1. {கோராகின் புத்திரருக்கு அளிக்கப்பட்ட ஒரு துதியின் பாடல்} [PS] கர்த்தர் மேன்மையானவர். [QBR2] தேவன் தமது பரிசுத்த நகரில் துதிக்குரியவர். [QBR]
2. தேவனுடைய பரிசுத்த நகரம் அழகானது. [QBR2] அது உலகை சுற்றியுள்ள அனைத்து ஜனங்களையும் மகிழ்ச்சியடைச் செய்யும். [QBR] சீயோன் மலை உயர்ந்த, பரிசுத்த மலை. [QBR2] அதுவே பேரரசரின் நகரமாகும். [QBR]
3. அந்நகரத்து அரண்மனைகளில் [QBR2] தேவனே கோட்டை என்று எண்ணப்படுவார். [QBR]
4. ஒருமுறை, சில அரசர்கள் சந்தித்து, [QBR2] இந்நகரைத் தாக்கத் திட்டமிட்டார்கள். [QBR] அவர்கள் ஒருமித்து நகரை நோக்கி அணிவகுத்தார்கள். [QBR2]
5. அவ்வரசர்கள் அந்நகரைக் கண்டதும், ஆச்சரியமடைந்து, பயந்து, திரும்பி ஓடினார்கள். [QBR]
6. அச்சம் அவர்களை ஆட்கொண்டது. [QBR2] அவர்கள் பயத்தால் நடுங்கினார்கள். [QBR]
7. தேவனே, நீர் வலிய கிழக்குக் காற்றால் [QBR2] பெருங்கப்பல்களை உடைத்தீர். [QBR]
8. ஆம், உமது வல்லமையான காரியங்களை நாங்கள் கேள்விப்பட்டோம். [QBR2] ஆனால், சர்வ வல்லமையுள்ள கர்த்தருடைய நகரில், எங்கள் தேவனுடைய நகரில் அது நிகழக்கண்டோம். [QBR2] தேவன் அந்நகரை என்றும் வலிமையுள்ள நகராக்கினார்.
9. தேவனே, உமது ஆலயத்தில் உமது அன்பான தயவைக் கவனமாக நினைத்துப் பார்த்தோம். [QBR]
10. தேவனே, நீர் புகழ் வாய்ந்தவர், [QBR2] பூமியெங்கும் ஜனங்கள் உம்மைத் துதிக்கின்றனர். [QBR2] நீர் மிக நல்லவர் என்பதை அனைவரும் அறிவோம். [QBR]
11. தேவனே, உமது நல்ல முடிவுகளால் சீயோன் மலை மகிழ்கிறது. [QBR2] யூதாவின் ஊர்கள் களிகூருகின்றன. [QBR]
12. சீயோனைச் சுற்றி நட. [QBR2] நகரைப் பார். கோபுரங்களை எண்ணிப்பார். [QBR]
13. அந்த உயர்ந்த சுவர்களைப் பார். [QBR2] சீயோனின் அரண்மனைகளை வியப்புடன் பார். [QBR2] வரும் தலைமுறைக்கு அதைப்பற்றி நீ கூறலாம். [QBR]
14. இந்த தேவன் என்றென்றும் உண்மையாகவே நமது தேவன். [QBR2] அவர் என்றென்றும் நம்மை வழி நடத்துவார். [PE]