1. {#2ஆசாபின் பாடல்களில் ஒன்று } [QS]தெய்வங்களுக்கெல்லாம் தேவனாகிய கர்த்தர் பேசுகிறார். [QE][QS2]சூரியன் உதிக்குமிடத்திலிருந்து அது மறைகிற இடம் வரைக்குமுள்ள பூமியின் எல்லா ஜனங்களையும் அழைக்கிறார். [QE]
2. [QS]சீயோனிலிருந்து பிரகாசிக்கும் தேவன் அழகானவர். [QE]
3. [QS]நம் தேவன் வருகிறார், அவர் அமைதியாக இரார். [QE][QS2]அவருக்கு முன்னே நெருப்பு எரியும். அவரைச் சூழ்ந்து புயல் வீசும். [QE]
4. [QS]தமது ஜனங்களை நியாயந்தீர்ப்பதற்கு [QE][QS2]நமது தேவன் பூமியையும் வானத்தையும் அழைக்கிறார். [QE]
5. [QS]தேவன் கூறுகிறதாவது, “என்னைப் பின்பற்றுகிறவர்களே, [QE][QS2]என்னைச் சூழ்ந்து நில்லுங்கள். [QE][QS]என்னை வணங்குகிறவர்களே, வாருங்கள். [QE][QS2]நாம் ஒருவருக்கொருவர் ஒரு உடன்படிக்கை செய்துள்ளோம்.” [QE][PBR]
6. [QS]தேவனே நியாயாதிபதி, [QE][QS2]வானங்கள் அவரது நன்மைகளைக் கூறும். [QE]
7. [QS]“எனது ஜனங்களே, நான் கூறுவதைக் கேளுங்கள்! [QE][QS2]இஸ்ரவேலின் ஜனங்களே, உங்களுக்கு எதிரான எனது சாட்சியைக் காட்டுவேன். [QE][QS2]நானே உங்கள் தேவன். [QE]
8. [QS]உங்கள் பலிகளைக் குறித்து நான் குறை கூறமாட்டேன். [QE][QS2]எப்போதும் இஸ்ரவேலராகிய நீங்கள் உங்கள் தகனபலிகளை என்னிடம் ஒவ்வொரு நாளும் கொண்டுவந்தீர்கள். [QE]
9. [QS]உங்கள் வீட்டின் எருதுகளையோ [QE][QS2]உங்கள் மந்தையின் ஆடுகளையோ நான் எடுத்துக்கொள்வதில்லை. [QE]
10. [QS]எனக்கு அம்மிருகங்கள் தேவையில்லை. [QE][QS2]காட்டின் மிருகங்கள் எனக்குச் சொந்தமானவை. [QE][QS2]மலைகளிலுள்ள பல்லாயிரம் மிருகங்கள் எல்லாம் எனக்குச் சொந்தமானவை. [QE]
11. [QS]உயர்ந்த மலையின் ஒவ்வொரு பறவையையும் நான் அறிவேன். [QE][QS2]மலையின்மேல் அசையும் பொருட்களெல்லாம் என்னுடையவை. [QE]
12. [QS]எனக்குப் பசியில்லை! எனக்குப் பசித்தாலும் உணவுக்காக உன்னைக் கேட்கமாட்டேன். [QE][QS2]உலகமும் அதன் அனைத்துப் பொருள்களும் எனக்குச் சொந்தமானவை. [QE]
13. [QS]எருதுகளின் மாமிசத்தை நான் புசிப்பதில்லை. [QE][QS2]ஆடுகளின் இரத்தத்தை நான் குடிக்கமாட்டேன்” என்று தேவன் கூறுகிறார். [QE][PBR]
14. [QS]எனவே ஸ்தோத்திர பலிகளை தேவனுக்குக் கொண்டுவந்து அவரோடு இருக்கும்படி வாருங்கள். [QE][QS2]நீங்கள் மிக உன்னதமான தேவனுக்கு வாக்குறுதி பண்ணினீர்கள். [QE][QS2]எனவே வாக்களித்த பொருள்களை அவருக்குக் கொடுங்கள். [QE]
15. [QS]தேவன், “இஸ்ரவேலரே, துன்பம் நேர்கையில் என்னிடம் விண்ணப்பம் செய்யுங்கள்! [QE][QS2]நான் உங்களுக்கு உதவுவேன். [QE][QS2]நீங்கள் அப்போது என்னை மகிமைப்படுத்த முடியும்” என்று கூறுகிறார். [QE][PBR]
16. [QS]தேவன் தீயோரைப் பார்த்து, “நீங்கள் எனது சட்டங்களைக் குறித்துப் பேசுகிறீர்கள். [QE][QS2]எனது உடன்படிக்கையைக் குறித்துப் பேசுகிறீர்கள். [QE]
17. [QS]ஆனால் நான் உங்களைத் திருத்தும்போது அதை ஏன் வெறுக்கிறீர்கள்? [QE][QS2]நான் கூறும் காரியங்களை ஏன் புறக்கணிக்கிறீர்கள்? [QE]
18. [QS]நீங்கள் ஒரு திருடனைப் பார்க்கிறீர்கள், அவனோடு சேர்வதற்காக ஓடுகிறீர்கள். [QE][QS2]விபச்சாரமாகிய பாவத்தைச் செய்கிறவர்களோடு நீங்களும் படுக்கையில் குதிக்கிறீர்கள். [QE]
19. [QS]நீங்கள் தீயவற்றைப் பேசிப் பொய்களைச் சொல்கிறீர்கள். [QE]
20. [QS]உங்கள் சொந்த சகோதரரையும் பிறரையும் குறித்து எப்போதும் தீயவற்றையே சொல்கிறீர்கள். [QE]
21. [QS]நீங்கள் இத்தீய செயல்களைச் செய்கிறீர்கள், நான் அமைதியாக இருப்பேன் என்று நினைக்கிறீர்கள். [QE][QS2]நீங்கள் எதையும் சொல்லாதிருக்கிறீர்கள், நானும் அமைதியாக இருப்பேன் என்று நினைக்கிறீர்கள். [QE][QS]ஆனால் நான் அமைதியாக இரேன்! [QE][QS2]நீங்கள் அதைத் தெளிவாக உணரும்படி நான் செய்வேன். [QE][QS2]உங்கள் முகத்திற்கெதிராக உங்களை விமர்சிப்பேன்! [QE]
22. [QS]நீங்கள் தேவனை மறந்திருக்கிறீர்கள். [QE][QS2]உங்களைக் கிழித்தெறியும் முன்னர் [QE][QS]நீங்கள் அதை நன்கு புரிந்து கொள்ளுங்கள்! [QE][QS2]அது நிகழந்தால் உங்களை மீட்பவர் எவருமில்லை! [QE]
23. [QS]எனவே ஒருவன் ஸ்தோத்திர காணிக்கை செலுத்தினால் அவன் என்னை உண்மையிலேயே மகிமைப்படுத்துகிறான். [QE][QS2]ஒருவன் அவனது வாழ்க்கையை மாற்றியமைத்தால் அப்போது நான் அவனுக்கு தேவனுடைய காக்கும் வல்லமையைக் காட்டுவேன்” என்கிறார். [QE]