1. {#2இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த ஒரு துதிப் பாடல். } [QS]சீயோனின் தேவனே, நான் உம்மைத் துதிக்கிறேன். [QE][QS2]நான் வாக்குறுதி பண்ணினவற்றை உமக்குத் தருவேன். [QE]
2. [QS]நீர் செய்த காரியங்களைக் குறித்து நாங்கள் கூறுவோம். [QE][QS2]நீர் எங்கள் ஜெபங்களைக் கேட்கிறீர். [QE][QS2]உம்மிடம் வருகிற ஒவ்வொருவரின் ஜெபத்தையும் நீர் கேட்கிறீர். [QE]
3. [QS]எங்கள் பாவங்கள் மிகுந்த பாரமாயிருக்கையில் [QE][QS2]அப்பாவங்களை நீர் மன்னித்தருளும். [QE]
4. [QS]தேவனே, நீர் உம் ஜனங்களைத் தேர்ந்தெடுத்தீர். [QE][QS2]நாங்கள் உமது ஆலயத்தில் வந்து தொழுதுகொள்ளுமாறு நீர் எங்களைத் தேர்ந்தெடுத்தீர். [QE][QS]நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்! [QE][QS2]உமது பரிசுத்த இடமாகிய உமது ஆயலயத்தில் எல்லா அதிசயக் காரியங்களையும் நாங்கள் பெற்றோம். [QE]
5. [QS]தேவனே, நீர் எங்களைக் காப்பாற்றும். [QE][QS2]நல்லோர் உம்மிடம் ஜெபம் செய்வார்கள், நீர் அவர்கள் ஜெபத்திற்குப் பதிலளிப்பீர். [QE][QS]அவர்களுக்குப் பல அதிசயமான காரியங்களைச் செய்வீர். [QE][QS2]உலகத்தின் பல பாகங்களில் வாழ்வோர் உம்மை நம்புவார்கள். [QE]
6. [QS]தேவன் தமது வல்லமையால் மலைகளை உண்டாக்கினார். [QE][QS2]அவரது வல்லமையை நம்மை சுற்றிலும் நாம் காண்கிறோம். [QE]
7. [QS]சீறும் கடலைத் தேவன் அமைதியாக்கினார். [QE][QS2]“சமுத்திரம்” போல ஜனங்களைத் தேவன் பூமியில் உண்டாக்கினார். [QE]
8. [QS]நீர் செய்யும் அதிசயமான காரியங்களைக் கண்டு உலகமெங்கும் வாழும் ஜனங்கள் வியப்படைவார்கள். [QE][QS2]சூரிய உதயமும், சூரியன் மறைவும் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியூட்டும். [QE]
9. [QS]நீர் நிலத்தைப் பாதுகாக்கிறீர். [QE][QS2]நீருற்றி, தாவரங்கள் வளர வகைசெய்கிறீர். [QE][QS]தேவனே, நீர் நீருற்றுகளில் தண்ணீரை நிரப்பி, பயிர்களை வளரச்செய்கிறீர். [QE][QS2]இவ்வாறு நீர் இதனைச் செய்கிறீர்: [QE]
10. [QS]உழுத நிலங்களில் மழை தண்ணீரை ஊற்றுகிறீர். [QE][QS2]வயல்களை தண்ணீரால் நனையப் பண்ணுகிறீர். [QE][QS]நிலத்தை மழையால் மிருதுவாக்குகிறீர். [QE][QS2]இளம்பயிர்கள் வளர்ந்தோங்கச் செய்கிறீர். [QE]
11. [QS]நல்ல அறுவடையால் புத்தாண்டை ஆரம்பிக்கிறீர். [QE][QS2]பயிர்களால் வண்டிகளில் பாரமேற்றுகிறீர். [QE]
12. [QS]பாலைவனங்களும் மலைகளும் புற்களால் நிரம்பின. [QE]
13. [QS]புல்வெளிகளில் ஆட்டு மந்தைகள் நிரம்பின. [QE][QS2]பள்ளத்தாக்குகளில் தானியங்கள் நிரம்பின. [QE][QS2]ஒவ்வொருவரும் மகிழ்ச்சியால் ஆடிப்பாடிக் கொண்டிருந்தனர். [QE]