1. {#2கர்த்தரை நோக்கி தாவீது பாடிய பாடல், பென்யமீன் கோத்திரத்தை சேர்ந்த கீசின் மகனாகிய சவுலைப்பற்றியது இந்தப் பாடல் } [QS]எனது தேவனாகிய கர்த்தாவே, நான் உம்மை நம்புகிறேன். [QE][QS2]என்னைத் துரத்தும் மனிதரிடமிருந்து என்னைக் காப்பாற்றும். [QE][QS2]என்னை மீட்டுக்கொள்ளும்! [QE]
2. [QS]நீர் எனக்கு உதவாவிட்டால், சிங்கத்தால் பிடிக்கப்பட்ட மிருகத்தைப் போலாவேன். [QE][QS2]என்னைக் கவர்ந்து செல்கையில் யாரும் என்னைக் காப்பாற்ற இயலாது! [QE][PBR]
3. [QS]எனது தேவனாகிய கர்த்தாவே, நான் தவறு ஒன்றும் செய்யவில்லை. [QE][QS2]நான் தவறிழைக்க வில்லையென்று உறுதியளிக்கிறேன்! [QE]
4. [QS]என் நண்பர்களுக்கு நான் தீங்கேதும் செய்யவில்லை. [QE][QS2]என் நண்பர்களின் பகைவர்க்கு உதவவுமில்லை. [QE]
5. [QS]ஆனால் ஒரு பகைவன் என்னைத் துரத்துகிறான். [QE][QS2]அவன் என்னைக் கொல்ல ஆவலாயிருக்கிறான். [QE][QS]அவன் என் ஜீவனைத் தரையில் வீழ்த்தி நசுக்க விரும்பி அழுக்குக்குள் என் ஆத்துமாவை அழுத்துகிறான். [QE][PBR]
6. [QS]கர்த்தாவே எழுந்து உமது கோபத்தைக் காட்டும்! [QE][QS2]என் பகைவன் கோபங்கொண்டிருக்கிறான், எழுந்து அவனோடு போர் புரியம். [QE][QS2]கர்த்தாவே, எழுந்து நீதி செய்யும். [QE]
7. [QS]கர்த்தாவே, ஜனங்களை நியாயந்தீரும். [QE][QS2]உம்மைச் சுற்றிலும் தேசங்களை ஒன்று சேரும். [QE]
8. [QS]கர்த்தாவே எனக்கு நியாயம் வழங்கும். [QE][QS2]எனது நேர்மையையும், நான் களங்கமற்றவன் என்பதையும் நிரூபியும். [QE]
9. [QS]தீயோரைத் தண்டியும், நல்லோருக்கு உதவும். [QE][QS2]தேவனே, நீர் நல்லவர். [QE][QS2]நீர் ஜனங்களின் இருதயங்களைப் பார்க்க வல்லவர். [QE][PBR]
10. [QS]நேர்மையான இருதயம் கொண்ட ஜனங்களுக்குத் தேவன் உதவுகிறார். [QE][QS2]தேவன் என்னைப் பாதுகாப்பார். [QE]
11. [QS]தேவன் ஒரு நல்ல நீதிபதி, [QE][QS2]எந்நேரமும் அவர் தீமைக்கு எதிராக தன் கோபத்தைக் காட்டுவார். [QE]
12. [QS]தேவன் ஒரு முடிவெடுத்தால் அவர் அதிலிருந்து மாறுவதில்லை. [QE]
13. [QS]தீய ஜனங்களைத் தண்டிக்க தேவன் ஆயத்தமாயிருக்கிறார்.[* தேவன்...ஆயத்தமாயிருக்கிறார் எழுத்தின் பிரகாரம் “அவர் திரும்பிவிடமாட்டார். அவர் தன் வாளைக் கூர்மைபடுத்துவார். தம் வில்லை வளைத்து குறிபார்ப்பார். மரண ஆயுதத்தைத் தயாரித்திருக்கிறார். நெருப்பு அம்புகளைச் செய்திருக்கிறார்” எனப் பொருள்படும். ] [QE][PBR]
14. [QS]சில ஜனங்கள் எப்போதும் தீயவற்றைத் திட்டமிடுவார்கள். [QE][QS2]அவர்கள் இரகசியமாய் திட்டமிடுவார்கள், பொய்யுரைப்பார்கள். [QE]
15. [QS]அவர்கள் பிறரை வலைக்குட்படுத்தித் துன்புறுத்த முயல்வார்கள். [QE][QS2]ஆனால் தங்கள் வலைகளில் தாங்களே சிக்கித் துன்புறுவார்கள். [QE]
16. [QS]அவர்கள் தங்களுக்கான தண்டனையைப் பெறுவார்கள். [QE][QS2]அவர்கள் பிறரிடம் கொடுமையாய் நடந்துகொண்டனர். [QE][QS2]ஆனால் அவர்களுக்குத் தகுதியானதைப் பெறுவார்கள். [QE][PBR]
17. [QS]கர்த்தர் நல்லவராயிருப்பதால் அவரைத் துதிப்பேன். [QE][QS2]மகா உன்னதமான கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பேன். [QE]