்டும். [QE][QS2]சூரியன் ஒளிவிடும்மட்டும் ஜனங்கள் அவர் நாமத்தை நினைவுகூரட்டும். [QE][QS]ஜனங்கள் அவரால் ஆசீர்வதிக்கப்படட்டும். [QE][QS2]அவர்கள் எல்லோரும் அவரை வாழ்த்தட்டும். [QE][PBR]
18. [QS]இஸ்ரவேலரின் தேவனாகிய, கர்த்தராகிய தேவனைத் துதியுங்கள். [QE][QS2]தேவன் ஒருவரே அத்தகைய அற்புதமான காரியங்களைச் செய்யமுடியும். [QE]
19. [QS]அவரது மகிமைபொருந்திய நாமத்தை என்றென்றும் துதியுங்கள்! [QE][QS2]அவரது மகிமை முழு உலகத்தையும் நிரப்பட்டும்! ஆமென், ஆமென்! [QE]
20. [QS]ஈசாயின் மகனாகிய தாவீதின் ஜெபங்கள் இங்கு முடிகின்றன. [QE][PBR]