தமிழ் சத்தியவேதம்

ஈசி டு ரீட் (ERV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. பெரிய மனிதனே, நீ செய்யும் தீய செயல்களைக் குறித்து ஏன் பெருமை கொள்கிறாய்? [QBR2] நீ தேவனுக்கு முன் மதிப்பற்றவனாவாய். [QBR] நாள் முழுவதும் தீமை செய்யவே திட்டமிடுகிறாய். [QBR]
2. நீ மூடத்தனமான திட்டங்களை வகுக்கிறாய். [QBR2] உன் நாவு தீட்டப்பட்ட சவரக்கத்தியைப் போன்று ஆபத்தானது. [QBR2] நீ எப்போதும் பொய் பேசி, யாரையேனும் ஏமாற்ற முயல்கிறாய். [QBR]
3. நீ நன்மையைப் பார்க்கிலும் தீமையை விரும்புகிறாய். [QBR2] உண்மையைக் காட்டிலும் பொய்பேச முயல்கிறாய்.
4. நீயும் உனது பொய்கூறும் நாவும் ஜனங்களைத் துன்புறுத்த விரும்பும். [QBR]
5. எனவே தேவன் உன்னை என்றைக்கும் அழிப்பார்! [QBR2] அவர் உன்னை உனது வீட்டிலிருந்து [*வீடு இது சரீரத்தைக் குறிக்கும். தேவன் ஒருவனை அழிப்பார் என்பதைக் கவிதையில் சொல்லும் வகை இது.] இழுத்து எறிவார். [QBR2] அவர் உன்னைக் கொல்வார், உனக்குச் சந்ததி இராது. [QBR]
6. நல்லோர் இதனைக் காண்பார்கள். [QBR2] தேவனுக்குப் பயந்து அவரை மதித்து வாழ அவர்கள் கற்பார்கள். [QBR] அவர்கள் உன்னைப் பார்த்து நகைத்து, [QBR2]
7. “தேவனைச் சார்ந்து வாழாத மனிதனுக்கு நிகழ்ந்ததைப் பாருங்கள். [QBR2] அம்மனிதன் தனது செல்வமும், பொய்களும் தன்னைக் காக்கும் என்று நம்பிக்கொண்டிருந்தான்” என்பார்கள்.
8. ஆனால் நான் தேவனுடைய ஆலயத்தில், நெடுங்காலம் வாழும் பச்சையான ஒலிவ மரத்தைப்போலிருப்பேன். [QBR2] தேவனுடைய அன்பை நான் என்றென்றும் நம்புவேன். [QBR]
9. தேவனே, நீர் செய்த காரியங்களுக்காக நான் உம்மைத் துதிப்பேன். [QBR2] நான் உமது நாமத்தை உம் சீடர்களுக்கு முன்பாகப் பேசுவேன். [QBR2] ஏனெனில் அது மிகவும் நல்லதாக இருக்கிறது. [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 52 / 150
சங்கீதம் 52:160
1 பெரிய மனிதனே, நீ செய்யும் தீய செயல்களைக் குறித்து ஏன் பெருமை கொள்கிறாய்? நீ தேவனுக்கு முன் மதிப்பற்றவனாவாய். நாள் முழுவதும் தீமை செய்யவே திட்டமிடுகிறாய். 2 நீ மூடத்தனமான திட்டங்களை வகுக்கிறாய். உன் நாவு தீட்டப்பட்ட சவரக்கத்தியைப் போன்று ஆபத்தானது. நீ எப்போதும் பொய் பேசி, யாரையேனும் ஏமாற்ற முயல்கிறாய். 3 நீ நன்மையைப் பார்க்கிலும் தீமையை விரும்புகிறாய். உண்மையைக் காட்டிலும் பொய்பேச முயல்கிறாய். 4 நீயும் உனது பொய்கூறும் நாவும் ஜனங்களைத் துன்புறுத்த விரும்பும். 5 எனவே தேவன் உன்னை என்றைக்கும் அழிப்பார்! அவர் உன்னை உனது வீட்டிலிருந்து *வீடு இது சரீரத்தைக் குறிக்கும். தேவன் ஒருவனை அழிப்பார் என்பதைக் கவிதையில் சொல்லும் வகை இது. இழுத்து எறிவார். அவர் உன்னைக் கொல்வார், உனக்குச் சந்ததி இராது. 6 நல்லோர் இதனைக் காண்பார்கள். தேவனுக்குப் பயந்து அவரை மதித்து வாழ அவர்கள் கற்பார்கள். அவர்கள் உன்னைப் பார்த்து நகைத்து, 7 “தேவனைச் சார்ந்து வாழாத மனிதனுக்கு நிகழ்ந்ததைப் பாருங்கள். அம்மனிதன் தனது செல்வமும், பொய்களும் தன்னைக் காக்கும் என்று நம்பிக்கொண்டிருந்தான்” என்பார்கள். 8 ஆனால் நான் தேவனுடைய ஆலயத்தில், நெடுங்காலம் வாழும் பச்சையான ஒலிவ மரத்தைப்போலிருப்பேன். தேவனுடைய அன்பை நான் என்றென்றும் நம்புவேன். 9 தேவனே, நீர் செய்த காரியங்களுக்காக நான் உம்மைத் துதிப்பேன். நான் உமது நாமத்தை உம் சீடர்களுக்கு முன்பாகப் பேசுவேன். ஏனெனில் அது மிகவும் நல்லதாக இருக்கிறது.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 52 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References