1. {#2கோராகின் புத்திரரின், இராகத் தலைவனுக்கு அளிக்கப்பட்ட ஒரு பாடல் } [QS]எல்லா தேசங்களே, இதைக் கேளுங்கள். [QE][QS2]பூமியில் வாழும் ஜனங்களே, எல்லோரும் இதைக் கேளுங்கள். [QE]
[QS2]2. ஏழையும் பணக்காரருமான ஒவ்வொரு வரும் கேட்கவேண்டும். [QE]
3. [QS]ஞானமும் புத்திசாலித்தனமுமான சில செய்திகளை நான் உங்களுக்குக் கூறுவேன். [QE]
4. [QS]நான் உவமையான கதைகளைக் கேட்டேன். [QE][QS2]இப்போது என் சுரமண்டலத்தை இசைத்து அக்கதைகளின் பாடல்களை உங்களுக்குப் பாடுவேன். [QE][PBR]
5. [QS]தொல்லைகள் வரும்போது நான் ஏன் அஞ்ச வேண்டும்? [QE][QS2]தீயோர் என்னைச் சூழ்ந்து அகப்படுத்த முயலும்போது நான் ஏன் அஞ்சவேண்டும்? [QE]
6. [QS]பலமும் செல்வமும் தங்களைப் பாதுகாக்கு மென்று சிலர் நினைக்கிறார்கள். [QE][QS2]ஆனால் அந்த ஜனங்கள் மூடர்களே. [QE]
7. [QS]மனிதனான எந்த நண்பனும் உன்னை மீட்க இயலாது. [QE][QS2]நீ தேவனுக்கு லஞ்சம் தர முடியாது. [QE]
8. [QS]ஒருவன் தனது ஜீவனை மீட்டுக்கொள்வதற்குரிய பணத்தை [QE][QS2]ஒருபோதும் சம்பாதித்து விட முடியாது. [QE]
9. [QS]என்றென்றும் வாழும் உரிமையைப் பெறவும், [QE][QS2]கல்லறையில் தன் உடல் அழியாமல் காக்கவும், தேவையான பணத்தை ஒருவன் ஒருபோதும் அடைய முடியாது. [QE]
10. [QS]பாருங்கள், மூடரும் அறிவீனரும் மடிவதைப் போலவே, ஞானிகளும் இறக்கிறார்கள். [QE][QS2]பிறர் அவர்களின் செல்வத்தைப் பெறுகிறார்கள். [QE]
11. [QS]கல்லறையே என்றென்றும் ஒருவனது புது வீடாகும். [QE][QS2]அவர்களுக்குச் சொந்தமான பல நிலங்கள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. [QE]
12. [QS]சிலர் செல்வந்தராயிருந்தாலும் இங்கே நிரந்தரமாக வாழ்ந்துவிட முடியாது. [QE][QS2]எல்லோரும் மிருகங்களைப்போலவே மடிவார்கள். [QE]
13. [QS]மூடரான மனிதருக்கும், [QE][QS2]தங்கள் செல்வங்களினால் திருப்தியடைந்திருக்கிற அனைவருக்கும் இதுவே சம்பவிக்கிறது. [QE]
14. [QS]எல்லா ஜனங்களும் ஆட்டு மந்தையைப் போன்றே இருக்கின்றனர். [QE][QS2]கல்லறையே அவர்கள் வாசஸ்தலம், மரணமே அவர்கள் மேய்ப்பன். [QE][QS2]அவர்கள் சரீரங்கள் அழிந்து கல்லறைக்குள் நாறும். [QE][PBR]
15. [QS]ஆனால் தேவன் எனக்காக விலையைக் கொடுத்து என் உயிரை மீட்பார். [QE][QS2]கல்லறையின் வலிமையிலிருந்து என்னை அவர் மீட்பார்! [QE][PBR]
16. [QS]சிலர் செல்வந்தராயிருப்பதினால் அவர்களுக்கு அஞ்சாதீர்கள். [QE][QS2]சிலர் பெரிய அழகிய மாளிகைகளில் வசிப்பதால் அவர்களுக்கு அஞ்சாதீர்கள். [QE]
17. [QS]அவர்கள் இறக்கும்போது தங்களோடு எந்தப் பொருளையும் எடுத்துச் செல்லமாட்டார்கள். [QE][QS2]அந்த அழகிய பொருட்களில் எதையும் அவர்கள் எடுத்துச் செல்லமுடியாது. [QE]
18. [QS]மனிதர்கள் வாழ்நாளின்போது தேவனை வாழ்த்தவேண்டும். [QE][QS2]தேவன் மனிதருக்கு நல்லவற்றைச் செய்கையில் அவர்கள் தேவனை வாழ்த்தவேண்டும். [QE]
19. [QS]அந்த ஜனங்கள் தங்கள் முற்பிதாக்களோடு சென்று அடையுங்காலம் வரும். [QE][QS2]அவர்கள் மீண்டும் பகலின் ஒளியைக் காண்பதில்லை. [QE]
20. [QS]ஜனங்கள் செல்வத்தைத் தங்களுக்கென வைத்துக்கொள்ள முடியாது. [QE][QS2]மிருகங்களைப் போலவே ஒவ்வொருவனும் மரிப்பான். [QE]