1. {இராகத் தலைவனுக்கு தாவீதின் பாடல்} [PS] ஏழைகள் வெற்றிபெற உதவி செய்யும் ஒருவன் பல ஆசீர்வாதங்களைப் பெறுவான். [QBR2] தொல்லைகள் வரும்போது கர்த்தர் அவனை மீட்பார். [QBR]
2. கர்த்தர் அவனைக் காத்து அவன் வாழ்வை மீட்பார். [QBR2] பூமியில் அவன் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பான். [QBR2] அவனை அழிக்க அவனுடைய பகைவர்களை தேவன் அனுமதிக்கமாட்டார். [QBR]
3. அவன் நோயுற்றுப் படுக்கையில் விழும்போது கர்த்தர் அவனுக்குப் பலமளிப்பார். [QBR2] அவன் நோயுற்றுப் படுக்கையில் இருக்கலாம், ஆனால் கர்த்தர் அவனைக் குணப்படுத்துவார்.
4. நான், “கர்த்தாவே, என்னிடம் இரக்கமாயிரும். [QBR2] நான் உமக்கெதிராகப் பாவம் செய்தேன். [QBR2] ஆனால் என்னை மன்னித்து என்னைக் குணப்படுத்தும்!” என்றேன். [QBR]
5. என் பகைவர்கள் என்னைக் குறித்துத் தீமையானவற்றைப் பேசினார்கள். [QBR2] அவர்கள், “அவன் எப்போது மரித்து, மறக்கப்படுவான்?” என்றார்கள். [QBR]
6. சிலர் என்னைச் சந்திக்க வந்தார்கள். [QBR2] ஆனால் அவர்கள் உண்மையில் நினைப்பதை என்னிடம் கூறவில்லை. [QBR] அவர்கள் என்னைப்பற்றியச் செய்திகளை தெரிந்து கொள்ள வந்தார்கள். [QBR2] அதன் பிறகு அவர்கள் சென்று வதந்திகளை பரப்புகிறார்கள். [QBR]
7. என்னைப்பற்றிய தீயசொற்களை என் பகைவர்கள் இரகசியமாக முணுமுணுக்கிறார்கள். [QBR2] அவர்கள் எனக்கெதிராகத் திட்டமிடுகிறார்கள். [QBR]
8. அவர்கள், “அவன் ஏதோ தவுறு செய்தான், எனவே நோயுற்றான். [QBR2] அவன் குணப்படப் போவதில்லை” என்கிறார்கள். [QBR]
9. என் சிறந்த நண்பன் என்னோடு சாப்பிட்டான். [QBR2] நான் அவனை நம்பினேன். [QBR2] ஆனால் இப்போது அவனும் எனக்கெதிராகத் திரும்பிவிட்டான். [QBR]
10. எனவே கர்த்தாவே, என்னிடம் இரக்கமாயிரும். [QBR2] நான் குணமாகி எழுந்திருக்கட்டும், அவர்களுக்குப் பதில் அளிப்பேன். [QBR]
11. கர்த்தாவே, என் பகைவர்கள் என்னை காயப்படுத்தாதிருக்கட்டும். [QBR2] அப்போது நீர் என்னை ஏற்றுக்கொண்டீர் என்பதை அறிவேன். [QBR]
12. நான் களங்கமற்றிருந்தேன். நீர் எனக்கு ஆதரவளித்தீர். [QBR2] என்னை எழுந்திருக்கப் பண்ணி, என்றென்றும் உமக்குச் சேவை செய்யப்பண்ணும்.
13. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை வாழ்த்துங்கள். [QBR2] இவர் இருந்தவரும் இருக்கிறவருமானவர். ஆமென்! ஆமென்! [PE]