1. தேவனே, என் ஜெபத்தைக் கேளும். [QBR2] இரக்கத்திற்கான என் ஜெபத்தை ஒதுக்காதிரும். [QBR]
2. தேவனே, எனக்குச் செவிசாய்த்துப் பதிலளியும். [QBR2] என் குறைகளை உம்மிடம் நான் முறையிடுவேன். [QBR]
3. என் பகைவன் என்னிடம் தீய காரியங்களைக் கூறினான். [QBR2] கெட்ட மனிதர்கள் என்னை நோக்கிக் கூக்குரலிட்டார்கள். [QBR] என் பகைவர்கள் கோபங்கொண்டு என்னைத் தாக்கினார்கள். [QBR2] என்னை வீழ்த்தும்படி தொல்லைகளை எனக்குச் செய்தார்கள். [QBR]
4. என் இருதயம் எனக்குள் நடுங்கித் துன்புறுகிறது. [QBR2] நான் மரணபயம் அடைந்தேன். [QBR]
5. நான் அஞ்சி நடுங்கினேன். [QBR2] பயத்தால் தாக்குண்டேன். [QBR]
6. ஒரு புறாவைப்போல் சிறகுகள் எனக்கு வேண்டுமென விரும்பினேன். [QBR2] அப்போது நான் பறந்துபோய் ஓய்வுகொள்ளும் இடத்தைத் தேடியிருப்பேன். [QBR2]
7. நான் தூரத்திற்குப் போய், பாலைவனத்திற்குச் செல்வேன்.
8. நான் ஓடி தப்பித்துக்கொள்வேன். [QBR2] துன்பங்களாகிய புயலிலிருந்து ஓடிவிடுவேன். [QBR]
9. (9-10) என் ஆண்டவரே, அவர்கள் பொய்களை நிறுத்தும். [QBR2] இந்நகரில் அதிகமான கொடுமைகளையும், சண்டைகளையும் நான் காண்கிறேன். [QBR] என்னைச் சுற்றிலும் இரவும் பகலும் ஊரின் ஒவ்வொரு பகுதியிலும் குற்றங்களும், கொடுமைகளும் நிரம்பியுள்ளன. [QBR2] இந்த ஊரில் பயங்கரமான காரியங்கள் நிகழ்கின்றன. [QBR]
10. தெருக்களில் பெருங்குற்றங்கள் நேரிடுகின்றன. [QBR2] ஜனங்கள் பொய்களைக்கூறி, எங்கும் ஏமாற்றுகிறார்கள்.
11. ஒரு பகைவன் என்னைத் தாக்கினால் நான் பொறுத்துக்கொள்வேன். [QBR2] என் பகைவர்கள் என்னைத் தாக்கினால் நான் ஒளிந்துக்கொள்வேன். [QBR]
12. ஆனால் எனக்குச் சமமானவனும், என்னுடன் வாழ்பவனும், [QBR2] என் நண்பனுமாகிய நீயே எனக்குத் தொல்லைகளைத் தந்துகொண்டிருக்கிறாய். [QBR]
13. நாங்கள் எங்கள் இரகசியங்களைப் பகிர்ந்து கொண்டோம். [QBR2] தேவனுடைய ஆலயத்தில் நாங்கள் ஒருமித்து வழிப்பட்டோம்.
14. என் பகைவர்கள் அவர்கள் காலத்திற்கு முன்னே மரிப்பார்கள் என நம்புகிறேன். [QBR2] அவர்கள் உயிரோடே புதைக்கப்படுவார்கள் என நம்புகிறேன்! [QBR2] ஏனெனில் அவர்கள் தங்கள் வீடுகளில் மிகப் பயங்கரமான காரியங்களைத் திட்டமிடுகிறார்கள்.
15. உதவிக்காக நான் தேவனைக் கூப்பிடுவேன். [QBR2] கர்த்தர் எனக்குப் பதில் தருவார். [QBR]
16. நான் தேவனோடு மாலை, காலை, நடுப்பகல் வேளைகளில் பேசுவேன். [QBR2] என் முறையீடுகளை தேவனுக்குச் சொல்வேன். அவர் நான் கூறுபவற்றைக் கேட்கிறார்! [QBR]
17. நான் பல யுத்தங்களில் போரிட்டுள்ளேன். [QBR2] ஆனால் தேவன் எல்லாவற்றிலும் என்னைக் காப்பாற்றி, என்னைப் பத்திரமாகத் திரும்பவும் அழைத்து வந்தார். [QBR]
18. தேவன் நான் கூறுவதைக் கேட்கிறார். [QBR2] நித்திய அரசர் எனக்கு உதவுவார்.
19. என் பகைவர்கள் தங்கள் வாழ்க்கையை மாற்றமாட்டார்கள். [QBR2] அவர்கள் தேவனுக்குப் பயப்படவோ, அவரை மதிக்கவோமாட்டார்கள். [QBR]
20. என் பகைவர்கள் தங்கள் சொந்த நண்பர்களைத் தாக்குகிறார்கள். [QBR2] அவர்கள் செய்வதாக ஒப்புக்கொள்ளும் காரியங்களைச் செய்யமாட்டார்கள். [QBR] என் பகைவர்கள் மென்மையாகப் பேசுகிறார்கள். [QBR2] அவர்கள் சமாதானத்தைக் குறித்துப் பேசுகிறார்கள். [QBR] ஆனால் உண்மையில் யுத்தங்களுக்குத் திட்டமிடுகிறார்கள். [QBR2] அவர்கள் சொற்கள் எண்ணெயைப் போல் மிருதுவானவை. [QBR2] ஆனால் அவை கத்தியைப்போல் ஊடுருவக் கூடியவை.
21. உங்கள் கவலைகளைக் கர்த்தரிடம் ஒப்படைத்துவிடுங்கள். [QBR2] அவர் உங்களை ஆதரிப்பார். நல்ல ஜனங்கள் தோல்வி காண்பதற்குக் கர்த்தர் அனுமதியார். [QBR]
22. உடன்படிக்கையின் உமது பங்காக, தேவனே அந்தப் பொய்யர்களையும், கொலைக்காரர்களையும் அவர்களின் பாதி வாழ்க்கை கழியும் முன்பே அவர்களைக் கல்லறைக்கு அனுப்பிவிடும்! [QBR2] உடன்படிக்கையின் எனது பங்காக நான் உம்மேல் நம்பிக்கை வைப்பேன். [PE]
23.