1. தேவனே, நாங்கள் உம்மைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறோம். [QBR2] எங்கள் முற்பிதாக்கள் அவர்களுடைய வாழ்நாளில் நீர் செய்தவற்றை எங்களுக்குக் கூறியிருக்கிறார்கள். [QBR2] கடந்தகாலத்தில் நீர் செய்தவற்றை அவர்கள் எங்களுக்குக் கூறியிருக்கிறார்கள். [QBR]
2. தேவனே, உமது மிகுந்த வல்லமையினால் [QBR2] பிறரிடமிருந்து இந்த தேசத்தை எடுத்து எங்களுக்கு நீர் கொடுத்தீர். [QBR] அந்நியர்களை அழித்தீர். [QBR2] இத்தேசத்தினின்று அவர்களைத் துரத்தி விலக்கினீர். [QBR]
3. எங்கள் முற்பிதாக்களின் வாள்கள் தேசத்தைக் கைப்பற்றவில்லை. [QBR2] அவர்களின் பலமான கரங்கள் அவர்களை வெற்றி வீரர்களாக்கவில்லை. [QBR] நீர் எங்கள் முன்னோரோடிருந்ததால் அவ்வாறு நிகழ்ந்தது. [QBR2] தேவனே, உமது பெரிய வல்லமை எங்கள் முற்பிதாக்களைக் காத்தது. ஏனெனில் நீர் அவர்களை நேசித்தீர். [QBR]
4. என் தேவனே, நீர் என் அரசர். [QBR2] நீர் கட்டளையிடும், யாக்கோபின் ஜனங்களை வெற்றிக்கு நேராக வழிநடத்தும். [QBR]
5. என் தேவனே, உமது உதவியால் பகைவர்களைத் துரத்துவோம். [QBR2] உமது பெயரின் உதவியோடு பகைவர்கள்மீது நடப்போம். [QBR]
6. நான் என் வில்லுகளையும், அம்புகளையும் நம்பமாட்டேன். [QBR2] என் வாள் என்னைக் காப்பாற்றாது. [QBR]
7. தேவனே, நீர் எங்களை எகிப்திலிருந்து மீட்டீர். [QBR2] எங்கள் பகைவர்களை வெட்கமடையச் செய்தீர். [QBR]
8. தேவனை நாங்கள் எப்பொழுதும் துதிப்போம். [QBR2] உமது நாமத்தை எந்நாளும் துதிப்போம்!
9. ஆனால், தேவனே, நீர் எங்களை விட்டு விலகினீர். [QBR2] நீர் எங்களை வெட்கமடையச் செய்கிறீர். [QBR2] யுத்தத்திற்கு நீர் எங்களோடு வரவில்லை. [QBR]
10. எங்கள் பகைவர்கள் எங்களைத் துரத்தச் செய்தீர். [QBR2] எங்கள் பகைவர்கள் எங்கள் செல்வத்தை எடுத்துக்கொண்டனர். [QBR]
11. உணவாகும் ஆடுகளைப்போல் எங்களைக் கொடுத்துவிட்டீர். [QBR2] தேசங்களில் எல்லாம் எங்களைச் சிதறடித்தீர். [QBR]
12. தேவனே, உமது ஜனங்களை எந்தப் பயனுமின்றி விற்றுப்போட்டீர். [QBR2] நீர் எங்களை விலை பேசவுமில்லை. [QBR]
13. எங்கள் அயலாரிடம் எங்களை நிந்தையாக்கினீர். [QBR2] அயலார்கள் எங்களைப் பார்த்து நகைத்து எங்களைக் கேலி செய்கிறார்கள். [QBR]
14. ஜனங்கள் கூறும் வேடிக்கைக் கதைகளில் ஒன்றானோம். [QBR2] தங்களுக்கென நாடற்ற ஜனங்கள் கூட எங்களைப் பார்த்து நகைத்துத் தலையைக் குலுக்குகிறார்கள். [QBR]
15. நான் நாணத்தால் மூடப்பட்டேன். [QBR2] நான் முழுவதும் வெட்கத்தால் நாணுகிறேன். [QBR]
16. என் பகைவர்கள் என்னை அவமானப்படச் செய்தனர். [QBR2] என் பகைவர்கள் என்னைக் கேலி செய்வதின் மூலம் பழிவாங்க முயற்சி செய்கிறார்கள். [QBR]
17. தேவனே, நாங்கள் உம்மை மறக்கவில்லை. [QBR2] ஆயினும் நீர் இவற்றையெல்லாம் எங்களுக்குச் செய்கிறீர். [QBR2] உம்மோடு உடன்படிக்கை செய்து கொண்டபோது நாங்கள் பொய்யுரைக்கவில்லை. [QBR]
18. தேவனே, நாங்கள் உம்மை விட்டு விலகிச் செல்லவில்லை. [QBR2] உம்மைப் பின்பற்றுவதை நிறுத்தவில்லை. [QBR]
19. ஆனால் தேவனே, ஓநாய்கள் வாழும் இடத்தில் எங்களைத் தள்ளினீர். [QBR2] மரண இருளைப் போன்ற இடத்தில் எங்களை வைத்தீர். [QBR]
20. தேவனுடைய நாமத்தை நாங்கள் மறந்தோமா? [QBR2] பிற தெய்வங்களிடம் ஜெபித்தோமா? இல்லை! [QBR]
21. உண்மையாகவே, தேவன் இவற்றை அறிகிறார். [QBR2] எங்கள் ஆழ்ந்த இரகசியங்களையும் அவர் அறிந்திருக்கிறார். [QBR]
22. தேவனே, உமக்காக ஒவ்வொரு நாளும் நாங்கள் கொல்லப்படுகிறோம். [QBR2] கொல்லப்படுவதற்கு அழைத்துச்செல்லப்படும் ஆடுகளைப் போலானோம். [QBR]
23. என் ஆண்டவரே, எழுந்திரும்! [QBR2] ஏன் நித்திரை செய்கிறீர்? எழுந்திரும்! [QBR2] எப்பொழுதும் எங்களைக் கைவிட்டு விடாதேயும். [QBR]
24. தேவனே, எங்களிடமிருந்து ஏன் ஒளிந்து கொண்டிருக்கிறீர்? [QBR2] எங்கள் வேதனைகளையும், தொல்லைகளையும் நீர் மறந்து விட்டீரா? [QBR]
25. நாங்கள் புழுதியில் தள்ளப்பட்டோம், [QBR2] தரையின்மேல் தலைகுப்புறப் படுத்துக்கொண்டிருக்கிறோம். [QBR]
26. தேவனே, எழுந்திருந்து எங்களுக்கு உதவும். [QBR2] உமது உண்மையான அன்பினால் எங்களைப் பாதுகாத்தருளும். [PE]