1. {#2“அழிக்காதே” என்னும் பாடலின் இசைத்தலைவனுக்கு தாவீது அளித்த மிக்தாம் என்னும் ஒரு பாடல். தாவீதைக் கெல்வதற்காக சவுல் தாவீதின் வீட்டைக் கண்காணிப்பதற்காக ஆட்களை அனுப்பியபோது பாடியது. } [QS]தேவனே, என் பகைவரிடமிருந்து என்னைக் காப்பாற்றும். [QE][QS2]என்னோடு போரிட வந்துள்ள ஜனங்களை வெல்வதற்கு எனக்கு உதவும். [QE]
2. [QS]தீமை செய்யும் ஜனங்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும். [QE][QS2]அக்கொலைக்காரரிடமிருந்து என்னைக் காப்பாற்றும். [QE]
3. [QS]பாரும், பலவான்கள் எனக்காகக் காத்திருக்கிறார்கள். [QE][QS2]அவர்கள் என்னைக் கொல்லக் காத்திருக்கிறார்கள். [QE][QS2]ஆனால் நான் பாவமோ குற்றமோ செய்யவில்லை. [QE]
4. [QS]அவர்கள் என்னைத் துரத்துகிறார்கள். [QE][QS2]ஆனால் நானோ தவறேதும் செய்யவில்லை. [QE][QS2]கர்த்தாவே, நீரே வந்து அதைப் பாரும். [QE]
5. [QS]நீர் இஸ்ரவேலரின் தேவனாகிய, சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர். [QE][QS2]எழுந்து அந்த ஜனங்களைத் தண்டியும். [QE][QS2]அத்தீய ஏமாற்றுக்காரருக்கு இரக்கம் காட்டாதேயும். [QE][PBR]
6. [QS]அத்தீயோர், ஊரினுள் மாலையில் நுழைந்து [QE][QS2]ஊளையிட்டு அலையும் நாய்களைப் போன்றவர்கள். [QE]
7. [QS]அவர்களின் பயமுறுத்தல்களையும் நிந்தனையையும் கேளும். [QE][QS2]அவர்கள் கொடியவற்றைச் சொல்கிறார்கள். [QE][QS2]அவற்றை யார் கேட்டாலும் அவர்கள் கவலைப்படமாட்டார்கள். [QE][PBR]
8. [QS]கர்த்தாவே, அவர்களைப் பார்த்து நகைத்தருளும். [QE][QS2]அந்த ஜனங்களையெல்லாம் கேலிக்குள்ளாக்கும். [QE]
9. [QS]தேவனே, நீரே என் பெலன், நான் உமக்காகக் காத்திருக்கிறேன். [QE][QS2]தேவனே, உயர்ந்த மலைகளில் நீரே என் பாதுகாப்பான இடமாவீர். [QE]
10. [QS]தேவன் என்னை நேசிக்கிறார். நான் வெற்றியை காண அவர் எனக்கு உதவுவார். [QE][QS2]என் பகைவர்களைத் தோற்கடிக்க அவர் எனக்கு உதவுவார். [QE]
11. [QS]தேவனே, அவர்களை வெறுமனே கொன்று விடுவீரானால், என் ஜனங்கள் அதனை மறந்துவிடுவார்கள். [QE][QS2]என் ஆண்டவரும் பாதுகாவலருமானவரே, உமது வல்லமையால் அவர்களைச் சிதறடித்துத் தோல்வியை காணச் செய்யும். [QE]
12. [QS]அத்தீயோர் சபித்துப் பொய்க் கூறுவர். [QE][QS2]அவர்கள் கூறியவற்றிற்காக அவர்களைத் தண்டியும். [QE][QS2]அவர்கள் அகந்தையே அவர்களுக்குக் கண்ணியாகட்டும். [QE]
13. [QS]உமது கோபத்தில் அவர்களை அழியும். [QE][QS2]அவர்களை முற்றிலுமாக அழியும்! [QE][QS]யாக்கோபின் ஜனங்களையும், உலகம் முழுமையையும், [QE][QS2]தேவன் ஆளுகிறார் என்பதை அப்போது ஜனங்கள் அறிவார்கள்! [QE][PBR]
14. [QS]ஊர் முழுவதும் உறுமியவாறே சுற்றியலையும் நாய்களைப்போன்று அத்தீயோர் இரவில் ஊருக்குள் வந்தனர். [QE]
15. [QS]அவர்கள் உணவுக்காகத் தேடியலைவார்கள், ஆனால் உணவேதும் அவர்களுக்கு அகப்படுவதில்லை. [QE][QS2]அவர்களுக்கு உறங்க இடமும் இராது. [QE]
16. [QS]ஆனால் நான் உம்மைப் பாடல்களால் வாழ்த்தித் துதிப்பேன். [QE][QS2]ஒவ்வொரு காலையும் உமது அன்பில் நான் களிகூருவேன். [QE][QS]ஏனெனில் நீரே உயர்ந்த மலைகளில் எனது பாதுகாப்பாயிருக்கிறீர். [QE][QS2]தொல்லைகள் வரும்பொழுது நான் உம்மிடம் ஓடி வரலாம். [QE]
17. [QS]உம்மை வாழ்த்தும் என் பாடல்களை நான் பாடுவேன். [QE][QS2]ஏனெனில் நீரே உயர்ந்த மலைகளில் எனது பாதுகாப்பாயிருக்கிறீர். [QE][QS2]நீரே என்னை நேசிக்கும் தேவன். [QE]