1. {#2ஜனங்கள் நினைவுக்கு உதவும்படியாக இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்களில் ஒன்று. } [QS]தேவனே, என்னை மீட்டருளும்! [QE][QS2]தேவனே விரைந்து எனக்கு உதவும்! [QE]
2. [QS]ஜனங்கள் என்னைக் கொல்ல முயல்கிறார்கள். [QE][QS2]அவர்கள் ஏமாற்றமடையச் செய்யும்! [QE]
3. [QS]ஜனங்கள் என்னை ஏளனம் செய்தார்கள். [QE][QS2]அவர்கள் விழுந்து வெட்கமடைவார்கள் என நம்புகிறேன். [QE]
4. [QS]உம்மைத் தொழுதுகொள்ளும் ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சிக்கொள்வார்கள் என நம்புகிறேன். [QE][QS2]உமது உதவியை வேண்டும் (நாடும்) ஜனங்கள் எப்போதும் உம்மைத் துதிக்க முடியும் என நம்புகிறேன். [QE][PBR]
5. [QS]நான் ஏழையான, உதவியற்ற மனிதன். [QE][QS2]தேவனே, விரைந்து வந்து என்னை மீட்டருளும்! [QE][QS]தேவனே, நீர் மட்டுமே என்னைக் காப்பாற்ற முடியும். [QE][QS2]மிகவும் தாமதியாதேயும்! [QE][PBR]