1. [QS]கர்த்தாவே, நான் உம்மை நம்புகிறேன், [QE][QS2]எனவே நான் என்றும் ஏமாற்றமடையமாட்டேன். [QE]
2. [QS]உமது நல்ல செயலினால், நீர் என்னை மீட்பீர். நீர் என்னைக் காப்பாற்றுவீர். [QE][QS2]நான் சொல்வதைக் கேளும், என்னை மீட்டருளும். [QE]
3. [QS]பாதுகாப்பிற்காக ஓடிவரக்கூடிய புகலிடமான அரணாக நீர் எனக்கு இரும். [QE][QS2]நீர் என் கன்மலை என் பாதுகாப்பிடம். [QE][QS]எனவே என்னைக் காப்பதற்குரிய ஆணையைக் கொடும். [QE]
4. [QS]என் தேவனே, கெட்ட ஜனங்களிடமிருந்து என்னை மீட்டருளும். [QE][QS2]கொடியோரும் தீயோருமான ஜனங்களிடமிருந்து என்னை மீட்டருளும். [QE]
5. [QS]என் ஆண்டவரே, நீரே என் நம்பிக்கை. [QE][QS2]நான் சிறுவனாக இருந்தபோதே உம்மை நம்பினேன். [QE]
6. [QS]நான் பிறப்பதற்கு முன்பிருந்தே உம்மையே சார்ந்திருக்கிறேன். [QE][QS2]என் தாயின் கருவில் இருந்தபோதே நான் உம்மைச் சார்ந்திருந்தேன். [QE][QS2]நான் உம்மிடம் எப்போதும் ஜெபம் பண்ணினேன். [QE]
7. [QS]நீரே என் பெலத்தின் இருப்பிடம். [QE][QS2]எனவே நான் பிற ஜனங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டானேன். [QE]
8. [QS]நீர் செய்யும் அற்புதமான காரியங்களைக் குறித்து நான் எப்போதும் பாடிக்கொண்டிருக்கிறேன். [QE]
9. [QS]நான் வயது முதிர்ந்தவனாகிவிட்டதால் என்னைத் தள்ளிவிடாதேயும். [QE][QS2]என் பெலனை நான் இழக்கையில் என்னை விட்டுவிடாதேயும். [QE]
10. [QS]என் பகைவர்கள் எனக்கெதிராகத் திட்டங்கள் வகுத்தார்கள். [QE][QS2]அந்த ஜனங்கள் உண்மையிலேயே ஒருமித்துச் சந்தித்தார்கள், அவர்கள் என்னைக் கொல்லத் திட்டமிட்டார்கள். [QE]
11. [QS]என் பகைவர்கள், “போய் அவனைப் பிடியுங்கள்! [QE][QS2]தேவன் அவனைக் கைவிட்டார். [QE][QS2]அவனுக்கு ஒருவரும் உதவமாட்டார்கள்” என்றனர். [QE]
12. [QS]தேவனே, நீர் என்னை விட்டு விலகாதேயும்! [QE][QS2]தேவனே, விரையும்! வந்து என்னைக் காப்பாற்றும்! [QE]
13. [QS]என் பகைவர்களைத் தோற்கடியும்! [QE][QS2]அவர்களை முழுமையாக அழித்துவிடும். [QE][QS]அவர்கள் என்னைத் தாக்க முயல்கிறார்கள். [QE][QS2]அவர்கள் வெட்கமும் இகழ்ச்சியும் அடைவார்கள் என நான் நம்புகிறேன். [QE]
14. [QS]பின் நான் உம்மை எப்போதும் நம்புவேன். [QE][QS2]நான் உம்மை மென்மேலும் துதிப்பேன். [QE]
15. [QS]நீர் எவ்வளவு நல்லவர் என்பதை நான் ஜனங்களுக்குக் கூறுவேன். [QE][QS2]நீர் என்னை மீட்ட காலங்களைக் குறித்து நான் ஜனங்களுக்குக் கூறுவேன். [QE][QS2]எண்ண முடியாத பல காலங்கள் உள்ளன. [QE]
16. [QS]என் ஆண்டவராகிய கர்த்தாவே, உமது பெருமையைப்பற்றி நான் கூறுவேன். [QE][QS2]உம்மையும் உமது நற்குணங்களையும் நான் பேசுவேன். [QE]
17. [QS]தேவனே, நான் சிறுவனாக இருக்கையிலேயே நீர் எனக்குப் போதித்துள்ளீர். [QE][QS2]இன்றுவரை நீர் செய்துள்ள அற்புதமான காரியங்களைக் குறித்து நான் ஜனங்களுக்குக் கூறியுள்ளேன். [QE]
18. [QS]இப்போது நான் வயது முதிர்ந்தவன், என் தலைமுடி நரைத்துவிட்டது. [QE][QS2]ஆனாலும் தேவனே, நீர் என்னை விட்டுவிடமாட்டீர் என்பதை நான் அறிவேன். [QE][QS2]உமது வல்லமையையும், பெருமையையும் ஒவ்வொரு புதிய தலைமுறையினருக்கும் நான் சொல்லுவேன். [QE]
19. [QS]தேவனே, உமது நன்மை வானங்களுக்கும் மேலாக எட்டுகிறது. [QE][QS2]தேவனே, உம்மைப் போன்ற தேவன் வேறொருவருமில்லை. [QE][QS2]நீர் அற்புதமான காரியங்களைச் செய்திருக்கிறீர். [QE]
20. [QS]தொல்லைகளையும் தீயகாலங்களையும் நான் காணச் செய்தீர். [QE][QS2]ஆனாலும் அவை எல்லாவற்றினின்றும் நீர் என்னை மீட்டு, உயிரோடு வைத்தீர். [QE][QS2]எத்தனை ஆழத்தில் மூழ்கியும் தொல்லைகளிலிருந்து நீர் என்னைத் தூக்கி நிறுத்தினீர். [QE]
21. [QS]முன்னிலும் பெரியக் காரியங்களைச் செய்ய, நீர் எனக்கு உதவும். [QE][QS2]தொடர்ந்து எனக்கு ஆறுதல் அளியும். [QE]
22. [QS]வீணையை மீட்டி, நான் உம்மைத் துதிப்பேன். [QE][QS2]என் தேவனே, நீர் நம்பிக்கைக் குரியவர் என்பதைப் பாடுவேன். [QE][QS]இஸ்ரவேலின் பரிசுத்தருக்காக, [QE][QS2]என் சுரமண்டலத்தில் பாடல்களை இசைப்பேன். [QE]
23. [QS]நீர் என் ஆத்துமாவைக் காத்தீர். என் ஆத்துமா மகிழ்ந்திருக்கும். [QE][QS2]என் உதடுகளால் துதிப்பாடல்களை நான் பாடுவேன். [QE]
24. [QS]எப்போதும் உமது நன்மையை என் நாவு பாடும். [QE][QS2]என்னைக் கொல்ல விரும்பிய ஜனங்கள், தோற்கடிக்கப்பட்டு இகழ்ச்சி அடைவார்கள். [QE]