1. சீயோனின் தேவனே, நான் உம்மைத் துதிக்கிறேன். [QBR2] நான் வாக்குறுதி பண்ணினவற்றை உமக்குத் தருவேன். [QBR]
2. நீர் செய்த காரியங்களைக் குறித்து நாங்கள் கூறுவோம். [QBR2] நீர் எங்கள் ஜெபங்களைக் கேட்கிறீர். [QBR2] உம்மிடம் வருகிற ஒவ்வொருவரின் ஜெபத்தையும் நீர் கேட்கிறீர். [QBR]
3. எங்கள் பாவங்கள் மிகுந்த பாரமாயிருக்கையில் [QBR2] அப்பாவங்களை நீர் மன்னித்தருளும். [QBR]
4. தேவனே, நீர் உம் ஜனங்களைத் தேர்ந்தெடுத்தீர். [QBR2] நாங்கள் உமது ஆலயத்தில் வந்து தொழுதுகொள்ளுமாறு நீர் எங்களைத் தேர்ந்தெடுத்தீர். [QBR] நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்! [QBR2] உமது பரிசுத்த இடமாகிய உமது ஆயலயத்தில் எல்லா அதிசயக் காரியங்களையும் நாங்கள் பெற்றோம். [QBR]
5. தேவனே, நீர் எங்களைக் காப்பாற்றும். [QBR2] நல்லோர் உம்மிடம் ஜெபம் செய்வார்கள், நீர் அவர்கள் ஜெபத்திற்குப் பதிலளிப்பீர். [QBR] அவர்களுக்குப் பல அதிசயமான காரியங்களைச் செய்வீர். [QBR2] உலகத்தின் பல பாகங்களில் வாழ்வோர் உம்மை நம்புவார்கள். [QBR]
6. தேவன் தமது வல்லமையால் மலைகளை உண்டாக்கினார். [QBR2] அவரது வல்லமையை நம்மை சுற்றிலும் நாம் காண்கிறோம். [QBR]
7. சீறும் கடலைத் தேவன் அமைதியாக்கினார். [QBR2] “சமுத்திரம்” போல ஜனங்களைத் தேவன் பூமியில் உண்டாக்கினார். [QBR]
8. நீர் செய்யும் அதிசயமான காரியங்களைக் கண்டு உலகமெங்கும் வாழும் ஜனங்கள் வியப்படைவார்கள். [QBR2] சூரிய உதயமும், சூரியன் மறைவும் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியூட்டும். [QBR]
9. நீர் நிலத்தைப் பாதுகாக்கிறீர். [QBR2] நீருற்றி, தாவரங்கள் வளர வகைசெய்கிறீர். [QBR] தேவனே, நீர் நீருற்றுகளில் தண்ணீரை நிரப்பி, பயிர்களை வளரச்செய்கிறீர். [QBR2] இவ்வாறு நீர் இதனைச் செய்கிறீர்: [QBR]
10. உழுத நிலங்களில் மழை தண்ணீரை ஊற்றுகிறீர். [QBR2] வயல்களை தண்ணீரால் நனையப் பண்ணுகிறீர். [QBR] நிலத்தை மழையால் மிருதுவாக்குகிறீர். [QBR2] இளம்பயிர்கள் வளர்ந்தோங்கச் செய்கிறீர். [QBR]
11. நல்ல அறுவடையால் புத்தாண்டை ஆரம்பிக்கிறீர். [QBR2] பயிர்களால் வண்டிகளில் பாரமேற்றுகிறீர். [QBR]
12. பாலைவனங்களும் மலைகளும் புற்களால் நிரம்பின. [QBR]
13. புல்வெளிகளில் ஆட்டு மந்தைகள் நிரம்பின. [QBR2] பள்ளத்தாக்குகளில் தானியங்கள் நிரம்பின. [QBR2] ஒவ்வொருவரும் மகிழ்ச்சியால் ஆடிப்பாடிக் கொண்டிருந்தனர். [PE]