1. அரசனுக்கு இவற்றை எழுதுகையில் அழகு சொற்கள் என் இதயத்தை நிரப்பும். [QBR2] தேர்ந்த எழுத்தாளனின் எழுதுகோல் வெளிப்படுத்தும் சொற்களாய் என் நாவிலிருந்து சொற்கள் வெளிப்படுகின்றன.
2. நீரே யாவரினும் அழகானவர்! [QBR2] நீர் பேச்சில் வல்லவர், எனவே தேவன் உம்மை என்றென்றும் ஆசீர்வதிப்பார். [QBR]
3. வாளை எடும். [QBR2] மேன்மையான ஆடைகளை அணியும். [QBR]
4. நீர் அற்புதமாகக் காட்சியளிக்கிறீர்! [QBR2] நன்மைக்காகவும், நீதிக்காகவும் சென்று போரில் வெல்லும். [QBR2] அதிசயங்களைச் செய்வதற்கு வல்லமைமிக்க உமது வலக்கரத்தைப் பயன்படுத்தும். [QBR]
5. உமது அம்புகள் ஆயத்தமாயுள்ளன. [QBR2] நீர் பலரைத் தோற்கடிப்பீர். உமது பகைவர்கள் மீது அரசனாயிரும். [QBR]
6. தேவனே, உமது ஆட்சி என்றென்றும் தொடரும். [QBR2] நன்மையே உமது செங்கோலாகும். [QBR]
7. நீர் நன்மையை விரும்பித் தீமையைப் பகைக்கிறீர். [QBR2] எனவே உமது தேவன் உம் நண்பர்களுக்கு மேலாக உம்மை அரசனாக்கினார். [QBR]
8. வெள்ளைப்போளம், இலவங்கம், சந்தனம் ஆகியவற்றின் நறுமணம் உம் ஆடைகளில் வீசும். [QBR2] தந்தத்தால் மூடப்பட்ட அரண்மனைகளிலிருந்து உம்மை மகிழ்வூட்டும் இசை பரவும். [QBR]
9. மணத்தோழியரே அரசனின் குமாரத்திகள் ஆவர். [QBR2] உமது வலப் பக்கத்தில் மணப்பெண் பொன்கிரீடம் சூடி நிற்கிறாள். [QBR]
10. மகளே, கேள், [QBR2] கவனமாகக் கேள், நீ புரிந்துகொள்வாய். [QBR] உன் ஜனங்களையும், உன் தந்தையின் குடும்பத்தையும் மறந்துவிடு. [QBR2]
11. அரசர் உன் அழகை விரும்புகிறார். [QBR] அவர் உன் புது மணமகன். [QBR2] நீ அவரைப் பெருமைப்படுத்துவாய். [QBR]
12. தீருவின் செல்வந்தர்கள் ஜனங்கள் உனக்குப் பரிசுகள் தருவார்கள். [QBR2] அவர்கள் உன்னைக் காண விரும்புவார்கள்.
13. அரச குமாரத்தி [QBR2] பொன்னில் பதிக்கப் பெற்ற விலையுயர்ந்த அழகிய மணியைப் போன்றவள். [QBR]
14. மணமகள் அழகிய ஆடையணிந்து அரசனிடம் அழைத்துவரப்பட்டாள். [QBR2] மணத் தோழியர் அவளைத் தொடர்ந்தனர். [QBR]
15. அவர்கள் மகிழ்ச்சி பொங்க வந்தனர். [QBR2] மனமகிழ்வோடு அரண்மனைக்குள் நுழைந்தனர்.
16. அரசே, உம் மகன்கள் உமக்குப் பின் ஆட்சி செய்வார்கள். [QBR2] தேசம் முழுவதும் அவர்களை ஆளச் செய்வீர். [QBR]
17. உமது நாமத்தை என்றென்றும் புகழ் பெறச் செய்வேன். [QBR2] என்றென்றும் ஜனங்கள் உம்மைத் துதிப்பார்கள். [PE]