1. {#2இராகத் தலைவனுக்கு, ஒரு துதிப்பாடல். } [QS]பூமியிலுள்ள அனைத்தும் தேவனை நோக்கி மகிழ்ச்சியால் ஆர்ப்பரிக்கும். [QE]
2. [QS]அவரது மகிமைமிக்க நாமத்தைத் துதியுங்கள்! [QE][QS2]துதிப்பாடல்களால் அவரைப் பெருமைப்படுத்துங்கள்! [QE]
3. [QS]அவரது வேலைப்பாடுகள் எவ்வளவு அதிசயமானவை என்று தேவனுக்குக் கூறுங்கள்! [QE][QS2]தேவனே, உமது வல்லமை மிகப்பெரியது! [QE][QS]உமது பகைவர்கள் குனிந்து வணங்குவார்கள். [QE][QS2]அவர்கள் உம்மைக் கண்டு அஞ்சுவார்கள். [QE]
4. [QS]உலகம் முழுவதும் உம்மை தொழுதுகொள்ளட்டும். [QE][QS2]ஒவ்வொருவரும் உமது நாமத்தை துதித்துப் பாடட்டும். [QE][PBR]
5. [QS]தேவன் செய்த காரியங்களைப் பாருங்கள்! [QE][QS2]அக்காரியங்கள் நம்மை வியக்கவைக்கும். [QE]
6. [QS]தேவன் கடலை வறண்ட நிலமாக்கினார். [QE][QS2]மகிழ்ச்சியுடைய அவரது ஜனங்கள் நதியைக் கடந்து போனார்கள். [QE]
7. [QS]தேவன், அவரது மிகுந்த வல்லமையயால் உலகத்தை ஆளுகிறார். [QE][QS2]எல்லா இடங்களிலுமுள்ள ஜனங்களை தேவன் கண்ணோக்குகிறார். [QE][QS2]ஒருவனும் அவரை எதிர்த்துப் போராட முடியாது. [QE][PBR]
8. [QS]ஜனங்களே, நம் தேவனைத் துதியுங்கள், [QE][QS2]உரத்த குரலில் துதிப்பாடல்களை அவருக்குப் பாடுங்கள். [QE]
9. [QS]தேவன் நமக்கு உயிரைத் தந்தார். [QE][QS2]தேவன் நம்மைக் காப்பாற்றுகிறார். [QE]
10. [QS]ஜனங்கள் வெள்ளியை நெருப்பிலிட்டுப் பரிசோதிப்பதைப்போல தேவன் நம்மைப் பரிசோதித்தார். [QE]
11. [QS]தேவனே, நீர் எங்களைக் கண்ணியில் விழச் செய்தீர். [QE][QS2]கனமான பாரத்தை நீர் எங்கள் மேல் வைக்கிறீர். [QE]
12. [QS]எங்கள் பகைவர்கள் எங்கள்மீது நடக்க நீர் அனுமதித்தீர். [QE][QS2]நெருப்பின் வழியாகவும் தண்ணீரின் வழியாகவும் நடக்குமாறு எங்களை வழி நடத்தினீர். [QE][QS2]ஆனால் ஒரு பத்திரமான இடத்திற்கு எங்களை அழைத்து வந்தீர். [QE]
13. [QS](13-14)எனவே நான் உமது ஆலயத்திற்குப் பலிகளைக் கொண்டுவருவேன். [QE][QS]நான் தொல்லையில் சிக்குண்டபோது உதவிக்காக உம்மைக் கேட்டேன். [QE][QS2]உமக்குப் பல பொருத்தனைகளைப் பண்ணினேன். [QE][QS]இப்போது, நான் பொருத்தனைப் பண்ணினதை உமக்குக் கொடுக்கிறேன். [QE]
14.
[QS2]15. நான் பாவப்பரிகார பலிகளை உமக்குக் கொடுக்கிறேன். [QE][QS]நான் ஆட்டுக் கடாக்களோடு நறுமணப்பொருட்களைப் புகையிடுவேன். [QE][QS2]நான் உமக்குக் காளைகளையும் செம்மறி ஆடுகளையும் தருவேன். [QE]
16. [QS]தேவனைத் தொழுதுக்கொள்கிற எல்லா ஜனங்களே, வாருங்கள். [QE][QS2]தேவன் எனக்குச் செய்தவற்றை உங்களுக்குக் கூறுவேன். [QE]
17. [QS]நான் அவரிடம் ஜெபித்தேன், நான் அவரைத் துதித்தேன். [QE]
18. [QS]என் இருதயம் தூய்மையாயிருந்தது. [QE][QS2]எனவே என் ஆண்டவர் நான் கூறியவற்றைக் கேட்டார். [QE]
19. [QS]தேவன் நான் கூறியவற்றைக் கேட்டார். [QE][QS2]தேவன் என் ஜெபத்தைக் கேட்டார். [QE]
20. [QS]தேவனைத் துதியுங்கள், [QE][QS2]தேவன் என்னிடம் பாராமுகமாக இருக்கவில்லை, அவர் என் ஜெபத்தைக் கேட்டார். [QE][QS2]தேவன் அவரது அன்பை என்னிடம் காட்டியருளினார். [QE]