1. {#2இராகத் தலைவனுக்கு தாவீது எழுதிய பாடல்.பத்சேபாளோடு தாவீது செய்த பாவத்திற்குப் பிறகு தீர்க்கதரிசியாகிய நாத்தான் தாவீதிடம் சென்ற காலத்தில் இது பாடப்பட்டது. } [QS]தேவனே உமது மிகுந்த அன்பான தயவினாலும் மிகுந்த இரக்கத்தினாலும் என்னிடம் இரக்கமாயிரும். [QE][QS2]என் பாவங்களை அழித்துவிடும். [QE]
2. [QS]தேவனே, எனது குற்றத்தைத் துடைத்துவிடும். [QE][QS2]என் பாவங்களைக் கழுவிவிடும். [QE][QS2]என்னை மீண்டும் தூய்மைப்படுத்தும்! [QE]
3. [QS]நான் பாவம் செய்தேனென அறிவேன். [QE][QS2]அப்பாவங்களை எப்போதும் நான் காண்கிறேன். [QE]
4. [QS]நீர் தவறெனக்கூறும் காரியங்களைச் செய்தேன். [QE][QS2]தேவனே, நான் உமக்கு விரோதமாக பாவம் செய்தேன். [QE][QS]நான் தவறு செய்தவன் என்பதையும், நீர் நியாயமானவர் என்பதையும், ஜனங்கள் அறியும் பொருட்டு இவற்றை அறிக்கையிடுகிறேன். [QE][QS2]உமது முடிவுகள் நியாயமானைவை. [QE]
5. [QS]நான் பாவத்தில் பிறந்தேன். [QE][QS2]என் தாய் என்னைப் பாவத்தில் கருவுற்றாள். [QE]
6. [QS]தேவனே! நான் உண்மையும் நேர்மையும் உள்ளவனாக விரும்பினால் [QE][QS2]உண்மையான ஞானத்தை என்னுள்ளே வையும். [QE]
7. [QS]ஈசோப்பு செடியால் என்னைத் தூய்மையாக்கும். [QE][QS2]பனியைக் காட்டிலும் நான் வெண்மையாகும் வரை என்னைக் கழுவும்! [QE]
8. [QS]என்னை மகிழ்ச்சியாக்கும். மீண்டும் மகிழ்ச்சியாக இருக்கும் வகையைக் கூறும். [QE][QS2]நீர் நொறுக்கின என் எலும்புகள் மீண்டும் மகிழ்ச்சியடையட்டும். [QE]
9. [QS]எனது பாவங்களைப் பாராதேயும்! [QE][QS2]அவற்றை யெல்லாம் நீக்கிவிடும் [QE]
10. [QS]தேவனே, எனக்குள் ஒரு பரிசுத்த இருதயத்தைச் சிருஷ்டியும்! [QE][QS2]எனது ஆவியை மீண்டும் பலமாக்கும். [QE]
11. [QS]என்னைத் தூரத் தள்ளாதேயும்! [QE][QS2]என்னிடமிருந்து உமது பரிசுத்த ஆவியை எடுத்துவிடாதேயும்! [QE]
12. [QS]உமது உதவி என்னை மகிழ்விக்கிறது! [QE][QS2]மீண்டும் அந்தச் சந்தோஷத்தை எனக்குக் கொடும். [QE][QS2]எனது ஆவியைப் பலப்படுத்தி உமக்குக் கீழ்ப்படிவதற்குத் தயாராக இருக்கச்செய்யும். [QE]
13. [QS]நீர் கூறும் வாழ்க்கை நெறியைப் பாவிகளுக்குப் போதிப்பேன், [QE][QS2]அவர்கள் உம்மிடம் திரும்புவார்கள். [QE]
14. [QS]தேவனே, என்னைக் கொலைக் குற்றவாளியாக்காதேயும். [QE][QS2]என் தேவனே, நீரே எனது மீட்பர். [QE][QS]நீர் எவ்வளவு நல்லவர் என்பதை நான் பாடச் செய்யும். [QE]
[QS2]15. என் ஆண்டவரே, நான் என் வாயைத் திறந்து உம்மைத் துதித்துப் பாடுவேன்! [QE]
16. [QS]நீர் பலிகளை விரும்பவில்லை. [QE][QS2]நீர் விரும்பாத பலிகளை நான் கொடுக்கத் தேவையில்லை! [QE]
17. [QS]தேவன் விரும்பும் பலி பணிவான ஆவியே. [QE][QS2]தேவனே, உடைந்து நொறுங்கிப்போன இருதயத்தோடு உம்மிடம் வருபவரை நீர் தள்ளிவிடமாட்டீர். [QE][PBR]
18. [QS]தேவனே, சீயோனிடம் நல்லவராகவும் இரக்கமுடையவராகவும் இரும். [QE][QS2]எருசலேமின் சுவர்களை எழுப்பும். [QE]
19. [QS]அப்போது நீர் நல்ல பலிகளையும் தகன பலி முழுவதையும் ஏற்று மகிழமுடியும். [QE][QS2]ஜனங்கள் மீண்டும் உமது பலிபீடத்தில் காளைகளைப் பலியிடுவார்கள். [QE]