1. {#2நரம்புக் கருவிகளை இசைக்கும் இசைத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்களில் ஒன்று. } [QS]தேவனே, என் ஜெபப் பாடலைக் கேட்டருளும். [QE][QS2]என் ஜெபத்தைக் கேளும். [QE]
2. [QS]நான் எங்கிருந்தாலும், எப்படிச் சோர்ந்து போனாலும் நான் உம்மை உதவிக்குக் கூப்பிடுவேன். [QE][QS2]எட்டாத உயரத்தின் பாதுகாவலான இடத்திற்கு என்னைச் சுமந்து செல்லும். [QE]
3. [QS]நீரே எனக்குப் பாதுகாப்பான இடம்! [QE][QS2]நீரே என் பகைவரிடமிருந்து என்னைக் காக்கும் பலமான கோபுரம். [QE]
4. [QS]நான் என்றென்றும் உம்முடைய கூடாரத்தில் வாழ்ந்திருப்பேன். [QE][QS2]நீர் என்னைப் பாதுகாக்கத்தக்க இடத்தில் நான் ஒளிந்திருப்பேன். [QE][PBR]
5. [QS]தேவனே, நான் உமக்குப் பண்ணின பொருத்தனையைக் கேட்டீர். [QE][QS2]உம்மைத் தொழுதுகொள்வோரின் ஒவ்வொரு பொருளும் உம்மிடமிருந்து வருவதேயாகும். [QE]
6. [QS]அரசனுக்கு நீண்ட ஆயுளைக் கொடும். [QE][QS2]அவர் என்றென்றும் வாழட்டும்! [QE]
7. [QS]அவர் என்றென்றும் தேவனோடு வாழட்டும்! [QE][QS2]உமது உண்மையான அன்பால் அவரைப் பாதுகாத்துக்கொள்ளும். [QE]
8. [QS]நான் என்றைக்கும் உமது நாமத்தைத் துதிப்பேன். [QE][QS2]நான் உமக்குக் கூறிய உறுதி மொழியின்படியே, ஒவ்வொரு நாளும் செய்வேன். [QE]