1. எல்லா தேசங்களே, இதைக் கேளுங்கள். [QBR2] பூமியில் வாழும் ஜனங்களே, எல்லோரும் இதைக் கேளுங்கள். [QBR2]
2. ஏழையும் பணக்காரருமான ஒவ்வொரு வரும் கேட்கவேண்டும். [QBR]
3. ஞானமும் புத்திசாலித்தனமுமான சில செய்திகளை நான் உங்களுக்குக் கூறுவேன். [QBR]
4. நான் உவமையான கதைகளைக் கேட்டேன். [QBR2] இப்போது என் சுரமண்டலத்தை இசைத்து அக்கதைகளின் பாடல்களை உங்களுக்குப் பாடுவேன்.
5. தொல்லைகள் வரும்போது நான் ஏன் அஞ்ச வேண்டும்? [QBR2] தீயோர் என்னைச் சூழ்ந்து அகப்படுத்த முயலும்போது நான் ஏன் அஞ்சவேண்டும்? [QBR]
6. பலமும் செல்வமும் தங்களைப் பாதுகாக்கு மென்று சிலர் நினைக்கிறார்கள். [QBR2] ஆனால் அந்த ஜனங்கள் மூடர்களே. [QBR]
7. மனிதனான எந்த நண்பனும் உன்னை மீட்க இயலாது. [QBR2] நீ தேவனுக்கு லஞ்சம் தர முடியாது. [QBR]
8. ஒருவன் தனது ஜீவனை மீட்டுக்கொள்வதற்குரிய பணத்தை [QBR2] ஒருபோதும் சம்பாதித்து விட முடியாது. [QBR]
9. என்றென்றும் வாழும் உரிமையைப் பெறவும், [QBR2] கல்லறையில் தன் உடல் அழியாமல் காக்கவும், தேவையான பணத்தை ஒருவன் ஒருபோதும் அடைய முடியாது. [QBR]
10. பாருங்கள், மூடரும் அறிவீனரும் மடிவதைப் போலவே, ஞானிகளும் இறக்கிறார்கள். [QBR2] பிறர் அவர்களின் செல்வத்தைப் பெறுகிறார்கள். [QBR]
11. கல்லறையே என்றென்றும் ஒருவனது புது வீடாகும். [QBR2] அவர்களுக்குச் சொந்தமான பல நிலங்கள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. [QBR]
12. சிலர் செல்வந்தராயிருந்தாலும் இங்கே நிரந்தரமாக வாழ்ந்துவிட முடியாது. [QBR2] எல்லோரும் மிருகங்களைப்போலவே மடிவார்கள். [QBR]
13. மூடரான மனிதருக்கும், [QBR2] தங்கள் செல்வங்களினால் திருப்தியடைந்திருக்கிற அனைவருக்கும் இதுவே சம்பவிக்கிறது. [QBR]
14. எல்லா ஜனங்களும் ஆட்டு மந்தையைப் போன்றே இருக்கின்றனர். [QBR2] கல்லறையே அவர்கள் வாசஸ்தலம், மரணமே அவர்கள் மேய்ப்பன். [QBR2] அவர்கள் சரீரங்கள் அழிந்து கல்லறைக்குள் நாறும்.
15. ஆனால் தேவன் எனக்காக விலையைக் கொடுத்து என் உயிரை மீட்பார். [QBR2] கல்லறையின் வலிமையிலிருந்து என்னை அவர் மீட்பார்!
16. சிலர் செல்வந்தராயிருப்பதினால் அவர்களுக்கு அஞ்சாதீர்கள். [QBR2] சிலர் பெரிய அழகிய மாளிகைகளில் வசிப்பதால் அவர்களுக்கு அஞ்சாதீர்கள். [QBR]
17. அவர்கள் இறக்கும்போது தங்களோடு எந்தப் பொருளையும் எடுத்துச் செல்லமாட்டார்கள். [QBR2] அந்த அழகிய பொருட்களில் எதையும் அவர்கள் எடுத்துச் செல்லமுடியாது. [QBR]
18. மனிதர்கள் வாழ்நாளின்போது தேவனை வாழ்த்தவேண்டும். [QBR2] தேவன் மனிதருக்கு நல்லவற்றைச் செய்கையில் அவர்கள் தேவனை வாழ்த்தவேண்டும். [QBR]
19. அந்த ஜனங்கள் தங்கள் முற்பிதாக்களோடு சென்று அடையுங்காலம் வரும். [QBR2] அவர்கள் மீண்டும் பகலின் ஒளியைக் காண்பதில்லை. [QBR]
20. ஜனங்கள் செல்வத்தைத் தங்களுக்கென வைத்துக்கொள்ள முடியாது. [QBR2] மிருகங்களைப் போலவே ஒவ்வொருவனும் மரிப்பான். [PE]