1. {#2அலமோத் என்னும் கருவியில் வாசிக்கும்படி கொடுக்கப்பட்ட கோராகின் குடும்பத்தின் இராகத் தலைவனுக்கு, ஒரு பாடல் } [QS]தேவன் நம் வல்லமையின் ஊற்றாயிருக்கிறார். [QE][QS2]தொல்லைகள் சூழ்கையில் நாம் அவரிடமிருந்து எப்பொழுதும் உதவி பெறலாம். [QE]
2. [QS]எனவே பூமி நடுங்கினாலும், [QE][QS2]மலைகள் கடலில் வீழ்ந்தாலும் நாம் அஞ்சோம். [QE]
3. [QS]கடல் கொந்தளித்து இருள் சூழ்ந்தாலும் [QE][QS2]பர்வ தங்கள் நடுங்கி அதிர்ந்தாலும் நாம் அஞ்சோம். [QE][PBR]
4. [QS]உன்னத தேவனுடைய பரிசுத்த நகரத்திற்கு, [QE][QS2]மகிழ்ச்சி அளிக்கிற ஓடைகளையுடைய நதி ஒன்று இருக்கிறது. [QE]
5. [QS]அந்நகரம் அழியாதபடி தேவன் அங்கிருக்கிறார். [QE][QS2]சூரிய உதயத்திற்குமுன் தேவன் அதற்கு உதவுவார். [QE]
6. [QS]தேசங்கள் பயத்தால் நடுங்கும். [QE][QS2]கர்த்தர் சத்தமிடுகையில் அந்த இராஜ்யங்கள் விழும், பூமி சீர்குலையும். [QE]
7. [QS]சர்வ வல்லமையுள்ள கர்த்தர் நம்மோடிருக்கிறார். [QE][QS2]யாக்கோபின் தேவன் நமது பாதுகாப்பிடம். [QE][PBR]
8. [QS]கர்த்தர் செய்யும் வல்லமை மிக்க காரியங்களைப் பாருங்கள். [QE][QS2]அவர் பூமியின்மேல் செய்துள்ள பயத்திற்குரிய காரியங்களைப் பாருங்கள். [QE]
9. [QS]பூமியில் எவ்விடத்தில் போர் நிகழ்ந்தாலும் கர்த்தர் அதை நிறுத்த வல்லவர். [QE][QS2]வீரர்களின் வில்லுகளை அவர் முறித்து அவர்கள் ஈட்டிகளைச் சிதறடிக்கிறார். [QE][QS2]இரதங்களை நெருப்பினால் அழிக்க தேவன் வல்லவர். [QE][PBR]
10. [QS]தேவன், “நீங்கள் சண்டையிடுவதை நிறுத்தி அமைதியாயிருந்து நானே தேவன் என உணருங்கள்! [QE][QS2]நான் பூமியில் பெருமையுற்று தேசங்களில் வாழ்த்தப்படுவேன்” என்று கூறினார். [QE][PBR]
11. [QS]சர்வ வல்லமையுள்ள கர்த்தர் நம்மோடிருக்கிறார். [QE][QS2]யாக்கோபின் தேவன் நமது பாதுகாப்பிடம். [QE]