1. {#2இராகத் தலைவனுக்கு தாவீதின் ஒரு பாடல். } [QS]தேவனே நான் கூறுவதைக் கேளும். நான் என் பகைவர்களுக்கு அஞ்சுகிறேன். [QE][QS2]என் ஜீவனைப் பகைவரிடமிருந்து காத்தருளும். [QE]
2. [QS]என் பகைவரின் இரகசிய திட்டங்களிலிருந்து என்னைக் காப்பாற்றும். [QE][QS2]அத்தீய ஜனங்களிடமிருந்து என்னை மறைத்து வையும். [QE]
3. [QS]அவர்கள் என்னைக்குறித்து இழிவான பொய்கள் பலவற்றைக் கூறினார்கள். [QE][QS2]அவர்கள் நாவுகளோ கூரிய வாள்களைப் போன்றவை. [QE][QS2]அவர்களின் கசப்பான வார்த்தைகள் அம்புகளுக்கு ஒப்பானவை. [QE]
4. [QS]அவர்கள் ஒளிந்திருந்து உடனடியாக எவ்வித பயமுமின்றித் தங்கள் அம்புகளை நேர்மையான, [QE][QS2]சாதாரண ஒரு மனிதனை நோக்கி எய்கிறார்கள். [QE]
5. [QS]அவர்கள் ஒவ்வொருவரும் தீங்கு செய்வதற்கு தங்களைத் தாங்களே உற்சாகப்படுத்திக் கொண்டனர். [QE][QS2]அவர்கள் பொய்களைக் கூறி, கண்ணிகளை வைக்கிறார்கள். [QE][QS2]அவர்கள் ஒவ்வொருவரையும் நோக்கி “நாம் கண்ணி வைப்பதை யாரும் பார்க்கமாட்டார்கள்” என்று சொல்லிக்கொள்கிறார்கள். [QE]
6. [QS]அவர்கள் கண்ணிகளை மறைத்து வைத்திருக்கிறார்கள். [QE][QS2]அவர்கள் பலியை எதிர் நோக்கிக்கொண்டிருக்கிறார்கள். [QE][QS]ஜனங்கள் நினைப்பதை அறிவது கடினமானது. [QE]
7. [QS]ஆனால் தேவனும் தமது “அம்புகளை” எய்யக்கூடும்! [QE][QS2]தீயோர் அதை அறிந்துகொள்ளும் முன்னமே காயமுற்றிருப்பார்கள். [QE]
8. [QS]தீயோர் பிறருக்குத் தீயவற்றைச் செய்ய நினைப்பார்கள். [QE][QS2]ஆனால் தேவனால் அவர்கள் திட்டத்தை அழிக்க முடியும். [QE][QS]அத்தீய காரியங்கள் அவர்களுக்கே நிகழுமாறு செய்ய இயலும். [QE][QS2]அவர்களைக் காணும் ஒவ்வொருவரும் ஆச்சரியத்தால் தங்கள் தலைகளை அசைப்பார்கள். [QE]
9. [QS]தேவன் செய்ததை ஜனங்கள் அறிந்துகொள்வார்கள். [QE][QS2]அவரைக் குறித்து அந்த ஜனங்கள் பிறருக்குச் சொல்வார்கள். [QE][QS]அப்போது ஒவ்வொருவரும் தேவனைக் குறித்து அதிகமாக அறிவார்கள். [QE][QS2]தேவனுக்கு அஞ்சி, அவரை மதிக்க அவர்கள் கற்றுக்கொள்வார்கள். [QE]
10. [QS]நால்லோர் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பார்கள். [QE][QS2]அவர்கள் தேவனில் நம்பிக்கைக்கொள்வார்கள். [QE][QS2]நல்லோராகிய நீங்கள் எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள். [QE]