1. கர்த்தாவே, நான் உம்மை நம்புகிறேன், [QBR2] எனவே நான் என்றும் ஏமாற்றமடையமாட்டேன். [QBR]
2. உமது நல்ல செயலினால், நீர் என்னை மீட்பீர். நீர் என்னைக் காப்பாற்றுவீர். [QBR2] நான் சொல்வதைக் கேளும், என்னை மீட்டருளும். [QBR]
3. பாதுகாப்பிற்காக ஓடிவரக்கூடிய புகலிடமான அரணாக நீர் எனக்கு இரும். [QBR2] நீர் என் கன்மலை என் பாதுகாப்பிடம். [QBR] எனவே என்னைக் காப்பதற்குரிய ஆணையைக் கொடும். [QBR]
4. என் தேவனே, கெட்ட ஜனங்களிடமிருந்து என்னை மீட்டருளும். [QBR2] கொடியோரும் தீயோருமான ஜனங்களிடமிருந்து என்னை மீட்டருளும். [QBR]
5. என் ஆண்டவரே, நீரே என் நம்பிக்கை. [QBR2] நான் சிறுவனாக இருந்தபோதே உம்மை நம்பினேன். [QBR]
6. நான் பிறப்பதற்கு முன்பிருந்தே உம்மையே சார்ந்திருக்கிறேன். [QBR2] என் தாயின் கருவில் இருந்தபோதே நான் உம்மைச் சார்ந்திருந்தேன். [QBR2] நான் உம்மிடம் எப்போதும் ஜெபம் பண்ணினேன். [QBR]
7. நீரே என் பெலத்தின் இருப்பிடம். [QBR2] எனவே நான் பிற ஜனங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டானேன். [QBR]
8. நீர் செய்யும் அற்புதமான காரியங்களைக் குறித்து நான் எப்போதும் பாடிக்கொண்டிருக்கிறேன். [QBR]
9. நான் வயது முதிர்ந்தவனாகிவிட்டதால் என்னைத் தள்ளிவிடாதேயும். [QBR2] என் பெலனை நான் இழக்கையில் என்னை விட்டுவிடாதேயும். [QBR]
10. என் பகைவர்கள் எனக்கெதிராகத் திட்டங்கள் வகுத்தார்கள். [QBR2] அந்த ஜனங்கள் உண்மையிலேயே ஒருமித்துச் சந்தித்தார்கள், அவர்கள் என்னைக் கொல்லத் திட்டமிட்டார்கள். [QBR]
11. என் பகைவர்கள், “போய் அவனைப் பிடியுங்கள்! [QBR2] தேவன் அவனைக் கைவிட்டார். [QBR2] அவனுக்கு ஒருவரும் உதவமாட்டார்கள்” என்றனர். [QBR]
12. தேவனே, நீர் என்னை விட்டு விலகாதேயும்! [QBR2] தேவனே, விரையும்! வந்து என்னைக் காப்பாற்றும்! [QBR]
13. என் பகைவர்களைத் தோற்கடியும்! [QBR2] அவர்களை முழுமையாக அழித்துவிடும். [QBR] அவர்கள் என்னைத் தாக்க முயல்கிறார்கள். [QBR2] அவர்கள் வெட்கமும் இகழ்ச்சியும் அடைவார்கள் என நான் நம்புகிறேன். [QBR]
14. பின் நான் உம்மை எப்போதும் நம்புவேன். [QBR2] நான் உம்மை மென்மேலும் துதிப்பேன். [QBR]
15. நீர் எவ்வளவு நல்லவர் என்பதை நான் ஜனங்களுக்குக் கூறுவேன். [QBR2] நீர் என்னை மீட்ட காலங்களைக் குறித்து நான் ஜனங்களுக்குக் கூறுவேன். [QBR2] எண்ண முடியாத பல காலங்கள் உள்ளன. [QBR]
16. என் ஆண்டவராகிய கர்த்தாவே, உமது பெருமையைப்பற்றி நான் கூறுவேன். [QBR2] உம்மையும் உமது நற்குணங்களையும் நான் பேசுவேன். [QBR]
17. தேவனே, நான் சிறுவனாக இருக்கையிலேயே நீர் எனக்குப் போதித்துள்ளீர். [QBR2] இன்றுவரை நீர் செய்துள்ள அற்புதமான காரியங்களைக் குறித்து நான் ஜனங்களுக்குக் கூறியுள்ளேன். [QBR]
18. இப்போது நான் வயது முதிர்ந்தவன், என் தலைமுடி நரைத்துவிட்டது. [QBR2] ஆனாலும் தேவனே, நீர் என்னை விட்டுவிடமாட்டீர் என்பதை நான் அறிவேன். [QBR2] உமது வல்லமையையும், பெருமையையும் ஒவ்வொரு புதிய தலைமுறையினருக்கும் நான் சொல்லுவேன். [QBR]
19. தேவனே, உமது நன்மை வானங்களுக்கும் மேலாக எட்டுகிறது. [QBR2] தேவனே, உம்மைப் போன்ற தேவன் வேறொருவருமில்லை. [QBR2] நீர் அற்புதமான காரியங்களைச் செய்திருக்கிறீர். [QBR]
20. தொல்லைகளையும் தீயகாலங்களையும் நான் காணச் செய்தீர். [QBR2] ஆனாலும் அவை எல்லாவற்றினின்றும் நீர் என்னை மீட்டு, உயிரோடு வைத்தீர். [QBR2] எத்தனை ஆழத்தில் மூழ்கியும் தொல்லைகளிலிருந்து நீர் என்னைத் தூக்கி நிறுத்தினீர். [QBR]
21. முன்னிலும் பெரியக் காரியங்களைச் செய்ய, நீர் எனக்கு உதவும். [QBR2] தொடர்ந்து எனக்கு ஆறுதல் அளியும். [QBR]
22. வீணையை மீட்டி, நான் உம்மைத் துதிப்பேன். [QBR2] என் தேவனே, நீர் நம்பிக்கைக் குரியவர் என்பதைப் பாடுவேன். [QBR] இஸ்ரவேலின் பரிசுத்தருக்காக, [QBR2] என் சுரமண்டலத்தில் பாடல்களை இசைப்பேன். [QBR]
23. நீர் என் ஆத்துமாவைக் காத்தீர். என் ஆத்துமா மகிழ்ந்திருக்கும். [QBR2] என் உதடுகளால் துதிப்பாடல்களை நான் பாடுவேன். [QBR]
24. எப்போதும் உமது நன்மையை என் நாவு பாடும். [QBR2] என்னைக் கொல்ல விரும்பிய ஜனங்கள், தோற்கடிக்கப்பட்டு இகழ்ச்சி அடைவார்கள். [PE]