1. {#2இராகத் தலைவனுக்கு தாவீதின் பாடல் } [QS]ஏழைகள் வெற்றிபெற உதவி செய்யும் ஒருவன் பல ஆசீர்வாதங்களைப் பெறுவான். [QE][QS2]தொல்லைகள் வரும்போது கர்த்தர் அவனை மீட்பார். [QE]
2. [QS]கர்த்தர் அவனைக் காத்து அவன் வாழ்வை மீட்பார். [QE][QS2]பூமியில் அவன் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பான். [QE][QS2]அவனை அழிக்க அவனுடைய பகைவர்களை தேவன் அனுமதிக்கமாட்டார். [QE]
3. [QS]அவன் நோயுற்றுப் படுக்கையில் விழும்போது கர்த்தர் அவனுக்குப் பலமளிப்பார். [QE][QS2]அவன் நோயுற்றுப் படுக்கையில் இருக்கலாம், ஆனால் கர்த்தர் அவனைக் குணப்படுத்துவார். [QE][PBR]
4. [QS]நான், “கர்த்தாவே, என்னிடம் இரக்கமாயிரும். [QE][QS2]நான் உமக்கெதிராகப் பாவம் செய்தேன். [QE][QS2]ஆனால் என்னை மன்னித்து என்னைக் குணப்படுத்தும்!” என்றேன். [QE]
5. [QS]என் பகைவர்கள் என்னைக் குறித்துத் தீமையானவற்றைப் பேசினார்கள். [QE][QS2]அவர்கள், “அவன் எப்போது மரித்து, மறக்கப்படுவான்?” என்றார்கள். [QE]
6. [QS]சிலர் என்னைச் சந்திக்க வந்தார்கள். [QE][QS2]ஆனால் அவர்கள் உண்மையில் நினைப்பதை என்னிடம் கூறவில்லை. [QE][QS]அவர்கள் என்னைப்பற்றியச் செய்திகளை தெரிந்து கொள்ள வந்தார்கள். [QE][QS2]அதன் பிறகு அவர்கள் சென்று வதந்திகளை பரப்புகிறார்கள். [QE]
7. [QS]என்னைப்பற்றிய தீயசொற்களை என் பகைவர்கள் இரகசியமாக முணுமுணுக்கிறார்கள். [QE][QS2]அவர்கள் எனக்கெதிராகத் திட்டமிடுகிறார்கள். [QE]
8. [QS]அவர்கள், “அவன் ஏதோ தவுறு செய்தான், எனவே நோயுற்றான். [QE][QS2]அவன் குணப்படப் போவதில்லை” என்கிறார்கள். [QE]
9. [QS]என் சிறந்த நண்பன் என்னோடு சாப்பிட்டான். [QE][QS2]நான் அவனை நம்பினேன். [QE][QS2]ஆனால் இப்போது அவனும் எனக்கெதிராகத் திரும்பிவிட்டான். [QE]
10. [QS]எனவே கர்த்தாவே, என்னிடம் இரக்கமாயிரும். [QE][QS2]நான் குணமாகி எழுந்திருக்கட்டும், அவர்களுக்குப் பதில் அளிப்பேன். [QE]
11. [QS]கர்த்தாவே, என் பகைவர்கள் என்னை காயப்படுத்தாதிருக்கட்டும். [QE][QS2]அப்போது நீர் என்னை ஏற்றுக்கொண்டீர் என்பதை அறிவேன். [QE]
12. [QS]நான் களங்கமற்றிருந்தேன். நீர் எனக்கு ஆதரவளித்தீர். [QE][QS2]என்னை எழுந்திருக்கப் பண்ணி, என்றென்றும் உமக்குச் சேவை செய்யப்பண்ணும். [QE][PBR]
13. [QS]இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை வாழ்த்துங்கள். [QE][QS2]இவர் இருந்தவரும் இருக்கிறவருமானவர். [QE][PBR] [QS]ஆமென்! ஆமென்! [QE][PBR]