1. {#2செமினீத்தால் நரம்புக் கருவிகளை இசைப்போரின் இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல் } [QS]கர்த்தாவே, கோபத்தில் என்னைக் கண்டிக்காதிரும். [QE][QS2]என் மீது கோபமடையாமலும் என்னைத் தண்டியாமலும் இரும். [QE]
2. [QS]கர்த்தாவே, என்னிடம் தயவாயிரும். நான் நோயுற்றுத் தளர்ந்தேன். [QE][QS2]என்னைக் குணமாக்கும்! [QE][QS2]என் எலும்புகள் நடுங்குகின்றன. [QE]
3. [QS]என் முழு உடம்பும் நடுங்குகிறது. [QE][QS2]கர்த்தாவே, நீர் என்னைக் குணப்படுத்த எவ்வளவு காலம் நீடிக்கும்? [QE]
4. [QS]கர்த்தாவே, என்னை வலிமையாக்கும். [QE][QS2]நீர் தயவுள்ளவர், என்னைக் காப்பாற்றும். [QE]
5. [QS]கல்லறையிலுள்ள மரித்த மனிதர்கள் உம்மை நினையார்கள். [QE][QS2]மரணத்தின் இடத்திலுள்ள ஜனங்கள் உம்மைத் துதிக்கமாட்டார்கள். [QE][QS2]எனவே என்னை நீர் குணமாக்கும்! [QE][PBR]
6. [QS]கர்த்தாவே, இரவு முழுவதும் நான் உம்மிடம் ஜெபம் செய்தேன். [QE][QS2]என் கண்ணீரால் என் படுக்கை நனைந்தது. [QE][QS]என் படுக்கையிலிருந்து கண்ணீர் சிந்துகின்றது. [QE][QS2]உம்மை நோக்கி அழுவதால் நான் பெலனற்றுப்போகிறேன். [QE]
7. [QS]எனது பகைவர்கள் எனக்குத் துன்பம் பல செய்தனர். [QE][QS2]வருத்தத்தால் என் துயரம் பெருகிற்று. [QE][QS2]தொடர்ந்து அழுவதினால் என் கண்கள் சோர்ந்தன. [QE][PBR]
8. [QS]தீயோரே அகன்று போங்கள்! [QE][QS2]ஏனெனில் கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார். [QE]
9. [QS]கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார். [QE][QS2]கர்த்தர் என் ஜெபத்தைக் கேட்டு பதில் தந்தார். [QE][PBR]
10. [QS]எனது எதிரிகள் எல்லோரும் மனமுடைந்து கலங்கினார்கள். [QE][QS2]ஏதோ திடீரென நிகழும், அவர்கள் வெட்கமுற்றுத் திரும்பிச் செல்வார்கள். [QE]