தமிழ் சத்தியவேதம்

ஈசி டு ரீட் (ERV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. தேவனே, எழுந்து உமது பகைவர்களைச் சிதறடிக்கச் செய்யும். [QBR2] அவனது பகைவர்கள் எல்லோரும் அவனை விட்டு ஓடிப் போகட்டும். [QBR]
2. காற்றால் சிதறடிக்கப்படும் புகையைப் போன்று உமது பகைவர்கள் சிதறுண்டு போகட்டும். [QBR2] நெருப்பில் உருகும் மெழுகைப்போன்று உமது பகைவர்கள் அழிந்துபோகட்டும். [QBR]
3. ஆனால் நல்லோர் மகிழ்ச்சியாயிருப்பார்கள். [QBR2] நல்லோர் தேவனோடுகூட மகிழ்ச்சியாய் காலம் கழிப்பார்கள். [QBR2] நல்லோர் களிப்படைந்து மிகவும் மகிழ்ச்சிக்கொள்வார்கள். [QBR]
4. தேவனை நோக்கிப் பாடுங்கள். [QBR2] அவர் நாமத்தை துதித்துப் பாடுங்கள். [QBR] தேவனுக்கு வழியை உண்டுபண்ணுங்கள். [QBR2] அவர் பாலைவனத்தில் அவரது இரதத்தைச் செலுத்துகிறார். [QBR] அவர் நாமம் யேகோவா [QBR2] அவரது நாமத்தைத் துதியுங்கள். [QBR]
5. அவரது பரிசுத்த ஆலயத்தில், தேவன் அநாதைகளுக்குத் தந்தையைப் போன்றவர். [QBR2] தேவன் விதவைகளைக் கவனித்துக்கொள்கிறார். [QBR]
6. தேவன் தனிமையில் வாழும் ஜனங்களுக்கு வீட்டைக் கொடுக்கிறார். [QBR2] தேவன் அவரது ஜனங்களைச் சிறையிலிருந்து தப்புவிக்கிறார். [QBR] அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியாயிருக்கிறார்கள். [QBR2] ஆனால் தேவனுக்கு எதிராகத் திரும்பும் ஜனங்களோ கொடிய சிறையிலே உழல்வார்கள். [QBR]
7. தேவனே, உமது ஜனங்களை எகிப்திலிருந்து வழிநடத்தினீர். [QBR2] நீர் பாலைவனத்தின் குறுக்காகக் கடந்து சென்றீர். [QBR]
8. பூமி அதிர்ந்தது, [QBR2] இஸ்ரவேலின் தேவன் சீனாய் மலைக்கு வந்தார், வானம் உருகிற்று. [QBR]
9. தேவனே, பயனற்ற பாழ்நிலத்தை மீண்டும் பலன்பெறும்படி செய்வதற்காக [QBR2] மழையைப் பெய்யப்பண்ணினீர். [QBR]
10. உமது ஜனங்கள் அத்தேசத்திற்குத் திரும்பின. [QBR2] தேவனே, அங்கு ஏழைகளுக்குப் பல நல்ல பொருள்கள் கிடைக்கும்படி செய்தீர். [QBR]
11. தேவன் கட்டளையிட்டார், [QBR2] பலர் நற்செய்தியைக் கூறச் சென்றனர். [QBR]
12. “வல்லமையுள்ள அரசர்களின் படைகள் ஓடிப்போயின! [QBR2] வீரர் போருக்குப்பின் தந்த பொருள்களை வீட்டில் பெண்கள் பங்கிட்டனர். [QBR2] வீட்டில் தங்கியிருந்தோர் செல்வத்தைப் பகிர்ந்துகொண்டனர். [QBR]
13. அவர்கள் வெள்ளியால் மூடப்பட்ட (விலை உயர்ந்த நகைகள்.) [QBR2] புறாக்களின் சிறகுகளை பெறுவார்கள். [QBR2] அச்சிறகுகள் பொன்னால் பளபளத்து ஒளிரும்.”
14. சல்மோன் மலையில், பகையரசர்களை தேவன் சிதறடித்தார். [QBR2] அவர்கள் விழும் பனியைப் போலானார்கள். [QBR]
15. பாசான் மலை பல சிகரங்களையுடைய பெரிய மலை. [QBR]
16. பாசான் மலையே, ஏன் சீயோன் மலையை இழிவாகப் பார்க்கிறாய்? [QBR2] தேவன் அம்மலையை (சீயோன்) நேசிக்கிறார். [QBR2] என்றென்றும் வாழும்படி கர்த்தர் அம்மலையைத் தேர்ந்தெடுத்தார். [QBR]
17. பரிசுத்த சீயோன் மலைக்குக் கர்த்தர் வருகிறார். [QBR2] அவரை இலட்சக்கணக்கான இரதங்கள் பின் தொடருகின்றன. [QBR]
18. உயர்ந்த மலையில் அவர் ஏறினார். [QBR2] சிறைப்பட்டோரின் கூட்டத்தை அவர் வழிநடத்தினார். [QBR] எதிராகத் திரும்பியவர்கள் உட்பட, மனிதரிடமிருந்து அவர் பரிசுகளை ஏற்றார். [QBR2] தேவனாகிய கர்த்தர் அங்கு வசிப்பதற்கு ஏறிச்சென்றார். [QBR]
19. கர்த்தரைத் துதியுங்கள்! [QBR2] ஒவ்வொரு நாளும் நாம் சுமக்கவேண்டிய பாரங்களைச் சுமப்பதற்கு அவர் உதவுகிறார். [QBR2] தேவன் நம்மை மீட்கிறார்.
20. அவரே நமது தேவன் அவரே நம்மை மீட்கும் தேவன். [QBR2] நமது தேவனாகிய கர்த்தர் நம்மை மரணத்திலிருந்து காப்பாற்றுகிறார். [QBR]
21. தேவன் அவரது பகைவர்களைத் தோற்கடிக்கிறார் என்பதைக் காட்டுகிறார். [QBR2] அவரை எதிர்த்த ஜனங்களை தேவன் தண்டிக்கிறார். [QBR]
22. என் ஆண்டவர், “பாசானிலிருந்து பகைவனை வரவழைப்பேன். [QBR2] மேற்கிலிருந்து பகைவனை வரவழைப்பேன். [QBR]
23. நீ அவர்களின் இரத்தத்தில் நடப்பாய், [QBR2] உன் நாய்கள் அவர்களின் இரத்தத்தை நக்கும்” என்றார். [QBR]
24. வெற்றி ஊர்வலத்தை தேவன் நடத்திச் செல்வதை பாருங்கள். [QBR2] என் அரசராகிய பரிசுத்த தேவன் வெற்றி ஊர்வலத்தை நடத்திச் செல்வதை ஜனங்கள் காண்பார்கள். [QBR]
25. பாடகர் முன்னால் வீர நடையிட்டுச் செல்வார்கள். [QBR2] பின்னர் தம்புரு மீட்டும் இளம் பெண்கள் வருவார்கள். [QBR2] இசைக் கலைஞர்கள் பின்னே வீர நடையிடுவார்கள். [QBR]
26. சபைக்கூடும் கூட்டத்தில் தேவனைத் துதியுங்கள்! [QBR2] இஸ்ரவேலின் ஜனங்களே, கர்த்தரைத் துதியுங்கள்! [QBR]
27. சின்ன பென்யமீன் அவர்களை வழிநடத்திச் செல்கிறான். [QBR2] அங்கு யூதாவின் பெரிய குடும்பமும் இருக்கிறது. [QBR] அங்கு செபுலோன், நப்தலியின் தலைவர்களும் உள்ளனர்.
28. தேவனே, எங்களுக்கு உமது வல்லமையைக் காட்டும்! [QBR2] கடந்த காலத்தில் எங்களுக்காய் பயன்படுத்தின உமது வல்லமையைக் காட்டும். [QBR]
29. எருசலேமிலுள்ள உமது அரண்மனைக்கு, [QBR2] அரசர்கள் தங்கள் செல்வத்தை உமக்காகக் கொண்டு வருவார்கள். [QBR]
30. நீர் விரும்புவதை அந்த “மிருகங்கள்” செய்யும்படி உமது கோலைப் பயன்படுத்தும். [QBR2] அத்தேசங்களின் “காளைகளும்” “பசுக்களும்” உமக்குக் கீழ்ப்படியச் செய்யும். [QBR] போரில் அத்தேசங்களை நீர் வென்றீர். [QBR2] இப்போது அவர்கள் வெள்ளியை உம்மிடம் கொண்டுவரச்செய்யும். [QBR]
31. எகிப்திலிருந்து அவர்கள் செல்வத்தைக் கொண்டுவரச் செய்யும். [QBR2] தேவனே, எத்தியோப்பியர்கள் அவர்களது செல்வத்தை உம்மிடம் கொண்டு வரச்செய்யும். [QBR]
32. பூமியிலுள்ள அரசர்களே, தேவனைப் பாடுங்கள்! [QBR2] நமது ஆண்டவருக்கு துதிப் பாடல்களைப் பாடுங்கள்!
33. தேவனைப் பாடுங்கள்! பழைய வானங்களினூடே அவர் தமது இரதத்தைச் செலுத்துகிறார். [QBR2] அவரது வல்லமையான குரலுக்குச் செவிக்கொடுங்கள்! [QBR]
34. உங்கள் தெய்வங்களைப் பார்க்கிலும் தேவன் மிகவும் வல்லமையுள்ளவர். [QBR2] இஸ்ரவேலரின் தேவன் தமது ஜனங்களை பெலுமும், வல்லமையும் உள்ளோராக்குகிறார். [QBR]
35. தேவன் அவரது ஆலயத்தில் அதிசயமானவர். [QBR2] இஸ்ரவேலரின் தேவன் அவரது ஜனங்களுக்கு பெலத்தையும், வல்லமையையும் கொடுக்கிறார். [QBR] தேவனைத் துதியுங்கள்! [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 68 / 150
சங்கீதம் 68:118
1 தேவனே, எழுந்து உமது பகைவர்களைச் சிதறடிக்கச் செய்யும். அவனது பகைவர்கள் எல்லோரும் அவனை விட்டு ஓடிப் போகட்டும். 2 காற்றால் சிதறடிக்கப்படும் புகையைப் போன்று உமது பகைவர்கள் சிதறுண்டு போகட்டும். நெருப்பில் உருகும் மெழுகைப்போன்று உமது பகைவர்கள் அழிந்துபோகட்டும். 3 ஆனால் நல்லோர் மகிழ்ச்சியாயிருப்பார்கள். நல்லோர் தேவனோடுகூட மகிழ்ச்சியாய் காலம் கழிப்பார்கள். நல்லோர் களிப்படைந்து மிகவும் மகிழ்ச்சிக்கொள்வார்கள். 4 தேவனை நோக்கிப் பாடுங்கள். அவர் நாமத்தை துதித்துப் பாடுங்கள். தேவனுக்கு வழியை உண்டுபண்ணுங்கள். அவர் பாலைவனத்தில் அவரது இரதத்தைச் செலுத்துகிறார். அவர் நாமம் யேகோவா அவரது நாமத்தைத் துதியுங்கள். 5 அவரது பரிசுத்த ஆலயத்தில், தேவன் அநாதைகளுக்குத் தந்தையைப் போன்றவர். தேவன் விதவைகளைக் கவனித்துக்கொள்கிறார். 6 தேவன் தனிமையில் வாழும் ஜனங்களுக்கு வீட்டைக் கொடுக்கிறார். தேவன் அவரது ஜனங்களைச் சிறையிலிருந்து தப்புவிக்கிறார். அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியாயிருக்கிறார்கள். ஆனால் தேவனுக்கு எதிராகத் திரும்பும் ஜனங்களோ கொடிய சிறையிலே உழல்வார்கள். 7 தேவனே, உமது ஜனங்களை எகிப்திலிருந்து வழிநடத்தினீர். நீர் பாலைவனத்தின் குறுக்காகக் கடந்து சென்றீர். 8 பூமி அதிர்ந்தது, இஸ்ரவேலின் தேவன் சீனாய் மலைக்கு வந்தார், வானம் உருகிற்று. 9 தேவனே, பயனற்ற பாழ்நிலத்தை மீண்டும் பலன்பெறும்படி செய்வதற்காக மழையைப் பெய்யப்பண்ணினீர். 10 உமது ஜனங்கள் அத்தேசத்திற்குத் திரும்பின. தேவனே, அங்கு ஏழைகளுக்குப் பல நல்ல பொருள்கள் கிடைக்கும்படி செய்தீர். 11 தேவன் கட்டளையிட்டார், பலர் நற்செய்தியைக் கூறச் சென்றனர். 12 “வல்லமையுள்ள அரசர்களின் படைகள் ஓடிப்போயின! வீரர் போருக்குப்பின் தந்த பொருள்களை வீட்டில் பெண்கள் பங்கிட்டனர். வீட்டில் தங்கியிருந்தோர் செல்வத்தைப் பகிர்ந்துகொண்டனர். 13 அவர்கள் வெள்ளியால் மூடப்பட்ட (விலை உயர்ந்த நகைகள்.) புறாக்களின் சிறகுகளை பெறுவார்கள். அச்சிறகுகள் பொன்னால் பளபளத்து ஒளிரும்.” 14 சல்மோன் மலையில், பகையரசர்களை தேவன் சிதறடித்தார். அவர்கள் விழும் பனியைப் போலானார்கள். 15 பாசான் மலை பல சிகரங்களையுடைய பெரிய மலை. 16 பாசான் மலையே, ஏன் சீயோன் மலையை இழிவாகப் பார்க்கிறாய்? தேவன் அம்மலையை (சீயோன்) நேசிக்கிறார். என்றென்றும் வாழும்படி கர்த்தர் அம்மலையைத் தேர்ந்தெடுத்தார். 17 பரிசுத்த சீயோன் மலைக்குக் கர்த்தர் வருகிறார். அவரை இலட்சக்கணக்கான இரதங்கள் பின் தொடருகின்றன. 18 உயர்ந்த மலையில் அவர் ஏறினார். சிறைப்பட்டோரின் கூட்டத்தை அவர் வழிநடத்தினார். எதிராகத் திரும்பியவர்கள் உட்பட, மனிதரிடமிருந்து அவர் பரிசுகளை ஏற்றார். தேவனாகிய கர்த்தர் அங்கு வசிப்பதற்கு ஏறிச்சென்றார். 19 கர்த்தரைத் துதியுங்கள்! ஒவ்வொரு நாளும் நாம் சுமக்கவேண்டிய பாரங்களைச் சுமப்பதற்கு அவர் உதவுகிறார். தேவன் நம்மை மீட்கிறார். 20 அவரே நமது தேவன் அவரே நம்மை மீட்கும் தேவன். நமது தேவனாகிய கர்த்தர் நம்மை மரணத்திலிருந்து காப்பாற்றுகிறார். 21 தேவன் அவரது பகைவர்களைத் தோற்கடிக்கிறார் என்பதைக் காட்டுகிறார். அவரை எதிர்த்த ஜனங்களை தேவன் தண்டிக்கிறார். 22 என் ஆண்டவர், “பாசானிலிருந்து பகைவனை வரவழைப்பேன். மேற்கிலிருந்து பகைவனை வரவழைப்பேன். 23 நீ அவர்களின் இரத்தத்தில் நடப்பாய், உன் நாய்கள் அவர்களின் இரத்தத்தை நக்கும்” என்றார். 24 வெற்றி ஊர்வலத்தை தேவன் நடத்திச் செல்வதை பாருங்கள். என் அரசராகிய பரிசுத்த தேவன் வெற்றி ஊர்வலத்தை நடத்திச் செல்வதை ஜனங்கள் காண்பார்கள். 25 பாடகர் முன்னால் வீர நடையிட்டுச் செல்வார்கள். பின்னர் தம்புரு மீட்டும் இளம் பெண்கள் வருவார்கள். இசைக் கலைஞர்கள் பின்னே வீர நடையிடுவார்கள். 26 சபைக்கூடும் கூட்டத்தில் தேவனைத் துதியுங்கள்! இஸ்ரவேலின் ஜனங்களே, கர்த்தரைத் துதியுங்கள்! 27 சின்ன பென்யமீன் அவர்களை வழிநடத்திச் செல்கிறான். அங்கு யூதாவின் பெரிய குடும்பமும் இருக்கிறது. அங்கு செபுலோன், நப்தலியின் தலைவர்களும் உள்ளனர். 28 தேவனே, எங்களுக்கு உமது வல்லமையைக் காட்டும்! கடந்த காலத்தில் எங்களுக்காய் பயன்படுத்தின உமது வல்லமையைக் காட்டும். 29 எருசலேமிலுள்ள உமது அரண்மனைக்கு, அரசர்கள் தங்கள் செல்வத்தை உமக்காகக் கொண்டு வருவார்கள். 30 நீர் விரும்புவதை அந்த “மிருகங்கள்” செய்யும்படி உமது கோலைப் பயன்படுத்தும். அத்தேசங்களின் “காளைகளும்” “பசுக்களும்” உமக்குக் கீழ்ப்படியச் செய்யும். போரில் அத்தேசங்களை நீர் வென்றீர். இப்போது அவர்கள் வெள்ளியை உம்மிடம் கொண்டுவரச்செய்யும். 31 எகிப்திலிருந்து அவர்கள் செல்வத்தைக் கொண்டுவரச் செய்யும். தேவனே, எத்தியோப்பியர்கள் அவர்களது செல்வத்தை உம்மிடம் கொண்டு வரச்செய்யும். 32 பூமியிலுள்ள அரசர்களே, தேவனைப் பாடுங்கள்! நமது ஆண்டவருக்கு துதிப் பாடல்களைப் பாடுங்கள்! 33 தேவனைப் பாடுங்கள்! பழைய வானங்களினூடே அவர் தமது இரதத்தைச் செலுத்துகிறார். அவரது வல்லமையான குரலுக்குச் செவிக்கொடுங்கள்! 34 உங்கள் தெய்வங்களைப் பார்க்கிலும் தேவன் மிகவும் வல்லமையுள்ளவர். இஸ்ரவேலரின் தேவன் தமது ஜனங்களை பெலுமும், வல்லமையும் உள்ளோராக்குகிறார். 35 தேவன் அவரது ஆலயத்தில் அதிசயமானவர். இஸ்ரவேலரின் தேவன் அவரது ஜனங்களுக்கு பெலத்தையும், வல்லமையையும் கொடுக்கிறார். தேவனைத் துதியுங்கள்!
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 68 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References