1. தேவனே, என் பகைவரிடமிருந்து என்னைக் காப்பாற்றும். [QBR2] என்னோடு போரிட வந்துள்ள ஜனங்களை வெல்வதற்கு எனக்கு உதவும். [QBR]
2. தீமை செய்யும் ஜனங்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும். [QBR2] அக்கொலைக்காரரிடமிருந்து என்னைக் காப்பாற்றும். [QBR]
3. பாரும், பலவான்கள் எனக்காகக் காத்திருக்கிறார்கள். [QBR2] அவர்கள் என்னைக் கொல்லக் காத்திருக்கிறார்கள். [QBR2] ஆனால் நான் பாவமோ குற்றமோ செய்யவில்லை. [QBR]
4. அவர்கள் என்னைத் துரத்துகிறார்கள். [QBR2] ஆனால் நானோ தவறேதும் செய்யவில்லை. [QBR2] கர்த்தாவே, நீரே வந்து அதைப் பாரும். [QBR]
5. நீர் இஸ்ரவேலரின் தேவனாகிய, சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர். [QBR2] எழுந்து அந்த ஜனங்களைத் தண்டியும். [QBR2] அத்தீய ஏமாற்றுக்காரருக்கு இரக்கம் காட்டாதேயும்.
6. அத்தீயோர், ஊரினுள் மாலையில் நுழைந்து [QBR2] ஊளையிட்டு அலையும் நாய்களைப் போன்றவர்கள். [QBR]
7. அவர்களின் பயமுறுத்தல்களையும் நிந்தனையையும் கேளும். [QBR2] அவர்கள் கொடியவற்றைச் சொல்கிறார்கள். [QBR2] அவற்றை யார் கேட்டாலும் அவர்கள் கவலைப்படமாட்டார்கள்.
8. கர்த்தாவே, அவர்களைப் பார்த்து நகைத்தருளும். [QBR2] அந்த ஜனங்களையெல்லாம் கேலிக்குள்ளாக்கும். [QBR]
9. தேவனே, நீரே என் பெலன், நான் உமக்காகக் காத்திருக்கிறேன். [QBR2] தேவனே, உயர்ந்த மலைகளில் நீரே என் பாதுகாப்பான இடமாவீர். [QBR]
10. தேவன் என்னை நேசிக்கிறார். நான் வெற்றியை காண அவர் எனக்கு உதவுவார். [QBR2] என் பகைவர்களைத் தோற்கடிக்க அவர் எனக்கு உதவுவார். [QBR]
11. தேவனே, அவர்களை வெறுமனே கொன்று விடுவீரானால், என் ஜனங்கள் அதனை மறந்துவிடுவார்கள். [QBR2] என் ஆண்டவரும் பாதுகாவலருமானவரே, உமது வல்லமையால் அவர்களைச் சிதறடித்துத் தோல்வியை காணச் செய்யும். [QBR]
12. அத்தீயோர் சபித்துப் பொய்க் கூறுவர். [QBR2] அவர்கள் கூறியவற்றிற்காக அவர்களைத் தண்டியும். [QBR2] அவர்கள் அகந்தையே அவர்களுக்குக் கண்ணியாகட்டும். [QBR]
13. உமது கோபத்தில் அவர்களை அழியும். [QBR2] அவர்களை முற்றிலுமாக அழியும்! [QBR] யாக்கோபின் ஜனங்களையும், உலகம் முழுமையையும், [QBR2] தேவன் ஆளுகிறார் என்பதை அப்போது ஜனங்கள் அறிவார்கள்!
14. ஊர் முழுவதும் உறுமியவாறே சுற்றியலையும் நாய்களைப்போன்று அத்தீயோர் இரவில் ஊருக்குள் வந்தனர். [QBR]
15. அவர்கள் உணவுக்காகத் தேடியலைவார்கள், ஆனால் உணவேதும் அவர்களுக்கு அகப்படுவதில்லை. [QBR2] அவர்களுக்கு உறங்க இடமும் இராது. [QBR]
16. ஆனால் நான் உம்மைப் பாடல்களால் வாழ்த்தித் துதிப்பேன். [QBR2] ஒவ்வொரு காலையும் உமது அன்பில் நான் களிகூருவேன். [QBR] ஏனெனில் நீரே உயர்ந்த மலைகளில் எனது பாதுகாப்பாயிருக்கிறீர். [QBR2] தொல்லைகள் வரும்பொழுது நான் உம்மிடம் ஓடி வரலாம். [QBR]
17. உம்மை வாழ்த்தும் என் பாடல்களை நான் பாடுவேன். [QBR2] ஏனெனில் நீரே உயர்ந்த மலைகளில் எனது பாதுகாப்பாயிருக்கிறீர். [QBR2] நீரே என்னை நேசிக்கும் தேவன். [PE]