1. {#2“உடன்படிக்கையின் லில்லி” என்ற பாடலின் இசைத்தலைவனுக்கு தாவீது அளித்த பாடல். இது போதிப்பதற்குரியது. தாவீது ஆராம் நகராயீம், ஆராம் சோபா ஆகிய நாட்டினரோடு யுத்தம் பண்ணிய காலத்தில், யோவாப் திரும்பிவந்து 12,000 ஏதோமிய வீரர்களை உப்புப் பள்ளத்தாக்கில் வெட்டிக் கொன்றபோது பாடியது. } [QS]தேவனே, எங்களோடு சினங்கொண்டீர், எனவே எங்களை நிராகரித்து அழித்தீர். [QE][QS2]தயவாய் எங்களிடம் திரும்பி வாரும். [QE]
2. [QS]நீர் பூமியை அசைத்து அதைப் பிளக்கப் பண்ணினீர். [QE][QS2]நம் உலகம் பிரிந்து விழுந்தது. [QE][QS2]அருள் கூர்ந்து அவற்றை ஒன்றாக இணைத்து விடும். [QE]
3. [QS]நீர் உமது ஜனங்களுக்குப் பல தொல்லைகளை அனுமதித்தீர். [QE][QS2]நாங்களோ தள்ளாடி விழுகின்ற குடிவெறியர்களைப் போலானோம். [QE]
4. [QS]உம்மைத் தொழுதுகொள்ளும் ஜனங்களை நீர் எச்சரித்தீர். [QE][QS2]அவர்கள் இப்போது பகைவனிடமிருந்து தப்பிச்செல்ல முடியும். [QE][PBR]
5. [QS]உமது மிகுந்த வல்லமையைப் பயன்படுத்தி எங்களைக் காப்பாற்றும்! [QE][QS2]என் ஜெபத்திற்குப் பதில் தாரும், நீர் நேசிக்கிற ஜனங்களைக் காப்பாற்றும். [QE][PBR]
6. [QS]தேவன் அவரது ஆலயத்தில் பேசினார்: [QE][QS2]“நான் யுத்தத்தில் வென்று, அவ்வெற்றியால் மகிழ்வேன்! [QE][QS]இந்நாட்டை எனது ஜனங்களோடு பகிர்ந்துகொள்வேன். [QE][QS2]அவர்களுக்கு சீகேமைக் கொடுப்பேன். [QE][QS2]அவர்களுக்கு சுக்கோத் பள்ளத்தாக்கையும் கொடுப்பேன். [QE]
7. [QS]கீலேயாத்தும், மனாசேயும் என்னுடையவை. [QE][QS2]எப்பிராயீம் எனது தலைக்குப் பெலன். [QE][QS2]யூதா என் நியாயத்தின் கோல். [QE]
8. [QS]மோவாப் என் பாதங்களைக் கழுவும் பாத்திரம் [QE][QS2]ஏதோம் என் மிதியடிகளைச் சுமக்கும் அடிமை. [QE][QS2]நான் பெலிஸ்தரை வென்று என் வெற்றியை முழக்கமிடுவேன்!” [QE][PBR]
9. [QS](9-10)தேவனே நீர் எங்களை விட்டு விலகினீர்! [QE][QS2]வலிய, பாதுகாவலான நகரத்திற்குள் யார் என்னை அழைத்துச் செல்வார்? [QE][QS]ஏதோமிற்கு எதிராகப் போர் செய்ய யார் என்னை வழி நடத்துவார்? [QE][QS2]தேவனே, நீர் மட்டுமே எனக்கு உதவக்கூடும். [QE][QS]ஆனால் நீரோ எங்களை விட்டு விலகினீர்! [QE][QS2]நீர் எங்கள் சேனையோடு செல்லவில்லை. [QE]
10.
11. [QS]தேவனே, எங்கள் பகைவரை வெல்ல எங்களுக்கு உதவும்! [QE][QS2]மனிதர்கள் எங்களுக்கு உதவ முடியாது! [QE]
12. [QS]தேவன் மட்டுமே எங்களைப் பலப்படுத்த முடியும். [QE][QS2]தேவன் எங்கள் பகைவர்களை வெல்ல முடியும். [QE]