1. {சாலொமோனுக்கு} [PS] தேவனே, அரசனும் உம்மைப்போன்று ஞானமுள்ள முடிவுகளை எடுக்க அவருக்கு உதவும். [QBR2] உமது நல்லியல்பை அரசனின் மகனும் அறிந்துகொள்ள உதவும். [QBR]
2. அரசன் உமது ஜனங்களுக்குத் தகுதியான நீதி வழங்க உதவும். [QBR2] உமது ஏழை ஜனங்களுக்காக ஞானமுள்ள முடிவுகளை எடுக்க அவனுக்கு உதவும். [QBR]
3. தேசம் முழுவதும் சமாதானமும் நீதியும் நிலவட்டும். [QBR]
4. ஏழைகளுக்கு அரசன் நல்லவனாக இருக்கட்டும். [QBR2] திக்கற்றோருக்கு அவன் உதவட்டும். [QBR2] அவர்களைத் தாக்குவோரை அவன் தண்டிக்கட்டும். [QBR]
5. சூரியன் ஒளிவிடும் மட்டும், சந்திரன் வானிலுள்ள மட்டும் ஜனங்கள் அரசனுக்குப் பயந்து அவனை மதிப்பார்கள் என நான் நம்புகிறேன். [QBR2] என்றென்றும் ஜனங்கள் அவனுக்குப் பயந்து அவனை மதிபார்கள் என நான் நம்புகிறேன். [QBR]
6. வயலில் விழும் மழையைப்போன்றிருக்க அரசனுக்கு உதவும். [QBR2] பூமியில் விழும் தூறலைப் போன்றிருக்க அவனுக்கு உதவும். [QBR]
7. அவன் அரசனாக இருக்கும்போது நன்மை மலரட்டும். [QBR2] சந்திரன் இருக்கும்மட்டும் சமாதானம் நிலவட்டும். [QBR]
8. ஐபிராத்து நதியிலிருந்து பூமியின் தூரத்து எல்லை வரைக்கும், [QBR2] கடலிலிருந்து கடல் வரைக்கும் அவன் அரசு பெருகட்டும். [QBR]
9. பாலைவனத்தில் வாழும் எல்லா ஜனங்களும் அவனுக்குத் தலை வணங்குவார்கள். [QBR2] புழுதியில் முகத்தைப் புதைத்து அவன் பகைவர்கள் அவனுக்கு முன்பாக விழுந்து வணங்கட்டும். [QBR]
10. தர்ஷீசின் அரசர்களும் தூரத்துத் தேசங்களின் அரசர்களும் அவனுக்குப் பரிசுகளைக் கொண்டுவரட்டும். [QBR2] ஷேபாவிலும், சேபாவிலுமுள்ள அரசர்கள் தங்கள் கப்பத்தை அவனுக்குக் கொண்டுவரட்டும். [QBR]
11. எல்லா அரசர்களும் நமது அரசனை விழுந்து வணங்கட்டும். [QBR2] எல்லா தேசங்களும் அவனுக்குச் சேவை செய்யட்டும். [QBR]
12. நமது அரசன் திக்கற்றோருக்கு உதவுகிறார். [QBR2] ஏழையான திக்கற்ற ஜனங்களுக்கு நம் அரசன் உதவுகிறார். [QBR]
13. ஏழையான திக்கற்ற ஜனங்கள் நம் அரசனைச் சார்ந்திருப்பார்கள். [QBR2] அரசன் அவர்களை உயிரோடு வாழச் செய்கிறார். [QBR]
14. அவர்களைத் துன்புறுத்த முயலும் கொடியோரிடமிருந்து அரசன் அவர்களைக் காப்பாற்றுகிறார். [QBR2] அந்த ஏழை ஜனங்களின் உயிர்கள் அரசனுக்கு மிக முக்கியமானவை. [QBR]
15. அரசன் நீடூழி வாழ்க! [QBR2] அவர் சேபாவின் பொன்னைப் பெறட்டும். [QBR] எப்போதும் அரசனுக்காக ஜெபம் செய்யுங்கள். [QBR2] ஒவ்வொரு நாளும் அவரை ஆசீர்வதியுங்கள். [QBR]
16. வயல் நிலங்கள் மிகுதியான தானியத்தை விளைவிக்கட்டும். [QBR2] மலைகளும் பயிர்களால் நிரம்பட்டும். [QBR] நிலங்களில் புல் வளர்வது போன்று [QBR2] நகரங்கள் ஜனங்களால் நிரம்பட்டும். [QBR]
17. அரசன் என்றென்றும் புகழ்பெறட்டும். [QBR2] சூரியன் ஒளிவிடும்மட்டும் ஜனங்கள் அவர் நாமத்தை நினைவுகூரட்டும். [QBR] ஜனங்கள் அவரால் ஆசீர்வதிக்கப்படட்டும். [QBR2] அவர்கள் எல்லோரும் அவரை வாழ்த்தட்டும்.
18. இஸ்ரவேலரின் தேவனாகிய, கர்த்தராகிய தேவனைத் துதியுங்கள். [QBR2] தேவன் ஒருவரே அத்தகைய அற்புதமான காரியங்களைச் செய்யமுடியும். [QBR]
19. அவரது மகிமைபொருந்திய நாமத்தை என்றென்றும் துதியுங்கள்! [QBR2] அவரது மகிமை முழு உலகத்தையும் நிரப்பட்டும்! ஆமென், ஆமென்! [QBR]
20. ஈசாயின் மகனாகிய தாவீதின் ஜெபங்கள் இங்கு முடிகின்றன. [PE]