1. {#2“அழிக்காதே” என்னும் பாடலின் இசைத் தலைவனுக்கு தாவீது அளித்த மிக்தாம் என்னும் பாடல். சவுலிடமிருந்து தப்பி தாவீது குகையில் ஒளிந்திருந்தபோது பாடியது. } [QS]தேவனே, என்னிடம் இரக்கமாயிரும். [QE][QS2]என் ஆத்மா உம்மை நம்புவதால் என்னிடம் இரக்கமாயிரும். [QE][QS]துன்பங்கள் என்னைக் கடந்து செல்கையில், [QE][QS2]பாதுகாப்பிற்காக நான் உம்மிடம் வந்துள்ளேன். [QE]
2. [QS]மிக உன்னதமான தேவனிடம் உதவி வேண்டி நான் ஜெபிக்கிறேன். [QE][QS2]தேவன் என்னை முற்றிலும் கண்காணித்துக்கொள்கிறார். [QE]
3. [QS]பரலோகத்திலிருந்து அவர் எனக்கு உதவி செய்து, என்னைக் காப்பாற்றுகிறார். [QE][QS2]எனக்குத் தொல்லை தரும் ஜனங்களை தோல்வி காணச் செய்கிறார். [QE][QS2]தேவன் தனது உண்மையான அன்பை எனக்குக் காட்டுகிறார். [QE]
4. [QS]என் வாழ்க்கை ஆபத்தில் சிக்கியிருக்கிறது. [QE][QS2]என் பகைவர்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறார்கள். [QE][QS]அவர்கள் மனிதரை உண்ணும் சிங்கங்களைப் போலிருக்கிறார்கள். [QE][QS2]அவர்கள் பற்கள் ஈட்டிகளைப் போலவும். [QE][QS2]அம்புகளைப் போலவும் கூர்மையானவை. [QE][QS2]அவர்கள் நாவுகள் வாளைப் போன்று கூரியவை. [QE][PBR]
5. [QS]தேவனே, நீர் வானங்களின்மேல் மிக உயரத்தில் இருக்கிறீர். [QE][QS2]உமது மகிமை பூமியை மூடிக் கொள்கிறது. [QE]
6. [QS]அவர்கள் எனக்கு கண்ணி வைத்துப் பிடிக்க விரும்புகின்றனர். [QE][QS2]நான் விழுவதற்காக அவர்கள் ஒரு ஆழமான குழியை வெட்டினார்கள். [QE][QS2]ஆனால் தாங்களே அக்கண்ணியில் விழுந்தார்கள். [QE][PBR]
7. [QS]ஆனால் தேவன் என்னைப் பத்திரமாக காப்பார். [QE][QS2]அவர் என்னைத் துணிவுடனிருக்கச் செய்கிறார். [QE][QS2]நான் அவரைத் துதித்துப் பாடுவேன். [QE]
8. [QS]என் ஆத்துமாவே, எழுந்திரு. [QE][QS2]வீணையே, சுரமண்டலமே இசைக்கத் தொடங்குங்கள். அதிகாலையை விழித்தெழச் செய்வோமாக! [QE]
9. [QS]என் ஆண்டவரே, ஒவ்வொருவரிடமும் உம்மைத் துதிப்பேன். [QE][QS2]ஒவ்வொரு தேசத்திலும் உம்மைப்பற்றியத் துதிப்பாடல்களைப் பாடுவேன். [QE]
10. [QS]உமது உண்மையான அன்பு [QE][QS2]வானத்தின் உயர்ந்த மேகங்களைக் காட்டிலும் உயர்ந்தது. [QE]
11. [QS]தேவன் வானங்களுக்கு மேலாக எழுந்தருளியிருக்கிறார். [QE][QS2]அவரது மகிமை பூமியை மூடிக் கொள்கிறது. [QE]