1. {இராகத் தலைவனுக்கு தாவீதின் பாடல்} [PS] கர்த்தரைக் கூப்பிட்டேன், அவர் என்னைக் கேட்டார். [QBR2] அவர் என் கூப்பிடுதலைக் கேட்டார். [QBR]
2. அழிவின் குழியிலிருந்து கர்த்தர் என்னைத் தூக்கியெடுத்தார். [QBR2] சேற்றிலிருந்து என்னைத் தூக்கினார். [QBR] என்னைத் தூக்கியெடுத்துப் பாறையின் மீது வைத்தார். [QBR2] என் பாதங்களை உறுதியாக்கினார். [QBR]
3. தேவனை வாழ்த்திப் பாடும் புதுப்பாடலைக் கர்த்தர் என் வாயில் வைத்தார். [QBR2] எனக்கு நிகழ்ந்த காரியங்களைப் பலர் காண்பார்கள். [QBR2] அவர்கள் தேவனைத் தொழுதுகொள்வார்கள். அவர்கள் கர்த்தரை நம்புவார்கள். [QBR]
4. ஒருவன் கர்த்தரை நம்பினால் அவன் உண்மையாகவே மகிழ்ச்சியோடிருப்பான். [QBR2] பிசாசுகளிடமும், பொய்த்தெய்வங்களிடமும் உதவி கேட்டு செல்லாத ஒருவன் உண்மையாகவே மகிழ்ச்சியோடிருப்பான். [QBR]
5. எனது தேவனாகிய கர்த்தாவே, நீர் அற்புதமான காரியங்கள் பலவற்றைச் செய்திருக்கிறீர்! [QBR2] எங்களுக்காக அற்புதமான திட்டங்களை வகுத்திருக்கிறீர்! [QBR] கர்த்தாவே, உம்மைப் போன்றோர் வேறெவருமில்லை! [QBR2] நீர் செய்த காரியங்களைக் குறித்து நான் மீண்டும் மீண்டும் கூறுவேன். [QBR2] அவை எண்ணிலடங்காதவை.
6. கர்த்தாவே, நீர் இவற்றை எனக்குத் தெளிவாக்கினீர்! [QBR2] உமக்குப் பலிகளோ, தானியக் காணிக்கைகளோ தேவையில்லை. [QBR2] உமக்குத் தகன பலிகளோ, பாவப்பரிகார பலிகளோ தேவையில்லை. [QBR]
7. எனவே நான், “இதோ, நானிருக்கிறேன் என்னை ஏற்றுக்கொள்ளும். [QBR2] நான் வருகிறேன் புத்தகத்தில் என்னைக் குறித்து இது எழுதப்பட்டிருக்கிறது. [QBR]
8. என் தேவனே, நீர் விரும்புவதைச் செய்ய நான் விரும்புகிறேன். [QBR2] உமது போதனைகளை நான் படித்திருக்கிறேன். [QBR]
9. பலர் கூடிய சபையில் உமது நன்மையின் நற்செய்தியை நான் எடுத்துரைப்பேன். [QBR2] நான் வாய் மூடி மௌனியாயிருப்பதில்லை. [QBR2] கர்த்தாவே, நீர் அதை அறிவீர். [QBR]
10. கர்த்தாவே, உமது நன்மைகளை நான் கூறுவேன். [QBR2] அவற்றை என் இருதயத்தில் மறைத்து வைக்கமாட்டேன். [QBR] கர்த்தாவே, மீட்படைவதற்கு ஜனங்கள் உம்மை நம்பலாமென நான் அவர்களுக்குக் கூறுவேன். [QBR2] சபையின் ஜனங்களுக்கு நான் உமது தயவையும் உண்மையையும் மறைக்கமாட்டேன். [QBR]
11. கர்த்தாவே, என்னிடமிருந்து உமது இரக்கத்தை மறைக்காதேயும். [QBR2] உமது தயவும் உண்மையும் என்னை எப்பொழுதும் பாதுகாக்கட்டும்” என்றேன்.
12. தீயோர் என்னைச் சூழ்ந்திருக்கிறார்கள். [QBR2] அவர்கள் எண்ணிக்கைக் கடங்காதவர்கள். [QBR] என் பாவங்கள் என்னைப் பிடித்தன, நான் அவற்றினின்று தப்ப இயலாது. [QBR2] என் தலைமுடியைக் காட்டிலும் அதிக பாவங்கள் என்னில் உள்ளன. [QBR2] என் தைரியத்தை இழந்துபோனேன். [QBR]
13. கர்த்தாவே, என்னிடம் ஓடி வந்து என்னைக் காப்பாற்றும்! [QBR2] கர்த்தாவே, விரைந்து வந்து எனக்கு உதவும். [QBR]
14. அத்தீயோர் என்னைக் கொல்ல முயலுகிறார்கள். [QBR2] கர்த்தாவே, அவர்கள் அவமானமும் ஏமாற்றமும் அடையச் செய்யும். [QBR] அவர்கள் என்னைக் காயப்படுத்த விரும்புகிறார்கள். [QBR2] அவர்கள் அவமானத்தால் ஓடிப்போகட்டும். [QBR]
15. அத்தீயோர் என்னைக் கேலி செய்கிறார்கள். [QBR2] அவர்கள் பேசமுடியாதபடி தடுமாறச் செய்யும். [QBR]
16. ஆனால் உம்மை நோக்கிப் பார்க்கும் ஜனங்கள் மகிழ்ச்சி அடையட்டும், அந்த ஜனங்கள் எப்போதும், “கர்த்தரைத் துதிப்போம்” என்று கூறட்டும். [QBR2] உம்மால் காப்பாற்றப்பட்டதால் அந்த ஜனங்கள் உம்மை நேசிக்கிறார்கள்.
17. ஆண்டவரே, நான் ஏழையும் உதவியற்றவனுமான மனிதன். [QBR2] எனக்கு உதவும், என்னைக் காப்பாற்றும். [QBR] என் தேவனே, மிகவும் தாமதியாதேயும். [PE]