1. தேவனே, உம்மைப் பின்பற்றாதவன் ஒருவன் இருக்கிறான். [QBR2] அவன் வஞ்சகன், பொய்யன். [QBR] தேவனே, நான் நீதிமான் என்பதை நிரூபியும், என்னைப் பாதுகாத்தருளும். [QBR2] அம்மனிதனிடமிருந்து என்னைத் தப்புவியும். [QBR]
2. தேவனே, நீர் என் பாதுகாப்பிடம். [QBR2] ஏன் என்னைக் கைவிட்டீர்? [QBR2] பகைவரிடமிருந்து தப்பும் வழியை நீர் ஏன் எனக்குக் காட்டவில்லை? [QBR]
3. தேவனே, உமது ஒளியும் உண்மையும் என் மேல் பிகாசிப்பதாக. [QBR2] உமது பரிசுத்த மலைக்கு அவை வழிகாட்டும். [QBR2] உமது வீட்டிற்கு அவை என்னை வழிநடத்தும். [QBR]
4. நான் தேவனுடைய பலிபீடத்திற்கு வருவேன். [QBR2] என்னை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்கிற தேவனிடம் நான் வருவேன். [QBR2] தேவனே, என் தேவனே, உம்மைச் சுரமண்டலத்தால் வாழ்த்துவேன்.
5. ஏன் நான் துக்கமாயிருக்க வேண்டும்? [QBR2] ஏன் நான் கலக்கம் கொள்ளவேண்டும்? [QBR] நான் தேவனுடைய உதவிக்காகக் காத்திருப்பேன். [QBR2] அவரைத் துதிக்கும் வாய்ப்பு இன்னும் எனக்கு கிடைக்கும். [QBR2] அவர் என்னை மீட்பார். [PE]