1. {#2இராகத் தலைவனுக்கு தாவீதின் பாடல் } [QS]கர்த்தரைக் கூப்பிட்டேன், அவர் என்னைக் கேட்டார். [QE][QS2]அவர் என் கூப்பிடுதலைக் கேட்டார். [QE]
2. [QS]அழிவின் குழியிலிருந்து கர்த்தர் என்னைத் தூக்கியெடுத்தார். [QE][QS2]சேற்றிலிருந்து என்னைத் தூக்கினார். [QE][QS]என்னைத் தூக்கியெடுத்துப் பாறையின் மீது வைத்தார். [QE][QS2]என் பாதங்களை உறுதியாக்கினார். [QE]
3. [QS]தேவனை வாழ்த்திப் பாடும் புதுப்பாடலைக் கர்த்தர் என் வாயில் வைத்தார். [QE][QS2]எனக்கு நிகழ்ந்த காரியங்களைப் பலர் காண்பார்கள். [QE][QS2]அவர்கள் தேவனைத் தொழுதுகொள்வார்கள். அவர்கள் கர்த்தரை நம்புவார்கள். [QE]
4. [QS]ஒருவன் கர்த்தரை நம்பினால் அவன் உண்மையாகவே மகிழ்ச்சியோடிருப்பான். [QE][QS2]பிசாசுகளிடமும், பொய்த்தெய்வங்களிடமும் உதவி கேட்டு செல்லாத ஒருவன் உண்மையாகவே மகிழ்ச்சியோடிருப்பான். [QE]
5. [QS]எனது தேவனாகிய கர்த்தாவே, நீர் அற்புதமான காரியங்கள் பலவற்றைச் செய்திருக்கிறீர்! [QE][QS2]எங்களுக்காக அற்புதமான திட்டங்களை வகுத்திருக்கிறீர்! [QE][QS]கர்த்தாவே, உம்மைப் போன்றோர் வேறெவருமில்லை! [QE][QS2]நீர் செய்த காரியங்களைக் குறித்து நான் மீண்டும் மீண்டும் கூறுவேன். [QE][QS2]அவை எண்ணிலடங்காதவை. [QE][PBR]
6. [QS]கர்த்தாவே, நீர் இவற்றை எனக்குத் தெளிவாக்கினீர்! [QE][QS2]உமக்குப் பலிகளோ, தானியக் காணிக்கைகளோ தேவையில்லை. [QE][QS2]உமக்குத் தகன பலிகளோ, பாவப்பரிகார பலிகளோ தேவையில்லை. [QE]
7. [QS]எனவே நான், “இதோ, நானிருக்கிறேன் என்னை ஏற்றுக்கொள்ளும். [QE][QS2]நான் வருகிறேன் புத்தகத்தில் என்னைக் குறித்து இது எழுதப்பட்டிருக்கிறது. [QE]
8. [QS]என் தேவனே, நீர் விரும்புவதைச் செய்ய நான் விரும்புகிறேன். [QE][QS2]உமது போதனைகளை நான் படித்திருக்கிறேன். [QE]
9. [QS]பலர் கூடிய சபையில் உமது நன்மையின் நற்செய்தியை நான் எடுத்துரைப்பேன். [QE][QS2]நான் வாய் மூடி மௌனியாயிருப்பதில்லை. [QE][QS2]கர்த்தாவே, நீர் அதை அறிவீர். [QE]
10. [QS]கர்த்தாவே, உமது நன்மைகளை நான் கூறுவேன். [QE][QS2]அவற்றை என் இருதயத்தில் மறைத்து வைக்கமாட்டேன். [QE][QS]கர்த்தாவே, மீட்படைவதற்கு ஜனங்கள் உம்மை நம்பலாமென நான் அவர்களுக்குக் கூறுவேன். [QE][QS2]சபையின் ஜனங்களுக்கு நான் உமது தயவையும் உண்மையையும் மறைக்கமாட்டேன். [QE]
11. [QS]கர்த்தாவே, என்னிடமிருந்து உமது இரக்கத்தை மறைக்காதேயும். [QE][QS2]உமது தயவும் உண்மையும் என்னை எப்பொழுதும் பாதுகாக்கட்டும்” என்றேன். [QE][PBR]
12. [QS]தீயோர் என்னைச் சூழ்ந்திருக்கிறார்கள். [QE][QS2]அவர்கள் எண்ணிக்கைக் கடங்காதவர்கள். [QE][QS]என் பாவங்கள் என்னைப் பிடித்தன, நான் அவற்றினின்று தப்ப இயலாது. [QE][QS2]என் தலைமுடியைக் காட்டிலும் அதிக பாவங்கள் என்னில் உள்ளன. [QE][QS2]என் தைரியத்தை இழந்துபோனேன். [QE]
13. [QS]கர்த்தாவே, என்னிடம் ஓடி வந்து என்னைக் காப்பாற்றும்! [QE][QS2]கர்த்தாவே, விரைந்து வந்து எனக்கு உதவும். [QE]
14. [QS]அத்தீயோர் என்னைக் கொல்ல முயலுகிறார்கள். [QE][QS2]கர்த்தாவே, அவர்கள் அவமானமும் ஏமாற்றமும் அடையச் செய்யும். [QE][QS]அவர்கள் என்னைக் காயப்படுத்த விரும்புகிறார்கள். [QE][QS2]அவர்கள் அவமானத்தால் ஓடிப்போகட்டும். [QE]
15. [QS]அத்தீயோர் என்னைக் கேலி செய்கிறார்கள். [QE][QS2]அவர்கள் பேசமுடியாதபடி தடுமாறச் செய்யும். [QE]
16. [QS]ஆனால் உம்மை நோக்கிப் பார்க்கும் ஜனங்கள் மகிழ்ச்சி அடையட்டும், அந்த ஜனங்கள் எப்போதும், “கர்த்தரைத் துதிப்போம்” என்று கூறட்டும். [QE][QS2]உம்மால் காப்பாற்றப்பட்டதால் அந்த ஜனங்கள் உம்மை நேசிக்கிறார்கள். [QE][PBR]
17. [QS]ஆண்டவரே, நான் ஏழையும் உதவியற்றவனுமான மனிதன். [QE][QS2]எனக்கு உதவும், என்னைக் காப்பாற்றும். [QE][QS]என் தேவனே, மிகவும் தாமதியாதேயும். [QE]