1. தேவனே, எல்லாத் தொல்லைகளிலுமிருந்து என்னைக் காப்பாற்றும். [QBR2] என் வாய்வரை வெள்ளம் நிரம்பியுள்ளது. [QBR]
2. நான் நிற்பதற்கு இடமில்லை. [QBR2] சேற்றுக்குள் அமிழ்ந்துகொண்டிருக்கிறேன். [QBR] ஆழமான தண்ணீரினுள் இருக்கிறேன். [QBR2] அலைகள் என்னைச் சுற்றிலும் மோதிக்கொண்டிருக்கின்றன. [QBR2] நான் அமிழும் நிலையில் உள்ளேன். [QBR]
3. உதவி வேண்டிக் கூப்பிடுவதால் நான் சோர்ந்து போகிறேன். [QBR2] என் தொண்டை புண்ணாகிவிட்டது. [QBR] நான் காத்திருக்கிறேன், என் கண்கள் நோகும்வரை [QBR2] உமது உதவிக்காக நோக்கியிருக்கிறேன். [QBR]
4. என் தலையின் முடிகளைக் காட்டிலும் எனக்கு அதிகமான பகைவர்கள் இருக்கிறார்கள். [QBR2] எக்காரணமுமின்றி அவர்கள் என்னை வெறுக்கிறார்கள். [QBR] என்னை அழிப்பதற்கு அவர்கள் மிகவும் முயன்றார்கள். [QBR2] என் பகைவர்கள் என்னைக் குறித்துப் பொய்களைப் பேசுகிறார்கள். [QBR] நான் திருடியதாக அவர்கள் பொய்களைக் கூறினார்கள். [QBR2] நான் திருடாத பொருள்களுக்கு அபராதம் செலுத்தும்படி அவர்கள் என்னை வற்புறுத்தினார்கள். [QBR]
5. தேவனே, என் பாவங்களை நீர் அறிவீர். [QBR2] நான் உம்மிடமிருந்து எனது பாவங்களை மறைக்க முடியாது. [QBR]
6. என் ஆண்டவரே, சர்வ வல்லமையுள்ள கர்த்தரே, உம்மைப் பின்பற்றுவோர் என்னைக் கண்டு வெட்கப்படாதபடி செய்யும். [QBR2] இஸ்ரவேலின் தேவனே, உம்மைத் தொழுதுகொள்வோர் என்னால் அவமானப்படாதபடிச் செய்யும். [QBR]
7. என் முகம் வெட்கத்தால் மூடப்பட்டிருக்கிறது. [QBR2] உமக்காக இவ்வெட்கத்தை நான் சுமக்கிறேன். [QBR]
8. என் சகோதரர்கள் என்னை ஒரு அந்நியனைப் போல நடத்துகிறார்கள். [QBR2] என் தாயின் பிள்ளைகள் என்னை ஒரு அயல் நாட்டவனைப்போல நடத்துகிறார்கள். [QBR]
9. உமது ஆலயத்தின் மீது கொண்ட என் ஆழ்ந்த உணர்ச்சிகள் என்னை அழித்துக் கொண்டிருக்கின்றன. [QBR2] உம்மைக் கேலி செய்யும் ஜனங்களின் அவதூறுகளை நான் ஏற்கிறேன். [QBR]
10. நான் அழுது, உபவாசம் மேற்கொண்டேன். [QBR2] அவர்கள் என்னைக் கேலி செய்தார்கள். [QBR]
11. துக்கத்தை வெளிப்படுத்துவதற்கு முரட்டு ஆடைகளை உடுத்துகிறேன். [QBR2] ஜனங்கள் என்னைக் குறித்து வேடிக்கை பேசுகிறார்கள். [QBR]
12. பொது இடங்களில் அவர்கள் என்னைப் பற்றிப் பேசுகிறார்கள். [QBR2] குடிக்காரர்கள் என்னைப்பற்றிப் பாடல்களைப் பாடுகிறார்கள். [QBR]
13. ஆனால் இது கர்த்தராகிய உம்மை நோக்கி நான் உமக்காக ஜெபிக்கும் ஜெபம். [QBR2] நீர் என்னை ஏற்றுக்கொள்ள வேண்டுமென விரும்புகிறேன். [QBR] தேவனே, அன்போடு நீர் எனக்குப் பதில் அளிப்பீரென எதிர்ப்பார்க்கிறேன். [QBR2] நான் மீட்படைவதற்கு உம்மீது நம்பிக்கை வைக்க முடியுமென நான் அறிவேன். [QBR]
14. என்னைச் சேற்றிலிருந்து இழுத்து வெளியேற்றும். [QBR2] நான் சேற்றில் அமிழ்ந்து போகாதபடி செய்யும். [QBR] என்னைப் பகைக்கும் ஜனங்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும். [QBR2] ஆழமான தண்ணீரிலிருந்து என்னைக் காப்பாற்றும். [QBR]
15. அலைகள் என்னை அமிழ்த்தாதபடிச் செய்யும். [QBR2] ஆழத்தின் குழி என்னை விழுங்காதபடிச் செய்யும். [QBR2] கல்லறை என் மீது தன் வாயை அடைத்துக்கொள்ளாதபடிச் செய்யும். [QBR]
16. கர்த்தாவே, உமது அன்பு நல்லது. உமது முழுமையான அன்பினால் எனக்குப் பதிலளியும். [QBR2] உமது மிகுந்த தயவினால் என்னிடம் திரும்பி எனக்கு உதவும்! [QBR]
17. உமது பணியாளிடமிருந்து விலகிப் போய்விடாதேயும். [QBR2] நான் தொல்லையில் சிக்கியிருக்கிறேன்! [QBR2] விரைந்து எனக்கு உதவும். [QBR]
18. வந்து, என் ஆத்துமாவைக் காப்பாற்றும். [QBR2] என் பகைவரிடமிருந்து என்னை மீட்டுக்கொள்ளும். [QBR]
19. நான் அடைந்த வெட்கத்தை நீர் அறிந்திருக்கிறீர். [QBR2] என் பகைவர்கள் என்னை அவமானப்படுத்தியதை நீர் அறிகிறீர். [QBR2] அவர்கள் எனக்கு அக்காரியங்களைச் செய்ததை நீர் கண்டீர். [QBR]
20. வெட்கம் என்னை நசுக்கிற்று! [QBR2] வெட்கத்தால் நான் இறக்கும் நிலைக்கு ஆளானேன். [QBR] எனக்காகப் பரிதபிப்பவர்களுக்காகக் காத்திருந்தேன். [QBR2] ஆனால் ஒருவரையும் நான் பார்க்க முடியவில்லை. [QBR] எனக்கு ஆறுதல் கூறுவோருக்காக நான் காத்திருந்தேன். [QBR2] ஆனால் ஒருவரும் வரவில்லை. [QBR]
21. அவர்கள் எனக்கு உணவையல்ல, விஷத்தைக் கொடுத்தார்கள். [QBR2] அவர்கள் எனக்குத் திராட்சை ரசத்தையல்ல, காடியைக் கொடுத்தார்கள். [QBR]
22. அவர்கள் மேசைகள் உணவால் நிரம்பியிருந்தன. [QBR2] ஐக்கிய பந்திக்கான உணவு வகைகள் நிரம்பியிருந்தன. [QBR2] அந்த உணவுகளே அவர்களை அழிக்குமென நம்புகிறேன். [QBR]
23. அவர்கள் குருடாகி, அவர்கள் முதுகுகள் தளர்ந்துபோகும் என நான் நம்புகிறேன். [QBR]
24. உமது கோபத்தை அவர்கள் உணரட்டும். [QBR]
25. அவர்கள் வீடுகள் வெறுமையடையச் செய்யும். [QBR2] யாரும் அங்கு வாழவிடாதேயும். [QBR]
26. அவர்களைத் தண்டியும், அவர்கள் ஓடிப் போவார்கள். [QBR2] அப்போது அவர்கள் பேசிக்கொள்ளும்படியாக அவர்களுக்கு வலியும் காயங்களும் உண்டாகும். [QBR]
27. அவர்கள் செய்த தீய காரியங்களுக்காக அவர்களைத் தண்டியும். [QBR2] நீர் எவ்வளவு நல்லவர் என்பதை அவர்களுக்குக் காட்டாதேயும். [QBR]
28. ஜீவ புத்தகத்திலிருந்து அவர்கள் பெயர்களை எடுத்துப்போடும். [QBR2] நல்லோரின் பெயர்களோடு அவர்கள் பெயர்களை அப்புத்தகத்தில் எழுதாதேயும். [QBR]
29. நான் கவலையும் புண்பட்டவனுமானேன். [QBR2] தேவனே, என்னைத் தூக்கிவிடும், என்னைக் காப்பாற்றும். [QBR]
30. நான் தேவனுடைய நாமத்தைப் பாடல்களால் துதிப்பேன். [QBR2] நான் அவரை நன்றி நிறைந்த பாடல்களால் துதிப்பேன். [QBR]
31. இது தேவனை சந்தோஷப்படுத்தும்! [QBR2] ஒரு காளையைக் கொன்று, அதனை முழுமையாகப் பலி செலுத்துவதைக் காட்டிலும் இது சிறந்தது. [QBR]
32. ஏழை ஜனங்களே, நீங்கள் தேவனைத் தொழுதுகொள்ள வந்தீர்கள். [QBR2] நீங்கள் இக்காரியங்களை அறிந்துக்கொண்டு மகிழ்வீர்கள். [QBR]
33. கர்த்தர் ஏழைகளுக்கும் திக்கற்றோருக்கும் செவிசாய்க்கிறார். [QBR2] சிறைப்பட்ட ஜனங்களையும் கர்த்தர் விரும்புகிறார். [QBR]
34. பரலோகமும், பூமியும் தேவனைத் துதிக் கட்டும். [QBR2] கடலும் அதிலுள்ள அனைத்தும் கர்த்தரைத் துதிக்கட்டும். [QBR]
35. கர்த்தர் சீயோனை மீட்பார். [QBR2] கர்த்தர் யூதாவின் நகரங்களை கட்டியெழுப்புவார். [QBR] நிலத்தின் சொந்தக்காரர்கள் அங்கு மீண்டும் வாழ்வார்கள். [QBR2]
36. அவரது பணியாட்களின் தலைமுறையினர் அத்தேசத்தைப் பெறுவார்கள். [QBR2] அவரது நாமத்தை நேசிக்கும் ஜனங்கள் அங்கு வாழ்வார்கள். [PE]