1. தேவனே, எழுந்து உமது பகைவர்களைச் சிதறடிக்கச் செய்யும். [QBR2] அவனது பகைவர்கள் எல்லோரும் அவனை விட்டு ஓடிப் போகட்டும். [QBR]
2. காற்றால் சிதறடிக்கப்படும் புகையைப் போன்று உமது பகைவர்கள் சிதறுண்டு போகட்டும். [QBR2] நெருப்பில் உருகும் மெழுகைப்போன்று உமது பகைவர்கள் அழிந்துபோகட்டும். [QBR]
3. ஆனால் நல்லோர் மகிழ்ச்சியாயிருப்பார்கள். [QBR2] நல்லோர் தேவனோடுகூட மகிழ்ச்சியாய் காலம் கழிப்பார்கள். [QBR2] நல்லோர் களிப்படைந்து மிகவும் மகிழ்ச்சிக்கொள்வார்கள். [QBR]
4. தேவனை நோக்கிப் பாடுங்கள். [QBR2] அவர் நாமத்தை துதித்துப் பாடுங்கள். [QBR] தேவனுக்கு வழியை உண்டுபண்ணுங்கள். [QBR2] அவர் பாலைவனத்தில் அவரது இரதத்தைச் செலுத்துகிறார். [QBR] அவர் நாமம் யேகோவா [QBR2] அவரது நாமத்தைத் துதியுங்கள். [QBR]
5. அவரது பரிசுத்த ஆலயத்தில், தேவன் அநாதைகளுக்குத் தந்தையைப் போன்றவர். [QBR2] தேவன் விதவைகளைக் கவனித்துக்கொள்கிறார். [QBR]
6. தேவன் தனிமையில் வாழும் ஜனங்களுக்கு வீட்டைக் கொடுக்கிறார். [QBR2] தேவன் அவரது ஜனங்களைச் சிறையிலிருந்து தப்புவிக்கிறார். [QBR] அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியாயிருக்கிறார்கள். [QBR2] ஆனால் தேவனுக்கு எதிராகத் திரும்பும் ஜனங்களோ கொடிய சிறையிலே உழல்வார்கள். [QBR]
7. தேவனே, உமது ஜனங்களை எகிப்திலிருந்து வழிநடத்தினீர். [QBR2] நீர் பாலைவனத்தின் குறுக்காகக் கடந்து சென்றீர். [QBR]
8. பூமி அதிர்ந்தது, [QBR2] இஸ்ரவேலின் தேவன் சீனாய் மலைக்கு வந்தார், வானம் உருகிற்று. [QBR]
9. தேவனே, பயனற்ற பாழ்நிலத்தை மீண்டும் பலன்பெறும்படி செய்வதற்காக [QBR2] மழையைப் பெய்யப்பண்ணினீர். [QBR]
10. உமது ஜனங்கள் அத்தேசத்திற்குத் திரும்பின. [QBR2] தேவனே, அங்கு ஏழைகளுக்குப் பல நல்ல பொருள்கள் கிடைக்கும்படி செய்தீர். [QBR]
11. தேவன் கட்டளையிட்டார், [QBR2] பலர் நற்செய்தியைக் கூறச் சென்றனர். [QBR]
12. “வல்லமையுள்ள அரசர்களின் படைகள் ஓடிப்போயின! [QBR2] வீரர் போருக்குப்பின் தந்த பொருள்களை வீட்டில் பெண்கள் பங்கிட்டனர். [QBR2] வீட்டில் தங்கியிருந்தோர் செல்வத்தைப் பகிர்ந்துகொண்டனர். [QBR]
13. அவர்கள் வெள்ளியால் மூடப்பட்ட (விலை உயர்ந்த நகைகள்.) [QBR2] புறாக்களின் சிறகுகளை பெறுவார்கள். [QBR2] அச்சிறகுகள் பொன்னால் பளபளத்து ஒளிரும்.”
14. சல்மோன் மலையில், பகையரசர்களை தேவன் சிதறடித்தார். [QBR2] அவர்கள் விழும் பனியைப் போலானார்கள். [QBR]
15. பாசான் மலை பல சிகரங்களையுடைய பெரிய மலை. [QBR]
16. பாசான் மலையே, ஏன் சீயோன் மலையை இழிவாகப் பார்க்கிறாய்? [QBR2] தேவன் அம்மலையை (சீயோன்) நேசிக்கிறார். [QBR2] என்றென்றும் வாழும்படி கர்த்தர் அம்மலையைத் தேர்ந்தெடுத்தார். [QBR]
17. பரிசுத்த சீயோன் மலைக்குக் கர்த்தர் வருகிறார். [QBR2] அவரை இலட்சக்கணக்கான இரதங்கள் பின் தொடருகின்றன. [QBR]
18. உயர்ந்த மலையில் அவர் ஏறினார். [QBR2] சிறைப்பட்டோரின் கூட்டத்தை அவர் வழிநடத்தினார். [QBR] எதிராகத் திரும்பியவர்கள் உட்பட, மனிதரிடமிருந்து அவர் பரிசுகளை ஏற்றார். [QBR2] தேவனாகிய கர்த்தர் அங்கு வசிப்பதற்கு ஏறிச்சென்றார். [QBR]
19. கர்த்தரைத் துதியுங்கள்! [QBR2] ஒவ்வொரு நாளும் நாம் சுமக்கவேண்டிய பாரங்களைச் சுமப்பதற்கு அவர் உதவுகிறார். [QBR2] தேவன் நம்மை மீட்கிறார்.
20. அவரே நமது தேவன் அவரே நம்மை மீட்கும் தேவன். [QBR2] நமது தேவனாகிய கர்த்தர் நம்மை மரணத்திலிருந்து காப்பாற்றுகிறார். [QBR]
21. தேவன் அவரது பகைவர்களைத் தோற்கடிக்கிறார் என்பதைக் காட்டுகிறார். [QBR2] அவரை எதிர்த்த ஜனங்களை தேவன் தண்டிக்கிறார். [QBR]
22. என் ஆண்டவர், “பாசானிலிருந்து பகைவனை வரவழைப்பேன். [QBR2] மேற்கிலிருந்து பகைவனை வரவழைப்பேன். [QBR]
23. நீ அவர்களின் இரத்தத்தில் நடப்பாய், [QBR2] உன் நாய்கள் அவர்களின் இரத்தத்தை நக்கும்” என்றார். [QBR]
24. வெற்றி ஊர்வலத்தை தேவன் நடத்திச் செல்வதை பாருங்கள். [QBR2] என் அரசராகிய பரிசுத்த தேவன் வெற்றி ஊர்வலத்தை நடத்திச் செல்வதை ஜனங்கள் காண்பார்கள். [QBR]
25. பாடகர் முன்னால் வீர நடையிட்டுச் செல்வார்கள். [QBR2] பின்னர் தம்புரு மீட்டும் இளம் பெண்கள் வருவார்கள். [QBR2] இசைக் கலைஞர்கள் பின்னே வீர நடையிடுவார்கள். [QBR]
26. சபைக்கூடும் கூட்டத்தில் தேவனைத் துதியுங்கள்! [QBR2] இஸ்ரவேலின் ஜனங்களே, கர்த்தரைத் துதியுங்கள்! [QBR]
27. சின்ன பென்யமீன் அவர்களை வழிநடத்திச் செல்கிறான். [QBR2] அங்கு யூதாவின் பெரிய குடும்பமும் இருக்கிறது. [QBR] அங்கு செபுலோன், நப்தலியின் தலைவர்களும் உள்ளனர்.
28. தேவனே, எங்களுக்கு உமது வல்லமையைக் காட்டும்! [QBR2] கடந்த காலத்தில் எங்களுக்காய் பயன்படுத்தின உமது வல்லமையைக் காட்டும். [QBR]
29. எருசலேமிலுள்ள உமது அரண்மனைக்கு, [QBR2] அரசர்கள் தங்கள் செல்வத்தை உமக்காகக் கொண்டு வருவார்கள். [QBR]
30. நீர் விரும்புவதை அந்த “மிருகங்கள்” செய்யும்படி உமது கோலைப் பயன்படுத்தும். [QBR2] அத்தேசங்களின் “காளைகளும்” “பசுக்களும்” உமக்குக் கீழ்ப்படியச் செய்யும். [QBR] போரில் அத்தேசங்களை நீர் வென்றீர். [QBR2] இப்போது அவர்கள் வெள்ளியை உம்மிடம் கொண்டுவரச்செய்யும். [QBR]
31. எகிப்திலிருந்து அவர்கள் செல்வத்தைக் கொண்டுவரச் செய்யும். [QBR2] தேவனே, எத்தியோப்பியர்கள் அவர்களது செல்வத்தை உம்மிடம் கொண்டு வரச்செய்யும். [QBR]
32. பூமியிலுள்ள அரசர்களே, தேவனைப் பாடுங்கள்! [QBR2] நமது ஆண்டவருக்கு துதிப் பாடல்களைப் பாடுங்கள்!
33. தேவனைப் பாடுங்கள்! பழைய வானங்களினூடே அவர் தமது இரதத்தைச் செலுத்துகிறார். [QBR2] அவரது வல்லமையான குரலுக்குச் செவிக்கொடுங்கள்! [QBR]
34. உங்கள் தெய்வங்களைப் பார்க்கிலும் தேவன் மிகவும் வல்லமையுள்ளவர். [QBR2] இஸ்ரவேலரின் தேவன் தமது ஜனங்களை பெலுமும், வல்லமையும் உள்ளோராக்குகிறார். [QBR]
35. தேவன் அவரது ஆலயத்தில் அதிசயமானவர். [QBR2] இஸ்ரவேலரின் தேவன் அவரது ஜனங்களுக்கு பெலத்தையும், வல்லமையையும் கொடுக்கிறார். [QBR] தேவனைத் துதியுங்கள்! [PE]