1. {புல்லாங்குழலில் வாசிக்க இசைக்குழுவின் தலைவனிடம் அளிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்} [PS] கர்த்தாவே, என் வார்த்தைகளைக் கேளும். [QBR2] நான் சொல்ல முயற்சிப்பதை புரிந்துகொள்ளும். [QBR]
2. எனது தேவனாகிய அரசனே, [QBR2] என் ஜெபத்தைக் கேளும். [QBR]
3. கர்த்தாவே, என் அன்பளிப்புகளை காலைதோறும் உமக்கு படைக்கிறேன். [QBR2] உம்மை உதவிக்காக நோக்குகிறேன், நீர் என் ஜெபங்களைக் கேளும்.
4. தேவனே, தீய ஜனங்கள் உம்மருகே வருவதை நீர் விரும்புகிறதில்லை. [QBR2] தீய ஜனங்கள் உம்மை ஆராதிக்க முடியாது. [QBR]
5. மூடர் உம்மிடம் வர இயலாது, [QBR2] தீமை செய்யும் ஜனங்களை நீர் வெறுக்கிறீர். [QBR]
6. பொய் கூறும் ஜனங்களை நீர் அழிக்கிறீர். [QBR2] பிறரைத் தாக்குவதற்காக இரகசியமாகத் திட்டமிடுவோரைக் கர்த்தர் வெறுக்கிறார்.
7. கர்த்தாவே, உமது மிகுந்த இரக்கத்தினால் நான் உமது ஆலயத்திற்கு வருவேன். [QBR2] உமது பரிசுத்த ஆலயத்தை நோக்கித் தலை தாழ்த்தி அச்சத்தோடும், மரியாதையோடும் உம்மை வணங்குவேன். [QBR]
8. கர்த்தாவே, சரியான வாழ்க்கை வாழ உமது வழியைக்காட்டும். [QBR2] ஜனங்கள் எனது குறைகளைத் தேடுகிறார்கள். [QBR2] எனவே நான் எவ்வாறு வாழ நீர் விரும்புகிறீரோ, அவ்வழியை எனக்குக் காட்டும். [QBR]
9. அந்த ஜனங்கள் உண்மை பேசுவதில்லை அவர்கள் உண்மையைப் புரட்டும் பொய்யர்கள். [QBR2] அவர்கள் வாய்கள் திறந்த கல்லறைகளைப் போன்றவை. [QBR] அவர்கள் பிறரிடம் நயமான மொழிகளைச் சொல்வார்கள். [QBR2] ஆனால், அவர்கள் கண்ணியில் சிக்கவைப்பதற்காகவே அவ்வாறு செய்வார்கள். [QBR]
10. தேவனே, அவர்களைத் தண்டியும். [QBR2] அவர்கள் தங்கள் வலையிலேயே விழட்டும். [QBR] அந்த ஜனங்கள் உமக்கெதிராகத் திரும்புகிறார்கள். [QBR2] எனவே அவர்களின் எண்ணிக்கையற்ற குற்றங்களுக்காக அவர்களைத் தண்டியும். [QBR]
11. ஆனால் தேவனை நம்பும் ஜனங்கள் களிகூரட்டும். [QBR2] என்றென்றும் அவர்கள் மகிழ்ச்சியடையட்டும். [QBR2] தேவனே, உமது நாமத்தை நேசிக்கும் ஜனங்களைப் பாதுகாத்து, பெலனைத் தாரும். [QBR]
12. கர்த்தாவே, நல்லோருக்கு நீர் நன்மை செய்தால் [QBR2] அவர்களைக் காக்கும் பெருங்கேடகமாவீர். [PE]