1. தேவனே உமது மிகுந்த அன்பான தயவினாலும் மிகுந்த இரக்கத்தினாலும் என்னிடம் இரக்கமாயிரும். [QBR2] என் பாவங்களை அழித்துவிடும். [QBR]
2. தேவனே, எனது குற்றத்தைத் துடைத்துவிடும். [QBR2] என் பாவங்களைக் கழுவிவிடும். [QBR2] என்னை மீண்டும் தூய்மைப்படுத்தும்! [QBR]
3. நான் பாவம் செய்தேனென அறிவேன். [QBR2] அப்பாவங்களை எப்போதும் நான் காண்கிறேன். [QBR]
4. நீர் தவறெனக்கூறும் காரியங்களைச் செய்தேன். [QBR2] தேவனே, நான் உமக்கு விரோதமாக பாவம் செய்தேன். [QBR] நான் தவறு செய்தவன் என்பதையும், நீர் நியாயமானவர் என்பதையும், ஜனங்கள் அறியும் பொருட்டு இவற்றை அறிக்கையிடுகிறேன். [QBR2] உமது முடிவுகள் நியாயமானைவை. [QBR]
5. நான் பாவத்தில் பிறந்தேன். [QBR2] என் தாய் என்னைப் பாவத்தில் கருவுற்றாள். [QBR]
6. தேவனே! நான் உண்மையும் நேர்மையும் உள்ளவனாக விரும்பினால் [QBR2] உண்மையான ஞானத்தை என்னுள்ளே வையும். [QBR]
7. ஈசோப்பு செடியால் என்னைத் தூய்மையாக்கும். [QBR2] பனியைக் காட்டிலும் நான் வெண்மையாகும் வரை என்னைக் கழுவும்! [QBR]
8. என்னை மகிழ்ச்சியாக்கும். மீண்டும் மகிழ்ச்சியாக இருக்கும் வகையைக் கூறும். [QBR2] நீர் நொறுக்கின என் எலும்புகள் மீண்டும் மகிழ்ச்சியடையட்டும். [QBR]
9. எனது பாவங்களைப் பாராதேயும்! [QBR2] அவற்றை யெல்லாம் நீக்கிவிடும் [QBR]
10. தேவனே, எனக்குள் ஒரு பரிசுத்த இருதயத்தைச் சிருஷ்டியும்! [QBR2] எனது ஆவியை மீண்டும் பலமாக்கும். [QBR]
11. என்னைத் தூரத் தள்ளாதேயும்! [QBR2] என்னிடமிருந்து உமது பரிசுத்த ஆவியை எடுத்துவிடாதேயும்! [QBR]
12. உமது உதவி என்னை மகிழ்விக்கிறது! [QBR2] மீண்டும் அந்தச் சந்தோஷத்தை எனக்குக் கொடும். [QBR2] எனது ஆவியைப் பலப்படுத்தி உமக்குக் கீழ்ப்படிவதற்குத் தயாராக இருக்கச்செய்யும். [QBR]
13. நீர் கூறும் வாழ்க்கை நெறியைப் பாவிகளுக்குப் போதிப்பேன், [QBR2] அவர்கள் உம்மிடம் திரும்புவார்கள். [QBR]
14. தேவனே, என்னைக் கொலைக் குற்றவாளியாக்காதேயும். [QBR2] என் தேவனே, நீரே எனது மீட்பர். [QBR] நீர் எவ்வளவு நல்லவர் என்பதை நான் பாடச் செய்யும். [QBR2]
15. என் ஆண்டவரே, நான் என் வாயைத் திறந்து உம்மைத் துதித்துப் பாடுவேன்! [QBR]
16. நீர் பலிகளை விரும்பவில்லை. [QBR2] நீர் விரும்பாத பலிகளை நான் கொடுக்கத் தேவையில்லை! [QBR]
17. தேவன் விரும்பும் பலி பணிவான ஆவியே. [QBR2] தேவனே, உடைந்து நொறுங்கிப்போன இருதயத்தோடு உம்மிடம் வருபவரை நீர் தள்ளிவிடமாட்டீர்.
18. தேவனே, சீயோனிடம் நல்லவராகவும் இரக்கமுடையவராகவும் இரும். [QBR2] எருசலேமின் சுவர்களை எழுப்பும். [QBR]
19. அப்போது நீர் நல்ல பலிகளையும் தகன பலி முழுவதையும் ஏற்று மகிழமுடியும். [QBR2] ஜனங்கள் மீண்டும் உமது பலிபீடத்தில் காளைகளைப் பலியிடுவார்கள். [PE]