1. {#2கோராகின் புத்திரருக்கு அளிக்கப்பட்ட ஒரு துதியின் பாடல் } [QS]கர்த்தர் மேன்மையானவர். [QE][QS2]தேவன் தமது பரிசுத்த நகரில் துதிக்குரியவர். [QE]
2. [QS]தேவனுடைய பரிசுத்த நகரம் அழகானது. [QE][QS2]அது உலகை சுற்றியுள்ள அனைத்து ஜனங்களையும் மகிழ்ச்சியடைச் செய்யும். [QE][QS]சீயோன் மலை உயர்ந்த, பரிசுத்த மலை. [QE][QS2]அதுவே பேரரசரின் நகரமாகும். [QE]
3. [QS]அந்நகரத்து அரண்மனைகளில் [QE][QS2]தேவனே கோட்டை என்று எண்ணப்படுவார். [QE]
4. [QS]ஒருமுறை, சில அரசர்கள் சந்தித்து, [QE][QS2]இந்நகரைத் தாக்கத் திட்டமிட்டார்கள். [QE][QS]அவர்கள் ஒருமித்து நகரை நோக்கி அணிவகுத்தார்கள். [QE]
[QS2]5. அவ்வரசர்கள் அந்நகரைக் கண்டதும், ஆச்சரியமடைந்து, பயந்து, திரும்பி ஓடினார்கள். [QE]
6. [QS]அச்சம் அவர்களை ஆட்கொண்டது. [QE][QS2]அவர்கள் பயத்தால் நடுங்கினார்கள். [QE]
7. [QS]தேவனே, நீர் வலிய கிழக்குக் காற்றால் [QE][QS2]பெருங்கப்பல்களை உடைத்தீர். [QE]
8. [QS]ஆம், உமது வல்லமையான காரியங்களை நாங்கள் கேள்விப்பட்டோம். [QE][QS2]ஆனால், சர்வ வல்லமையுள்ள கர்த்தருடைய நகரில், எங்கள் தேவனுடைய நகரில் அது நிகழக்கண்டோம். [QE][QS2]தேவன் அந்நகரை என்றும் வலிமையுள்ள நகராக்கினார். [QE][PBR]
9. [QS]தேவனே, உமது ஆலயத்தில் உமது அன்பான தயவைக் கவனமாக நினைத்துப் பார்த்தோம். [QE]
10. [QS]தேவனே, நீர் புகழ் வாய்ந்தவர், [QE][QS2]பூமியெங்கும் ஜனங்கள் உம்மைத் துதிக்கின்றனர். [QE][QS2]நீர் மிக நல்லவர் என்பதை அனைவரும் அறிவோம். [QE]
11. [QS]தேவனே, உமது நல்ல முடிவுகளால் சீயோன் மலை மகிழ்கிறது. [QE][QS2]யூதாவின் ஊர்கள் களிகூருகின்றன. [QE]
12. [QS]சீயோனைச் சுற்றி நட. [QE][QS2]நகரைப் பார். கோபுரங்களை எண்ணிப்பார். [QE]
13. [QS]அந்த உயர்ந்த சுவர்களைப் பார். [QE][QS2]சீயோனின் அரண்மனைகளை வியப்புடன் பார். [QE][QS2]வரும் தலைமுறைக்கு அதைப்பற்றி நீ கூறலாம். [QE]
14. [QS]இந்த தேவன் என்றென்றும் உண்மையாகவே நமது தேவன். [QE][QS2]அவர் என்றென்றும் நம்மை வழி நடத்துவார். [QE]