1. தேவனே, உமது வல்லமையான நாமத்தைப் பயன்படுத்தி என்னைக் காப்பாற்றும். [QBR2] உமது வல்லமையை பயன்படுத்தி என்னை விடுதலையாக்கும். [QBR]
2. தேவன், என் ஜெபத்தைக்கேளும். [QBR2] நான் கூறும் காரியங்களைக் கேளும். [QBR]
3. தேவனை தொழுதுகொள்ளாத அந்நியர்கள் எனக்கு எதிராகத் திரும்புகிறார்கள். [QBR2] அந்த பலசாலிகள் என்னைக் கொல்ல முயல்கிறார்கள்.
4. பாருங்கள், என் தேவன் எனக்கு உதவுவார். [QBR2] என் ஆண்டவர் எனக்குத் துணை நிற்பார். [QBR]
5. எனக்கு எதிராகத் திரும்பியுள்ள ஜனங்களை என் தேவன் தண்டிப்பார். [QBR2] தேவன் எனக்கு உண்மையானவராக இருப்பார். [QBR2] அவர் அந்த ஜனங்களை அறவே அழிப்பார்.
6. தேவனே, நான் மனவிருப்பத்தின்படி காணிக்கைகளை உமக்குத் தருவேன். [QBR2] கர்த்தாவே, நான் உமது நாமத்தைத் துதிப்பேன். [QBR]
7. என் எல்லாத் தொல்லைகளிலுமிருந்து என்னை விடுவிக்கும்படி நான் உம்மை வேண்டுகிறேன். [QBR2] எனது பகைவர்கள் தோற்கடிக்கப்படுவதை நான் பார்க்கட்டும். [PE]