1. தேவனே, ஜனங்கள் என்னைத் தாக்குகிறார்கள், நீர் என்மேல் இரக்கமாயிரும். [QBR2] அவர்கள் என்னைப் பின்தொடர்ந்து வந்து பகலும் இரவும் என்னோடு போரிடுகிறார்கள். [QBR]
2. என் பகைவர்கள் தொடர்ந்து என்னைத் தாக்குகிறார்கள். [QBR2] என்னோடு போரிடுபவர்கள் எண்ணிக்கைக்கு அடங்காதவர்கள். [QBR]
3. நான் அஞ்சும்போது, [QBR2] உம்மிடம் நம்பிக்கை வைத்தேன். [QBR]
4. நான் தேவனை நம்புகிறேன், எனவே அஞ்சேன். ஜனங்கள் என்னைத் துன்புறுத்த முடியாது! [QBR2] தேவன் எனக்குத் தந்த வாக்குறுதிக்காக தேவனைத் துதிப்பேன். [QBR]
5. என் பகைவர்களோ என் வார்த்தைகளை எப்போதும் புரட்டுகிறார்கள். [QBR2] அவர்கள் எப்போதும் எனக்கெதிராகத் திட்டங்களை வகுக்கிறார்கள். [QBR]
6. என்னைக் கொல்லும் வகைதேடி, [QBR2] அவர்கள் ஒருமித்து ஒளிந்திருந்து என் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கிறார்கள். [QBR]
7. தேவனே, அவர்களைத் தப்பவிடாதேயும். [QBR2] அவர்கள் செய்த தீய காரியங்களுக்காக அவர்களை அந்நிய தேசத்தாரிடம் அனுப்பி அவர்களின் கோபத்தால் துன்புறச் செய்யும். [QBR]
8. என் வருத்தத்தை நீர் அறிகிறீர். [QBR2] என் ஓயாத அழுகையை நீர் அறிகிறீர். [QBR2] என் கண்ணீரை நீர் நிச்சயமாகக் கணக்கிட்டு வைத்திருக்கிறீர்.
9. எனவே நான் உம்மிடம் உதவி வேண்டும்போது, என் பகைவர்களைத் தோல்வியடையச் செய்யும். [QBR2] நீர் அதைச் செய்யக்கூடுமென்பதை அறிவேன். நீரே தேவன்! [QBR]
10. தேவன் தந்த வாக்குறுதிக்காக நான் அவரைத் துதிப்பேன். [QBR2] கர்த்தர் எனக்களித்த வாக்குறுதிக்காக நான் அவரைத் துதிப்பேன். [QBR]
11. நான் தேவனை நம்பியிருப்பதால் அஞ்சேன். [QBR2] ஜனங்கள் என்னைத் துன்புறுத்த முடியாது!
12. தேவனே, நான் உமக்கு விசேஷ பொருத்தனைகளைப் பண்ணினேன். [QBR2] நான் சொன்ன பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். [QBR2] என் ஸ்தோத்திரபலியை உமக்குச் செலுத்துவேன். [QBR]
13. ஏனெனில் நீர் என்னை மரணத்தினின்று காத்தீர். [QBR2] பிறரிடம் நான் தோல்வியடையாதவாறு செய்தீர். [QBR] எனவே நான் தேவனை ஒளியில் தொழுதுகொள்வேன். [QBR2] அதை ஜீவனுள்ளோர் மட்டும் பார்க்க முடியும். [PE]