1. {#2கோராகின் குடும்பத்தைச் சேர்ந்த இராகத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட ‘மஸ்கீல்’ என்னும் பாடல் } [QS]தேவனே, நாங்கள் உம்மைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறோம். [QE][QS2]எங்கள் முற்பிதாக்கள் அவர்களுடைய வாழ்நாளில் நீர் செய்தவற்றை எங்களுக்குக் கூறியிருக்கிறார்கள். [QE][QS2]கடந்தகாலத்தில் நீர் செய்தவற்றை அவர்கள் எங்களுக்குக் கூறியிருக்கிறார்கள். [QE]
2. [QS]தேவனே, உமது மிகுந்த வல்லமையினால் [QE][QS2]பிறரிடமிருந்து இந்த தேசத்தை எடுத்து எங்களுக்கு நீர் கொடுத்தீர். [QE][QS]அந்நியர்களை அழித்தீர். [QE][QS2]இத்தேசத்தினின்று அவர்களைத் துரத்தி விலக்கினீர். [QE]
3. [QS]எங்கள் முற்பிதாக்களின் வாள்கள் தேசத்தைக் கைப்பற்றவில்லை. [QE][QS2]அவர்களின் பலமான கரங்கள் அவர்களை வெற்றி வீரர்களாக்கவில்லை. [QE][QS]நீர் எங்கள் முன்னோரோடிருந்ததால் அவ்வாறு நிகழ்ந்தது. [QE][QS2]தேவனே, உமது பெரிய வல்லமை எங்கள் முற்பிதாக்களைக் காத்தது. ஏனெனில் நீர் அவர்களை நேசித்தீர். [QE]
4. [QS]என் தேவனே, நீர் என் அரசர். [QE][QS2]நீர் கட்டளையிடும், யாக்கோபின் ஜனங்களை வெற்றிக்கு நேராக வழிநடத்தும். [QE]
5. [QS]என் தேவனே, உமது உதவியால் பகைவர்களைத் துரத்துவோம். [QE][QS2]உமது பெயரின் உதவியோடு பகைவர்கள்மீது நடப்போம். [QE]
6. [QS]நான் என் வில்லுகளையும், அம்புகளையும் நம்பமாட்டேன். [QE][QS2]என் வாள் என்னைக் காப்பாற்றாது. [QE]
7. [QS]தேவனே, நீர் எங்களை எகிப்திலிருந்து மீட்டீர். [QE][QS2]எங்கள் பகைவர்களை வெட்கமடையச் செய்தீர். [QE]
8. [QS]தேவனை நாங்கள் எப்பொழுதும் துதிப்போம். [QE][QS2]உமது நாமத்தை எந்நாளும் துதிப்போம்! [QE][PBR]
9. [QS]ஆனால், தேவனே, நீர் எங்களை விட்டு விலகினீர். [QE][QS2]நீர் எங்களை வெட்கமடையச் செய்கிறீர். [QE][QS2]யுத்தத்திற்கு நீர் எங்களோடு வரவில்லை. [QE]
10. [QS]எங்கள் பகைவர்கள் எங்களைத் துரத்தச் செய்தீர். [QE][QS2]எங்கள் பகைவர்கள் எங்கள் செல்வத்தை எடுத்துக்கொண்டனர். [QE]
11. [QS]உணவாகும் ஆடுகளைப்போல் எங்களைக் கொடுத்துவிட்டீர். [QE][QS2]தேசங்களில் எல்லாம் எங்களைச் சிதறடித்தீர். [QE]
12. [QS]தேவனே, உமது ஜனங்களை எந்தப் பயனுமின்றி விற்றுப்போட்டீர். [QE][QS2]நீர் எங்களை விலை பேசவுமில்லை. [QE]
13. [QS]எங்கள் அயலாரிடம் எங்களை நிந்தையாக்கினீர். [QE][QS2]அயலார்கள் எங்களைப் பார்த்து நகைத்து எங்களைக் கேலி செய்கிறார்கள். [QE]
14. [QS]ஜனங்கள் கூறும் வேடிக்கைக் கதைகளில் ஒன்றானோம். [QE][QS2]தங்களுக்கென நாடற்ற ஜனங்கள் கூட எங்களைப் பார்த்து நகைத்துத் தலையைக் குலுக்குகிறார்கள். [QE]
15. [QS]நான் நாணத்தால் மூடப்பட்டேன். [QE][QS2]நான் முழுவதும் வெட்கத்தால் நாணுகிறேன். [QE]
16. [QS]என் பகைவர்கள் என்னை அவமானப்படச் செய்தனர். [QE][QS2]என் பகைவர்கள் என்னைக் கேலி செய்வதின் மூலம் பழிவாங்க முயற்சி செய்கிறார்கள். [QE]
17. [QS]தேவனே, நாங்கள் உம்மை மறக்கவில்லை. [QE][QS2]ஆயினும் நீர் இவற்றையெல்லாம் எங்களுக்குச் செய்கிறீர். [QE][QS2]உம்மோடு உடன்படிக்கை செய்து கொண்டபோது நாங்கள் பொய்யுரைக்கவில்லை. [QE]
18. [QS]தேவனே, நாங்கள் உம்மை விட்டு விலகிச் செல்லவில்லை. [QE][QS2]உம்மைப் பின்பற்றுவதை நிறுத்தவில்லை. [QE]
19. [QS]ஆனால் தேவனே, ஓநாய்கள் வாழும் இடத்தில் எங்களைத் தள்ளினீர். [QE][QS2]மரண இருளைப் போன்ற இடத்தில் எங்களை வைத்தீர். [QE]
20. [QS]தேவனுடைய நாமத்தை நாங்கள் மறந்தோமா? [QE][QS2]பிற தெய்வங்களிடம் ஜெபித்தோமா? இல்லை! [QE]
21. [QS]உண்மையாகவே, தேவன் இவற்றை அறிகிறார். [QE][QS2]எங்கள் ஆழ்ந்த இரகசியங்களையும் அவர் அறிந்திருக்கிறார். [QE]
22. [QS]தேவனே, உமக்காக ஒவ்வொரு நாளும் நாங்கள் கொல்லப்படுகிறோம். [QE][QS2]கொல்லப்படுவதற்கு அழைத்துச்செல்லப்படும் ஆடுகளைப் போலானோம். [QE]
23. [QS]என் ஆண்டவரே, எழுந்திரும்! [QE][QS2]ஏன் நித்திரை செய்கிறீர்? எழுந்திரும்! [QE][QS2]எப்பொழுதும் எங்களைக் கைவிட்டு விடாதேயும். [QE]
24. [QS]தேவனே, எங்களிடமிருந்து ஏன் ஒளிந்து கொண்டிருக்கிறீர்? [QE][QS2]எங்கள் வேதனைகளையும், தொல்லைகளையும் நீர் மறந்து விட்டீரா? [QE]
25. [QS]நாங்கள் புழுதியில் தள்ளப்பட்டோம், [QE][QS2]தரையின்மேல் தலைகுப்புறப் படுத்துக்கொண்டிருக்கிறோம். [QE]
26. [QS]தேவனே, எழுந்திருந்து எங்களுக்கு உதவும். [QE][QS2]உமது உண்மையான அன்பினால் எங்களைப் பாதுகாத்தருளும். [QE]