1. {#2மகலாத் என்னும் கருவியை இசைக்கும் இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த ஒரு மஸ்கீல் என்னும் பாடல். } [QS]தேவன் இல்லை என்று மூடன் மட்டுமே நினைப்பான். [QE][QS2]அத்தகைய மனிதர்கள் கெட்டவர்களாகவும் தீயவர்களாகவும் அருவருப்பானவர்களாகவும் இருக்கிறார்கள். [QE][QS2]அவர்கள் நல்ல காரியங்களைச் செய்வதில்லை. [QE]
2. [QS]தேவனுக்காக எதிர்நோக்கியிருக்கும் ஞானமுள்ளவர்கள் உண்டோ என்று [QE][QS2]பரலோகத்திலிருந்து தேவன் நம்மைக் கவனித்துக்கொண்டிருக்கிறார். [QE]
3. [QS]ஆனால் ஒவ்வொருவரும் தேவனை விட்டு வழி விலகிப் போனார்கள். [QE][QS2]ஒவ்வொரு மனிதனும் தீயவன். [QE][QS]நன்மையான காரியத்தைச் செய்பவன் [QE][QS2]ஒருவன் கூட இல்லை. [QE][PBR]
4. [QS]தேவன்: “அத்தீயோர் நிச்சயமாக உண்மையை அறிவர்! [QE][QS2]ஆனால் அவர்கள் என்னிடம் ஜெபிப் பதில்லை. [QE][QS2]தங்கள் உணவை உண்பதைப் போல் தீயோர் விரைந்து என் ஜனங்களை அழிக்கக் காத்திருக்கிறார்கள்” என்கிறார். [QE]
5. [QS]ஆனால் அந்த தீயோர்கள் முன்பு ஒருபோதும் அஞ்சாத அளவுக்கு அஞ்சுவார்கள். [QE][QS2]அத்தீயோர் இஸ்ரவேலரின் பகைவர்கள். [QE][QS]அத்தீயோரைக் தேவன் தள்ளிவிட்டார். [QE][QS2]எனவே தேவனுடைய ஜனங்கள் அவர்களைத் தோற்கடிப்பார்கள். [QE][QS]அத்தீயோரின் எலும்புகளை தேவன் சிதறடிப்பார். [QE][PBR]
6. [QS]சீயோனிலிருந்து இஸ்ரவேலருக்கு வெற்றி வருவதாக. [QE][QS2]தேவன், அவர்கள் வெற்றிபெற உதவுவார். [QE][QS]அடிமைத்தனத்திலிருந்து தேவன் தமது ஜனங்களை மீட்கும்போது யாக்கோபு களிகூருவான். [QE][QS2]இஸ்ரவேல் மிகுந்த மகிழ்ச்சிகொள்வான். [QE]